தமிழக அரசு திரைப்பட விழாவில் நடந்த சம்பவம்.. ஒரே மேடையில் சிவகார்த்திகேயன்–தனுஷ் ! கை நீட்டிய சூர்யா
சென்னை: தமிழக அரசு சார்பில் சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாநில விருதுகள், பல ஆண்டுகளாக தாமதமாகியிருந்த நிலையில் தற்போது மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், கடந்த ஆண்டுகளுக்கான விருதுகள் ஒரே கட்டமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று சென்னை கலைவாணர் அரங்கு வளாகத்தில் பிரம்மாண்டமாக விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறார்.

பல ஆண்டுகளுக்கான விருதுகள் ஒரே மேடையில்
முன்னதாக, 2009 முதல் 2012 வரை திரைப்பட விருதுகள் 183 பேருக்கும், 2009 முதல் 2013 வரை சின்னத்திரை விருதுகள் 101 பேருக்கும், 2008-09 முதல் 2013-14 வரை மாணவர் விருதுகள் 30 பேருக்கும் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 2015 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் 2014-15 ஆம் ஆண்டுக்கான மாணவர் விருதுகள் மார்ச் 6, 2024 அன்று அடையாறு முத்தமிழ்ப் பேரவை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.
தற்போது 2016 முதல் 2022 வரை திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரை சின்னத்திரை விருதுகள் மற்றும் 2015-16 முதல் 2021-22 வரை மாணவர் விருதுகள் தேர்வு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சமூக சிந்தனைகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள், மக்களின் அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கும் தொடர்கள் மற்றும் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர், நடிகைகள் - சிறந்த படங்கள்
இந்த விருதுகளில் சிறந்த நடிகர்களாக விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சிறந்த படங்களாக மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிவகார்த்திகேயன்-தனுஷ் விருதுகள்
இந்த விழாவில் சிவகார்த்திகேயன்க்கு கனா திரைப்படத்திற்காக விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் தனுஷ்க்கு வடசென்னை படத்தில் நடித்ததற்காக விருது வழங்கப்பட்டது. இதைக் கண்ட சில ரசிகர்கள், "சிவகார்த்திகேயன் சினிமாவில் வளர்ந்து வந்தது தனுஷ் மூலம் தான். ஆனாலும் தனுஷ்க்கு முன்பாக சிவகார்த்திகேயனுக்கு விருது கொடுக்கப்பட்டது" என சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில், இன்னொரு தரப்பு ரசிகர்கள் "இருவரும் தங்களது உழைப்பால் இன்றைய இடத்தை அடைந்தவர்கள். யாருக்கு எப்போது விருது கிடைத்தாலும் அது அவர்களது திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் தான்" என்ற கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
சூர்யாவின் கம்பீர வருகை
சூர்யா, ஜெய்பீம் திரைப்படத்திற்காக விருதை பெற்றுக்கொள்ள மேடைக்கு வந்த போது நடந்த ஒரு சிறிய சம்பவமும் கவனத்தை ஈர்த்தது. மேடையில் நின்ற அவர், செய்தியாளர்களை நோக்கி கை நீட்டி, "நான் சரியாக ஃப்ரேமில் இருக்கிறேனா?" என்பது போல சிரித்துக் கேட்டார். முதலில் அவர் யாரையோ அழைக்கிறார் போல தோன்றியதால் அங்கிருந்த சிலர் குழப்பமடைந்தனர்.
பின்னர் தான், புகைப்படக்காரர்கள் சரியாக படம் எடுக்க அழைத்ததற்கு பதிலளிக்கும் விதமாக அவர் கைநீட்டியதை பலர் புரிந்து கொண்டனர். அந்த தருணம் சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையாகவும், சூர்யாவின் இயல்பான பண்பை காட்டும் தருணமாகவும் பகிரப்பட்டு வருகிறது.
-
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications