Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சினிமாவை சீரியஸா எடுத்துக்கல.. பட்டாதான் புரியுது.. ’ரெட்ட தல’ பட விழாவில் சித்தி இத்னானி பளிச்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள 'ரெட்ட தல' திரைப்படம் இந்த மாதம் டிசம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த ரெட்ட தல திரைப்படம் தற்போது ஒரு வாரம் தாமதமாக வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய ஹீரோயின் சித்தி இத்னானி, "தான் சினிமாவை சீரியஸாக எடுக்கவில்லை என்றும் இப்போதுதான் அது புரிகிறது என்றும் பேசினார்.

Retta Thala heroine Siddhi Idnani opens up about her struggles in Cinema
Photo Credit:

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற பிரபலங்களும் அருண் விஜய்யின் உழைப்பு பற்றியும் 'ரெட்ட தல' படம் எப்படி வந்துள்ளது என்பது குறித்தும் பேசியுள்ளனர்.

ஏ ஆர் முருகதாஸோட டைட்டில்: திருக்குமரன் என்னுடைய உதவி இயக்குனர். கஜினி, துப்பாக்கி படத்தில் பணி புரிந்தார் எனக்கு மிகவும் பிடித்தமானவர். மிகவும் திறமைசாலி, இந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது தான். அதைக் கேட்டதும் கண்டிப்பாக கொடுப்பேன் என்று அவருக்கு தெரியும். இந்தப் படத்திற்கு அது சரியாக பொருந்தியுள்ளது. கூடிய விரைவில் என்னுடைய தயாரிப்பிலும் ஒரு படம் இயக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அருண் விஜய் 15 வருடங்களுக்கு பின்னும் அதே போல, இன்னும் அப்படியே இளமையாக இருக்கிறார். மிகப்பெரும் ஆச்சர்யம் தான். அவர் ஒரு கடின உழைப்பாளி என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. தமிழ் சினிமாவில் அவருக்கு இன்னும் பெரிய இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன். படத்தில் பணி புரிந்த அத்தனை நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் படத்திற்கு பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர், கண்டிப்பாக பெரியவெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி.

Retta Thala heroine Siddhi Idnani opens up about her struggles in Cinema
Photo Credit:

சினிமாவை சீரியஸா எடுத்துக்கல: கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சித்தி இத்னானி தான் ரெட்ட தல படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சித்தி இத்னானி ரொம்பவே வெளிப்படையாக பேசியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. "என்னுடைய முதல் படத்திற்கு பிறகு நான் கொஞ்சம் ரிலாக்ஸாக மாறி விட்டேன் என்று நினைக்கிறேன். சினிமாவை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த எண்ணத்தை இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விட்டு விட்டேன். இனிமேல் தேடலுடன் பணியாற்ற போகிறேன். இந்த படத்தில் எனக்கு மிகவும் முக்கிய கதாபாத்திரம். அதுவே என்னை இங்கு நிறுத்தியுள்ளது. கண்டிப்பாக அது உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குனர் திரு சாருக்கு நன்றி. அருண் விஜய் சாருக்கும் நன்றி. அவருடன் பணி புரிந்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் பணி புரிந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் பணி புரிந்தோம். நானும் தமிழ் கற்றுக் கொண்டே இருக்கிறேன். இன்னும் சில நாட்களில் முழுவதுமாக கற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன். இந்த படம் அனைவருக்கும் ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

நடிகர் அருண் விஜய் பேச்சு: திரு சார் அதிகம் பேசுவார் என்று நினைத்தேன், ஆனால் படம் பேசும் என்று சுருக்கமாக பேசியுள்ளார். இந்தப் படத்தின் கதை என்னை வெகுவாக கவர்ந்தது. மேலும் எனக்கு சவாலாக இருந்தது. அப்போதே நான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். இந்தப் படத்தின் முக்கிய தூணாக இருந்தது எடிட்டர் ஆண்டனி சார். படம் படு வேகமாக இருந்தது, அதை சரியாக கட் செய்து கொடுத்துள்ளார். படத்தில் பாடல்களும் காட்சிகளும் உயர்ந்த தரத்தில் இருக்கும். நடிகை சித்தி இத்னானி தனது முழு உழைப்பைக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா இதற்கு பின் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்குமென நம்புகிறேன். இந்தப் படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது நன்றாகவே வந்துள்ளது. கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும். தனுஷ் சார் ஒரு பாடலைப் பாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்படத்திற்காக அனைவரும் பெரும் உழைப்பு கொடுத்துள்ளோம், கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல், உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய அளவில் ஜாம்பவானாக கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் திரை வாழ்க்கையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த மாதம் தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரிய திரைப்படமாக ரெட்ட தல மாறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+