விஜய்யுடன் டான்ஸ்.. என் பொண்ணு குழந்தைன்னு கூட பார்க்காமல் இப்படி பேசுறாங்க! பாடகர் வேல்முருகன் வேதனை
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 3ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் பாடகர் வேல்முருகன் பாடிய பாடல் அரசியல் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த விவகாரம் குறித்து அவர் அளித்துள்ள சமீபத்திய நேர்காணல் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.

விழாவில் பாடிய வரிகள் மூலம் சர்ச்சை
பிப்ரவரி 2ஆம் தேதி பனையூரில் நடைபெற்ற கட்சியின் ஆண்டு விழாவில் வேல்முருகன் கச்சேரி நடத்தினார். அப்போது விஜயை புகழ்ந்து பாடிய பாடல்களில் "கொள்ளையடித்த கூட்டம்" என்ற வரிகள் இடம்பெற்றது. இது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக கூறி எதிர்ப்புகள் எழுந்தன.
பாடல் வரிகளை மாற்றி பாடியதாகவே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, "நான் பாடியது ஒரு மேடை நிகழ்ச்சி மட்டுமே; யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்" என்று வேல்முருகன் விளக்கம் அளித்தார்.
மாநில விருது விழாவில் நடந்த சம்பவம்
பிப்ரவரி 13ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவில், உதயநிதி ஸ்டாலின் கையால் வேல்முருகன் விருது பெற்றார்.
அப்போது சேகர்பாபு, "உங்களோட சமீபத்திய பாடல் நிகழ்ச்சியை பார்த்தோம்... நல்லா இருந்தது... ஆனா எங்களுக்கு உங்க மேல வருத்தம் இருக்கு" என்று கூறியதாகவே வேல்முருகன் தெரிவித்தார்.
இதற்கு பதில் சொல்ல யோசித்துக் கொண்டிருந்தபோது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் "எங்கு வருமானம் கிடைக்கிறதோ அங்கு போக வேண்டியது தான்" என்று கூறியதாகவும், பின்னர் "நீங்க எல்லாருக்கும் பொதுவானவர் எனக்கு தெரியும்" என்று கூறி சூழலை சீராக்கியதாகவும் அவர் பேசி இருந்தார்.
சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை
உதயநிதியும் சேகர்பாபுவும் தனக்கு முன்பே நன்கு பழக்கம் இருப்பதால் அவர்கள் பேசியதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், மேடையில் அப்படிப் பேசப்பட்ட தருணம் சங்கடமாக இருந்ததாக வேல்முருகன் கூறினார்.
"என்னை நம்பி வேலை செய்யும் கலைஞர்களுக்கு மேடை கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் அந்த நிகழ்ச்சியில் பாடினேன். அதற்கு அப்பாற்பட்ட அரசியல் நோக்கம் எதுவும் இல்லை" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மகளை ட்ரோல் செய்ததற்கு வேதனை
மேலும் தனது மகள் விஜயின் தீவிர ரசிகை என்பதால் அவளது ஆசையை நிறைவேற்ற அந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றதாக கூறிய வேல்முருகன், விஜயுடன் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலான பிறகு சமூக வலைதளங்களில் வந்த அவதூறு கருத்துகள் மனதை மிகவும் பாதித்ததாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
கில்லி vs துணிவு.. ரீ ரிலீசிலும் அசால்ட் காட்டிய விஜய்.. கிட்ட கூட நெருங்காத அஜித் படம்! வசூல் என்ன?
சிலர் கமெண்ட்ஸ்களில் மாமா உன் பொண்ணை கொடு என்று போடுறாங்க.. இதெல்லாம் வருத்தமா இருக்கு. "ஒரு குழந்தையை கூட விடாமல் ட்ரோல் செய்வது மிகவும் வேதனையாக இருக்கிறது" என்று அவர் உணர்ச்சி வசப்பட்டார்.
மொத்தத்தில், ஒரு மேடை நிகழ்ச்சியில் பாடிய பாடல் அரசியல் சர்ச்சையாக மாறி, அதே விவகாரம் மாநில விருது விழா மேடையிலும் பேசப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications