தோப்பில் விசுவை துரத்திய தேனீ.. சின்ன மாப்ளை மாட்டு வண்டி பாட்டு ரகசியத்தை உடைத்த சுகன்யா! பலே நடிகை
சென்னை: 'Chat With Chithra' என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய திரைப்பயணம் மற்றும் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய அனுபவங்களை பற்றி விரிவாக பேசி வருகிறார் நடிகை சுகன்யா.. அந்தவகையில், மறைந்த விஜயகாந்த், விசு பற்றி நெகிழ்ச்சியான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.. சுகன்யா பகிர்ந்து கொண்ட தகவல்கள் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.
சுகன்யா அந்த பேட்டியில் சொல்லும்போது, "'சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த் அவர்கள் செட்டில் மிக ஜாலியாக இருப்பார்.. லைட்மேன்களுடன் கூட ஓடிப்பிடித்து விளையாடும் அளவிற்கு எளிமையானவர்.. மிகச்சிறந்த மனிதர்.. பாகுபாடின்றி அனைவருடனும் பழகுவார்..

அவரது நடிப்பு மிகவும் நுணுக்கமாக இருக்கும்.. அவரது கண்களே பேசும்.. 'சின்ன கவுண்டர்', 'சக்கரைத் தேவன்' படங்களில் அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இப்ப கூட டிவியில் அந்த படங்கள் வந்தால், யாராவது என்னை உடனே கூப்பிட்டு பேசுவார்கள்.. ஷூட்டிங்கின்போது, நாங்கள் எல்லாரும், அங்கிருந்த தென்னந்தோப்புகளில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.
கவுண்டமணி ஒரு வியப்பு:
கவுண்டமணி அவர்கள் எப்போதும் நிறைய ஆங்கில படங்களைப் பார்ப்பார்.. ஒரு குறிப்பிட்ட சீனின் நுணுக்கங்களை கூட அவ்வளவு அழகாக விவரிப்பார்.. அவர் ஷூட்டிங்குக்கு வரும்போதே அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கைதட்டி வரவேற்பார்கள், அந்த அளவிற்கு அவர் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்..
விசு - தேனீக்கள் கொட்டிய சம்பவம்
விசுவின் அசிஸ்டண்ட் டைரக்ட் செய்த 'ஆதித்யன்' என்ற படத்தில் கேமரா ஸ்டார்ட் செய்ததே விசு தான்
சின்ன மாப்ளை படத்தில் விசு, பிரபுவுடன் நடித்தேன்.. ஒரு தோப்பில் ஷூட்டிங் நடந்தபோது, லைட்மேன் தூக்கி சென்ற லைட், ஒரு மரக்கிளையில் இடித்துவிட்டது.. உடனே அங்கிருந்த தேன்கூடு கலைந்துவிட்டது.. இதனால் சுமார் 500-க்கும் மேற்பட்ட தேனீக்கள் அங்கிருந்தவர்களை கொட்ட தொடங்கிவிட்டது.. நாங்கள் எல்லாருமே தப்பித்து ஓட ஆரம்பித்துவிட்டோம்..
அப்போது விசு என்னிடம், "தேனீயை பார்த்துமே நானும் ஓட ஆரம்பிச்சேன்.. 4 அடி ஓடினேன்.. பிறகு என்னுடைய மனைவி உமாவையும் இழுத்து கொண்டு ஓடிவந்துவிட்டேன்.. என்றார்..
உடனே நான், "முதல் 4 அடி உங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளதானே ஓடினீங்க? அப்பறம்தானே உங்கள் மனைவியை அழைத்து சென்றீர்கள்" என்று கிண்டலாக கேட்டேன்..
இதைக்கேட்ட விசு, "ஆமாம், மா... நான் பெரிய தியாகம் பண்ணிட்டதாக நினைச்சேன்.. நீ நேர்மையா சொல்லிட்டே, உன்னை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது" என்றார்..
மாட்டுவண்டி படப்பிடிப்பு ரகசியம்:
அதே சின்ன மாப்ளை படத்தில் "காதோரம் லோலாக்கு" பாட்டில் மாட்டுவண்டியில் நானும் பிரபுவும் ஒன்றாக சேர்ந்து பாடுவது போல எடுக்கப்பட்டது.. ஆனால், அப்படி ஒன்றாக செல்லும்போது என்னுடைய முகமும், பிரபு சாரின் முகமும் கேமரா கோணத்தில் சரியாக தெரியாது..
அதனால், மாட்டு வண்டியில் ஒரு ஸ்டூல் மீது என்னை பின்னால் உட்கார வைத்து, பிரபுவுக்கு இணையாக என்னுடைய உயரத்தை சரிசெய்து, அதற்கு பிறகே அந்த காட்சியை எடுத்தார்கள்..
என்னுடைய முதல் படம் வெற்றி பெற்றதுமே, பல வாய்ப்புகள் வந்தன. முதல் படத்திற்கே 9 விருதுகள் கிடைத்துவிட்டதால், மிகவும் பொறுப்புடன் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன்.. என்னுடைய முதல் படம் வெற்றி, அது தொடர்பான செய்திகளை படித்துவிட்டு, என் மீது கொண்ட நம்பிக்கையில் நேராக என் வீட்டிற்கே வந்து, சின்ன கவுண்டர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார் டைரக்டர் ஆர்வி உதயகுமார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications