Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவராஜ்குமார் புனித் ராஜ்குமார் பற்றி கேட்டதுமே.. அந்த கடைசி மனைவியின் கை பிடித்து.. சபாஷ் சிவண்ணா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ஆண்டனியை பொறுத்தவரை மிகவும் அழகாக நடிக்கக்கூடியவர், எப்போதுமே நான் அவரது ஃபேன்.. பிச்சைக்காரன் படத்தில் நன்றாக நடித்திருந்தார்.. எனக்கும் அந்த படத்தின் வாய்ப்பு கன்னடத்தில் வந்தது.. ஆனால் அம்மா சென்டிமென்ட் அதிகமாக இருந்தது. எந்த அளவுக்கு என்னால் அதில் கனெக்ட் ஆக முடியும் என்று தெரியாததால், அதில் நடிக்க முடியவில்லை என்று பிரபல நடிகர் சிவராஜ்குமார் கூறியிருக்கிறார்.

கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டார் நடிகராக திகழ்பவர் சிவராஜ்குமார். ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் வெறும் டிஷ்யூ பெப்பரை வைத்து மாஸ் காட்டி, கோலிவுட் ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பினை பெற்றவர். இப்போது அதன் 2ம்பாகத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

Shivarajkumar Puneeth Rajkumar Shivanna s

சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் நடிப்பில் '45' என்ற படம் உருவாகியுள்ளது.. இந்த படம் வரும் 25ம் தேதி பான் இந்திய அளவில் ரிலீசாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்..

மக்களுக்கு நல்லது செய்யலாம்

அப்போது சிவராஜ்குமார் செய்தியாளர்கள் மத்தியில் தமிழில் பேசி, பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.. அவரது பேச்சுக்கள் தற்போது இணையத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் முதல் விஜய் வரை சினிமா பிரபலங்கள் பலரும் அரசியலுக்கு வந்துள்ளார்கள். ஆனால் கர்நாடகாவில் அப்படி யாரும் அரசியலுக்கு வருவதில்லையே ஏன் என்று கேட்கிறீர்கள்.. மக்களுக்கு நல்லது செய்ய எதற்காக அரசியலுக்கு வர வேண்டும். நடிகராக இருந்துக்கொண்டே மக்களுக்கு நல்லது செய்யலாம். அதற்கு அதிகாரம் அவசியமில்லை. இது என்னுடைய பணம் என்றபோது யாரிடமும் பராபட்சம் பார்க்காமல் உதவி செய்யலாம்.

மனைவியின் கையை பிடித்து..

விஜய் ஆண்டனியை பொறுத்தவரை மிகவும் அழகாக நடிக்கக்கூடியவர், எப்போதுமே நான் அவரது ஃபேன்.. பிச்சைக்காரன் படத்தில் நன்றாக நடித்திருந்தார்.. எனக்கும் அந்த படத்தின் வாய்ப்பு கன்னடத்தில் வந்தது.. ஆனால் அம்மா சென்டிமென்ட் அதிகமாக இருந்தது. எந்த அளவுக்கு என்னால் அதில் கனெக்ட் ஆக முடியும் என்று தெரியாததால், அதில் நடிக்க முடியவில்லை..

நான் புற்றுநோய் பாதித்து சிகிச்சைக்கு போகும்போது மிகவும் எமோஷனல் ஆயிட்டேன்.. என் ரசிகர்கள், குடும்பத்தினரின் கண்ணீரை பார்த்து எனக்கும் கண்ணீர் வழிந்தது.. நாம திரும்பி வரப்போறோமா? இல்லையா? என்றே தெரியாமல் பயந்துபோயிட்டேன்..

டிசம்பர் 24 காலையில் ஆபரேஷனுக்கு மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தேன்.. அந்த கடைசி நிமிடத்தில் என்னுடைய மனைவியின் முகத்தை பார்த்து, அவரது கையை பிடித்தேன்.. திரும்ப உன் கையை பிடிப்பேனா? என்று எனக்கு தெரியாது என்று மட்டும் சொன்னேன்.

துட்டு வரும் போகும்

அடுத்த 5 மணி நேரத்துக்கு எனக்கு எதுவுமே தெரியவில்லை.. ஆனால் டாக்டர்கள் கடவுள் போன்றவர்கள்.. என்னை குணப்படுத்திவிட்டார்கள். ஆனாலும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் 2, 3 நாட்கள் கழித்துதான் என்னால் நார்மலாக முடிந்தது.. அந்த நேரத்தில் யார் போன் செய்தாலும் உடனே என் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிடும்.

எவ்வளவு வேண்டுமானாலும் துட்டு சம்பாதிக்கலாம், துட்டு வரும் போகும், ஆனால் இந்த அன்பை எப்போது சம்பாதிப்பேன்? எனக்கு கிடைத்தது போல வேறு யாருக்கு இப்படியான அன்பு கிடைக்கும். அனைவருக்குமே நன்றி சொல்கிறேன்.

தம்பி புனித் ராஜ்குமார்

என் தம்பி புனித் ராஜ்குமாருக்கு 46 வயசுதான்.. வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.. இப்போதெல்லாம் 20, 18 வயசிலேயே இளம் மரணங்கள் நடக்கின்றன.. அந்த நேரம் முடிந்ததுமே எல்லாருமே கிளம்பி விடுகிறார்கள்..

புனித் குழந்தையில் இருந்தே, எப்போதுமே என் அப்பா, அம்மாவுடனேயேதான் இருப்பான்.. எங்களைவிட அதிகமாக பெற்றோரிடம் இருந்தது புனித்தான்.. ஒரு ஷூட்டிங் விடாமல் அப்பாவுடன் சென்றுவிடுவான்.. தனியாகத்தான் படித்தானே தவிர, ஸ்கூல், காலேஜூக்கு புனித் போகவில்லை..

சின்ன வயசுலேயே ஸ்டார் ஆயிட்டான், சின்ன வயசிலேயே நேஷனல் அவார்டு வந்துவிட்டது, ஒருவேளை அம்மா, அப்பாவுக்கு புனித் தேவைப்பட்டிருக்கான் போல, அதனால்தான் சின்ன வயசிலேயே அவனை கூப்பிட்டுக்கிட்டாங்க போல" என்றெல்லாம் உருக்கமாக பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+