கில்லி vs துணிவு.. ரீ ரிலீசிலும் அசால்ட் காட்டிய விஜய்.. கிட்ட கூட நெருங்காத அஜித் படம்! வசூல் என்ன?
சென்னை: கடந்த வாரம் வெள்ளிக்கிழமை விஜய்யின் கில்லி படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இதேபோல் அஜித்தின் துணிவு படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டதால் ரசிகர்கள் இடையே தற்போது எந்த படம் கலெக்சன் அதிகமாக எடுத்துள்ளது என எதிர்பார்த்து இருந்த நிலையில் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
சென்சார் பிரச்சனையில் சிக்கி விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கில்லி படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆனது.

ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆன கில்லி - துணிவு
ஜனநாயகன் தான் வரவில்லை.. கில்லியையாவது கொண்டாடி தீர்ப்போம் என்று விஜய் ரசிகர்கல் தியேட்டர்களுக்கு படையெடுக்க தொடங்கினர். ஏற்கனவே ரீ ரிலீஸ் செய்து பெரிய வசூலை அள்ளிய நிலையில் மீண்டும் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ ரிலீஸ்தானா? என்று சந்தேகப்படும் அளவிற்கு விஜய்யின் கில்லி படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
இதேபோல, அஜித்தின் துணிவு படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ ரிலிஸ் என்றாலும் டாப் நட்சத்திரங்கள் நடித்த படம் என்பதால் தியேட்டர்கள் களை கட்டியது. ரி ரீலிஸில் விஜய் - அஜித் படங்கள் மோதியதால் பாக்ஸ் ஆபிஸ் ரேசில் தூள் கிளப்ப போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.
எந்த படம் டாப் கலெக்சன்?
துணிவு படத்தை பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் வெளியாகியிருந்தது. தற்போது விஜய்யின் ஜனநாயகன் படத்தை இயக்கியுள்ள ஹெச். வினோத் இந்த படத்தை இயக்கியிருந்தார். கில்லி படம் 25 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டாலும் துணிவை அசால்ட் ஆக வசூலில் காலி செய்து இருப்பது தெரிகிறது.
முதல் நான்கு நாட்களில் கில்லி ரூபாய் 2.25 கோடி பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷன் ஆகியுள்ளது. வெள்ளிக்கிழமை 60 லட்சம், சனிக்கிழமை 65 லட்சம், ஞாயிற்றுக்கிழமை 75 லட்சம் என கலெக்ஷன் ஆகியுள்ளது. ஆனால் மறுபக்கம் துணிவு படமோ வசூலில் பின் தங்கியது.
கில்லி வசூலை நெருங்காத துணிவு
துணிவு படத்தை பொறுத்தவரையில், வெள்ளிக்கிழமை 18 லட்சம், சனிக்கிழமை 15 லட்சம், ஞாயிற்றுக்கிழமை 9 லட்சம், திங்கள் கிழமை 3 லட்சம் என வசூலில் தொடர்ந்து சரிந்துள்ளது. அஜித் படம் ஒட்டு மொத்தமாக 45 லட்ச ரூபாயை வசூல் செய்து இருக்கலாம் என்று சினி டிராக் தெரிவித்துள்ளது. வார நாட்களையும் சேர்த்து 50 லட்சத்தை தாண்டலாம் என்று தெரிகிறது.
கில்லி துணிவு படங்கள்
துணிவு படத்தை பொறுத்தவரை கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. பொங்கல் ரிலீசாக வெளியான இந்த படம் வசூலை வாரி குவித்தது இருந்தது. மஞ்சு வாரியம், சமுத்திரக்கணி, ஜான் கொக்கன் ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். வங்கி கொள்ளை தொடர்பான கதைக்களம் கொண்ட இந்த படத்தில் அஜித் டார்க் டெவில் கேரக்டரில் நடித்து இருந்தார்.
கில்லி படத்தை பொறுத்தவரை ஒக்கடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். விஜய்க்கு தனது கேரியரில் மிக முக்கியமான படமாக கில்லி அமைந்து இருந்தது. திரிஷா, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்த இந்த படம், ரீ ரிலிசிலும் வசூலில், அசால்ட் காட்டியுள்ளது.
தாய் கிழவி vs தெறி திரைப்படம்
கோலிவுட் திரையுலகில் வசூல் மன்னன் விஜய் தான் என்பதை ரீ ரிலீசும் நிருபித்து காட்டியுள்ளது என்று விஜய் ரசிகர்கள் சிலாகித்து வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். விஜய்யின் தெறி படம் இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் அதையும் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.
இதேபோல் இன்று சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தாய் கிழவி படமும் ரிலீஸ் ஆகியுள்ளது. ஏற்கனவே ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஒரே நேரத்தில் ரீலீஸ் ஆக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் இன்று இரு படங்களும் மோதுகின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications