இத்தனை சோதனையா ஒரு மனிதனுக்கு? நான் விடமாட்டேன்! டி ராஜேந்தர் ஆதங்கம்.. பிரபலம் கொடுத்த அதிர்ச்சி
சென்னை: சில நாட்களுக்கு முன்னிட்டு சென்னை கமலா தியேட்டரில் நடந்த ஒரு சம்பவம், இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. நடிகை ராஜேந்தர் தியேட்டர் வாசலில் நின்று ஆதங்கத்துடன் அங்கிருந்தவர்களிடம் கேள்வி கேட்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது அப்போது சற்றும் எதிர்பார்க்காத செயலை கூல் சுரேஷ் செய்து இருக்கிறார்.

பன்முக திறமையாளர்
திரையுலகில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணியாற்றிய டி.ராஜேந்தர், ஒரே மனிதராக முழு படத்தையும் உருவாக்கும் திறமையால் "ஒன் மேன் ஆர்மி" என்ற பெயரைப் பெற்றவர். எதுகை மோனை கலந்த டயலாக், மேடையில் பேசும்போது வரும் அதிரடி, காதலை கூட போராட்ட செண்டிமெண்ட் உடன் சொல்லும் தனித்துவம் - இவை எல்லாம் சேர்ந்து அவரை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்தின. அவருடைய பேச்சு சாதாரண ஸ்பீச் ஆக இருக்காது; அது எப்போதும் ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்.
டி ராஜேந்தர் படம்
காதலர் தின ஸ்பெஷலுக்காக அவருடைய உயிர் உளளவரை உஷா படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது அந்த படத்தை பார்ப்பதற்காக ரசிகர்களுடன் தியேட்டருக்கு வந்த அவர், ரசிகர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், தனது சினிமா பயணத்தையும், சமீபத்திய திரையுலக சூழலையும் குறித்து திறந்த மனதுடன் பேசினார்.
டி ராஜேந்தர் ஆதங்கம்
"நான் ஒன் மேன் ஆர்மி. இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய 38 நாட்கள் கஷ்டப்பட்டு டிஜிட்டல் வேலை செய்தேன். ஒவ்வொரு காட்சியையும் மீண்டும் வேலை பார்த்தேன். குவாலிட்டியில் எந்த குறையும் இருக்கக்கூடாது என்பதற்காக தான் இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டேன்" என்று அவர் கூறினார்.
அதேபோல் ஒரே நாளில் பல படங்கள் வெளியாகியிருந்ததை குறித்து பேசும் போது, "நான் இந்த தேதியை முடிவு செய்த பிறகுதான் இத்தனை படங்கள் வந்தது. அதற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியும். என் மகன் சிலம்பரசன் படம் வரும் போது நான் என் படத்தை வெளியிட மாட்டேன். அது என் கண்ணை நானே குத்துவது மாதிரி" என்று தெரிவித்தார்.
திரையுலகில் நடைபெறும் போட்டி குறித்து பேசும் போது, "நான் உயிருள்ள வரை உஷா படம் வெளியிடும் போது இவ்வளவு அம்புகள் என்மேல் வருகிறதென்றால், இன்னும் என்னுடைய வெயிட் இருக்கிறது என்பதற்கான சான்று அது. திரையுலகில் இவ்வளவு அரசியல் நடக்கிறதா? நான் இப்படி அல்லல்படுகிறேன் என்றால் மற்றவர்களின் நிலை என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.
காதல் படம்
மேலும் இளம் தலைமுறையை நோக்கி, "உண்மையான காதல் கஷ்டமாக இருக்கலாம். ஆனா உயிரோட்டமான காதல் எப்போதும் ஜெயிக்கும். இந்த தலைமுறை இந்த படத்தை பார்த்து வாழ்க்கையில் உஷாராக இருக்கணும்" என்றார். தற்போதைய இளைஞர்களின் ரசனை என்ன என்பதை இந்த ரீ-ரிலீஸ் முடிவு தீர்மானிக்கும் என்றும், அதன் பிறகே தனது மற்ற படங்களை வெளியிடுவது குறித்து முடிவு செய்வேன் என்றும் கூறினார்.
"இந்த காலத்து காதல் எப்படி இருக்குன்னு ஒரு புதிய படம் எடுக்க போறேன். என்னை தூண்டிட்டாங்க" என்ற அவரது வரி கவனத்தை ஈர்த்தது. இந்த நேரத்தில்தான் பின்னால் நின்று கொண்டிருந்த நடிகர் கூல் சுரேஷ் திடீரென ஆவேசமாக, "என் தலைவனை சீண்டி பாக்குறீங்களா?" என்று குரல் எழுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோபப்பட்ட டி ராஜேந்தர்
ஆனால் உடனே டி.ராஜேந்தர் அவரை சமாதானப்படுத்தியதால் சூழ்நிலை சுமூகமானது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. TR பேசும் போது அவருக்காக இவ்வாறு செண்டிமெண்டாக அதிர்ச்சி கொடுத்த கூல் சுரேஷின் செயல், ரசிகர்களிடையே பேசப்படுகிறது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications