பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவிற்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மும்பை: பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவிற்கு (Asha Bhosle) மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ராமராஜனின் செண்பகமே செண்பகமே பாடல்.. நடிகர் ரஜினிகாந்த் - நயன்தாரா நடித்த சந்திரமுகி படத்தில், கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் பாடல் உள்ளிட்டவற்றால் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சிம்மாசனமிட்டு வீற்றிருப்பவர் ஆஷா போஸ்லே..
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை அவருக்கு திடீரென ஏற்பட்ட கார்டியாக் அரஸ்ட் காரணமாக மும்பையில் உள்ள பிரெச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கவலைக்கிடமாக இருப்பதாக..
அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், ஆஷா போஸ்லே குடும்பத்தினர் தரப்பில் இருந்தோ அல்லது மருத்துவமனை தரப்பில் இருந்தோ இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
92 வயதான ஆஷா போஸ்லே ஆஷா போஸ்லே தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் ராமராஜனின் செண்பகமே செண்பகமே பாடல்.. நடிகர் ரஜினிகாந்த் நயந்தாரா நடித்த சந்திரமுகி படத்தில், கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் பாடல், செப்டம்பர் மாதம் உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.
பத்ம விபூஷன், தாதாசாகேப் பால்கே விருது
ஆஷா போஸ்லே மெய்மறக்க வைத்த பல பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். "Dum Maro Dum", "Piya Tu Ab To Aaja", "Chura Liya Hai Tumne" போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. தனது தனித்துவமான குரலால், பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் பாணியின் மூலம், திரையுலகில் எக்காலத்திற்கும் புகழ் மிக்க பாடல்களை கொடுத்துள்ளர்.
இந்திய இசைத்துறையில் அவர் அளித்த மாபெரும் பங்களிப்புக்காக, தாதாசாகேப் பால்கே விருது மற்றும் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல உயரிய விருதுகள் ஆஷா போஸ்லேக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆஷா போஸ்லே 1990 கள் மற்றும் 2000 களில் தனது கேரியரில் மீண்டும் ஒரு ஏற்றத்தை சந்தித்தார். நவீன, பாப் கலந்த இசை பாணியை தழுவிய அவர், 90 கிட்ஸ் ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றார். ஏ ஆர் ரகுமானுடன் இணைந்து பணியாற்றிய "தன்ஹா தன்ஹா", "ரங்கீலா ரே" போன்ற பாடல்கள் பெரும் புகழ்பெற்றன. அதேபோல், "ராத் அகேலி ஹை" ரீமிக்ஸ் மற்றும் "ஜரா சா ஜூம் லூன் மெயின்" போன்ற பாடல்கள் பாலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தன.
ஹார்ட் அட்டாக் என்றால் என்ன?
ஹார்ட் அட்டாக்கிற்கும் கார்டியாக் அரஸ்ட்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பொதுவாக இதயத் தமனிகள் ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட ரத்தத்தை இதயத்துக்கு கொண்டு செல்லும். ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இதயத் தமனிகளில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டால் ஏற்படுவது ஹார்ட் அட்டாக்.. ஹார்ட் அட்டாக் ஏற்படும்போது இதயத்துக்குச் செல்லும் ரத்தம் தடைபட்டாலும் இதயம் தொடர்ந்து துடித்துக்கொண்டுதான் இருக்கும். இந்த பாதிப்புக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால் அதில் இருந்து மீண்டு வந்துவிட முடியும்.
கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன?
கார்டியாக் அரெஸ்ட் (Cardiac Arrest) என்பது இதயம் திடீரெனத் துடிப்பதை நிறுத்தி, உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை செலுத்தும் திறனை இழக்கும் ஒரு தீவிரமான மருத்துவ நிலையாகும். கார்டியாக் அரெஸ்ட் என்பது உடலில் எந்தவொரு எச்சரிக்கையையும் காட்டாமல் திடீரென்று ஏற்படுவது. இதயத்தில் ஏற்படும் மின் இடையூறுகளே கார்டியாக் அரெஸ்ட்டுக்கு காரணம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
இந்த இடையூறு, இதயத் துடிப்பில் ஆதிக்கம் செலுத்தி, அதன் செயல் தன்மையில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. "கார்டியாக் அரெஸ்டை மரணத்திற்கு, முந்தைய கடைசி கட்டம் என்று கூறலாம் என்பது மருத்துவ நிபுணர்கள் கருத்தாக உள்ளது. அதாவது கார்டியாக் அரஸ்ட் என்பது மிகவும் ஆபத்தான ஒரு உடல் நிலை பாதிப்பு ஆகும்.












Click it and Unblock the Notifications