"வந்துடு மாரியம்மா" அஷ்டாவதானி டி.ராஜேந்தர்.. ரஜினிகாந்த்துக்கு கிடைத்த ஸ்பெஷல் பவர்: பிரபலம்
சென்னை: விஜய் அரசியலை ரஜினியுடன் ஒப்பிட முடியாது.. விஜய்க்கு வயது உள்ளது.. சின்ன சின்ன அடிகளை அரசியலில் வாங்குவதற்கும், எழுந்து ஓடுவதற்கும், களத்தில் அத்தனையும் எதிர்கொள்வதற்கும் வயது உள்ளது.. இது விஜய்க்கு பிளஸ் பாயிண்ட் ஆகும்" என்று டைரக்டர் பாரதி கண்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன் டி.ராஜேந்தர் பற்றியும் பேட்டி ஒன்றில் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
Wow Tamizhaa என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல இயக்குனர் பாரதி கண்ணன், "ரஜினிகாந்த்தை பொறுத்தவரை ஒரு சித்தர் போல.. அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேட்கிறார்கள்?

சூப்பர் ஸ்டார் பட்டம் அவரை போல வேறு யாராலும் வாங்க முடியுமா? கமல்ஹாசனே ரஜினிக்கு அடுத்த இடத்தில்தானே இருக்கிறார்.. பிரதமரிடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்டால் உடனே தந்துடுவாரே.. அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்..
சித்தர் ரஜினிகாந்த்
அரசியலில் ஏதோ ஒரு வேகத்தில் இறங்கிவிட்டார்.. பிறகுதான் அதன் பின்விளைவுகளை பற்றி ரஜினிகாந்த் யோசித்தார்..
"இந்த அரசியலில் இறங்கி நாம் எப்படி சமாளிக்க போகிறோம்? பொய்களை சொல்லணுமே, உண்மையா வாழ முடியும்? உடனிருப்பவர்கள் இதனால் திருப்தி அடைவார்களா? வயதும் ஆகிவிட்டதே.. உடல்நலக்குறைபாடும் உள்ளதே.. மக்களை ஏமாற்றி அரசியலுக்கு வரக்கூடாது" என்றெல்லாம் மிகப்பெரிய ஞானம் பிறந்ததால், அத்துடன் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகிவிட்டார்..
விஜய்யின் பிளஸ் பாயிண்ட்
இதுவே சாதாரண நபராக இருந்தால் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்கள்.. ரஜினிகாந்த் ஒரு ஞானியாக இருப்பதால்தான் இப்படியொரு முடிவை எடுத்தார். பின்னால் நடக்கக்கூடியதை முன்கூட்டியே தெரிந்து வைத்துள்ளார்.
அதற்காக விஜய் அரசியலை ரஜினியுடன் ஒப்பிட முடியாது.. விஜய்க்கு வயது உள்ளது.. சின்ன சின்ன அடிகளை அரசியலில் வாங்குவதற்கும், எழுந்து ஓடுவதற்கும், களத்தில் அத்தனையும் எதிர்கொள்வதற்கும் வயது உள்ளது.. இது விஜய்க்கு பிளஸ் பாயிண்ட் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.
டி.ராஜேந்தர் அஷ்டாவதானி
தொடர்ந்து டி.ராஜேந்தர் பற்றி பேசிய பாரதி கண்ணன், "என்னுடைய பண்ணாரி அம்மன் படத்துக்காக இசையமைப்பாளராக டி.ராஜேந்தரை ஒப்பந்தம் செய்திருந்தேன்.. காதல் பாடலுக்கு ஹிட்டானவரை, பக்தி பாடல்களுக்கு இசையமைத்தார்.. வாழ்க்கையில் ஒருதலை ராகம் என்ற ஒரு படம் அவருக்கு போதும்.. காலம் உள்ளவரை பேசிக் கொண்டே இருக்கும்.. அற்புதமான பாடல்கள் அமைந்த படம்.. மிகப்பெரிய கலைஞர் டி.ராஜேந்தர்..
ஒரு தலை ராகம் படத்தின் தயாரிப்பாளர் ராஜாராம்.. அவர் ஒரு வழக்கறிஞர்.. அவருடன் நல்ல நெருங்கிய நட்பாக இருந்தார் டி.ராஜேந்தர்..
விஜயசாந்தியை வைத்து பண்ணாரி அம்மன் படம் எடுக்கலாம் என்றபோது, டி.ராஜேந்தரை வைத்து இசையமைத்து கொள்ளலாம் என்று சொன்னதே அவர்தான்.. மிகப்பெரிய கலைஞன், அஷ்டாவதானி, நவரச நாயகன் எல்லாமே டி.ராஜேந்தர்தான்.. எனவே அவருடன் பணிபுரிய உடனே ஒப்புக் கொண்டேன்.. அதிகமாகவே உணர்ச்சி வசப்படக்கூடிய மியூசிக் டைரக்டர்..
வந்துடு மாரியம்மா
பேசும்போதே கோபம், ஆதங்கம், அழுகை, மகிழ்ச்சி, என அனைத்தும் வெளிப்படும் சிறந்த கலைஞர்.. யாராவது ஒருவர் காபி கொண்டு வந்தால், காபியை பற்றி உடனே பாட்டு போட ஆரம்பித்துவிடுவார்.. சாப்பாடு கொண்டு என்றால், சாப்பாட்டை பற்றி உடனே பாட்டை பாடிவிடுவார். அவரிடம் பாட்டு வாங்குவது மிகவும் ஈஸி,.
பண்ணாரி அம்மன் படத்தில் மாரியம்மனை வேண்டி ஒரு பாட்டு தேவைப்பட்டது.. மற்றவர்களாக இருந்தால், உலகம்மாள், தாயே நீயே வரவேண்டும் மாரியம்மா என்றெல்லாம் எழுதி பாடுவார்கள்.. ஆனால் டி.ராஜேந்தர் ஸ்டிரைட்டாகவே, வந்துடு "வந்துடு மாரியம்மா" என்று பாடி விட்டார்.. அந்த படத்தின் மூலம் பணியாற்றியதால், அவருடன் எனக்கு நட்பு கிடைத்தது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications