Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராதிகாவை கிழக்கே போகும் ரயில் ஹீரோயினாக செலக்ட் பண்ணது இந்த பிரபலமா? ஹிட் தந்த படிக்காதவன் நாய் சீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதுமே ஜனகராஜ் பண விஷயத்தில் மிகவும் கறாராக இருக்க மாட்டார். படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, டப்பிங் வரை பேசி முடித்த பிறகுதான் காசு கேட்பார். இதனால் பல படங்களில் அவருக்குச் சம்பளம் வராமலேயே போயிருக்கிறது" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.,. மேலும், நடிகர் ஜனகராஜூக்கு முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "ஜனகராஜ் பக்கா சென்னைவாசி.. அவர் எல்டம்ஸ் ரோடு கார்ப்பரேஷன் பள்ளி மற்றும் பாண்டி பஜார் பகுதிகளில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

Kizhakke Pogum Rail Radhika Padikkadhavan

அவருக்கு இசையில் அதிக ஆர்வம் இருந்ததால் 'தவில்' கற்கவும் சென்றார். தி.நகரில் இருந்த ஜனகராஜின் பெரிய பங்களா வீட்டில், ஒரு பகுதியில் பாடகர் மலேசியா வாசுதேவன் வாடகைக்கு குடியிருந்தார். இதன் மூலமே அவருக்கு நிறைய சினிமா தொடர்புகள் கிடைத்தன.

ஒரு நாடக நடிகைக்கு உதவியாளராக சென்றபோது, அங்கு நடிக்க வேண்டிய ஒரு சிறுவன் வராததால், தற்செயலாக அந்த நாடகத்தில் ஒரு சிறிய காட்சியில் நடிக்கும் வாய்ப்பு ஜனகராஜுக்கு கிடைத்தது. இதுவே அவர் நடிப்புத் துறைக்கு வர அடித்தளமாக அமைந்தது.

சினிமாவில் வாய்ப்பு

இந்த முதல் நடிப்பு அனுபவத்திற்குப் பிறகு, நாடகங்களிலும் சினிமாவிலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு அதிகமானது. அப்போதுதான் பாரதிராஜா கதாநாயகனாக நடித்த ஒரு நாடகத்தில் ஜனகராஜும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இளையராஜா அந்த நாடகத்திற்கு இசை அமைத்திருந்தார். இதன் மூலம் பாரதிராஜா மற்றும் இளையராஜா குழுவினருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

மலேசியா வாசுதேவன் ஜனகராஜின் வீட்டில் வாடகைக்கு இருந்ததால், பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜுடன் ஜனகராஜ் மிகவும் நெருங்கிய நண்பரானார். கிழக்கே போகும் ரயில்' படத்தின் ஆடிஷனுக்கு ஜனகராஜ் சென்றபோது, பாரதிராஜா அவரைப் பார்த்து "நீ ஏன் இங்கே நிற்கிறாய்?" எனக் கேட்டுள்ளார்.

ராதிகா போட்டோ தேர்வு

பிறகு 2 போட்டோக்களை காட்டி, கிழக்கே போகும் ரயில் படத்தின் ஹீரோயினுக்கு பொருத்தமாக யார் இருப்பார் என்று பாரதிராஜா கேட்டார். உடனே ஜனகராஜ், ராதிகாவின் போட்டோவை தேர்வு செய்தார். ஜனகராஜ் சரியான போட்டோவை தேர்வு செய்ததால், 'கிழக்கே போகும் ரயில்' படத்திலேயே பாரதிராஜா ஜனகராஜுக்கு வாய்ப்பளித்தார். அதே படத்தில் ஒரு ஐயர் கேரக்டரில் கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்ததே ஜனகராஜின் முதல் சினிமாவாகும்.

ஜனகராஜின் டயலாக் டெலிவரி மக்களை கவர்ந்தது.. படிக்காதவன் படத்தில் ரஜினி சாரிடம் ஜனகராஜ் நாய்க்கதை சொல்லும் சீன் ஒன்று ஃபேமஸ் ஆனது.. "மார்கழி மாசம்... நாய் என் தங்கச்சியைக் கடிச்சிருச்சுன்னு நினைச்சேன், ஆனா என்னை கடிச்சிருச்சுப்பா" என்று அவர் சொல்லும் அந்த காமெடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

இந்த நாய்க்கடி காமெடியை ஒரு காட்சியாக வைக்கலாம் என்று ஜனகராஜ் தான் தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் முதலில் யோசனை சொல்லி உள்ளார்.. ஆனால் தயாரிப்பாளர் தயங்கினாலும், ரஜினி சார் அந்த ஐடியாவைக் கேட்டு மிகவும் ரசித்து, "இது நல்லா இருக்கே, படத்தில் வைப்போம்" என்று சொல்லவும், அதற்கு பிறகே அந்த சீன் எடுக்கப்பட்டுள்ளது.

நாயகன் படத்தில் சம்பளம்

கமல் சாருடன் அவர் நடித்த 'நாயகன்' படம் ஜனகராஜின் திரைப்பயணத்தில் யாராலும் மறக்க முடியாத ஒரு படம்.. நிலா அது வானத்து மேல பாடலில், கமல் அமைதியாக உட்கார்ந்திருக்க, ஜனகராஜ் அந்தப் பாடலை ரசித்து டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களை கொடுத்து நடித்திருப்பார். இந்த பாட்டு அவருக்கு மிகப்பெரிய 'பிரேக்' கொடுத்தது.

இந்த படத்திற்காக ஜனகராஜை ஒப்பந்தம் செய்யும்போது 10 நாட்கள் கால்ஷீட்டிற்கு 60,000 ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். தயாரிப்பாளர் "நாட்கணக்கில் சம்பளம் தருகிறேன், ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் தருகிறேன்" என்று ஜனகராஜிடம் கூறியுள்ளார்.

எப்போதுமே ஜனகராஜ் பண விஷயத்தில் மிகவும் கறாராக இருக்க மாட்டார். படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, டப்பிங் வரை பேசி முடித்த பிறகுதான் காசு கேட்பார். இதனால் பல படங்களில் அவருக்கு சம்பளம் வராமலேயே போயிருக்கிறது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+