பொண்டாட்டி இருக்க, திரிஷா தேவையா? தெலுங்கு ரவி தேஜா படத்தின் வசனத்தில் உள்குத்து! பின்னணி சம்பவம்
சென்னை : தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடித்த ஒரு படத்தின் தமிழ் டப்பிங் வசனம் தற்போது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக அந்த வசனத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் பெயர் பயன்படுத்தப்பட்ட விதம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

என்ன அந்த சர்ச்சை?
கிஷோர் திருமலா இயக்கத்தில், ரவி தேஜா நடித்த Bhartha Mahasayulaku Wignyapthi படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. தற்போது இந்த படம் OTT தளங்களில் வெளியாகி வருகிறது. இந்த படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ஒரு காட்சியில், அஷிகா ரங்கநாத் பேசிய வசனத்தில் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அந்த காட்சியில், "வீட்டில் ரஷ்மிகா மாதிரி ஒரு மனைவி இருக்கும்போது, இந்த திரிஷா கிரிஷா எல்லாம் தேவையா?" என்ற வகையில் வசனம் இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிராக மற்றொரு கதாபாத்திரம் கோபமாக எதிர்வினை கொடுக்கும் காட்சியும் உள்ளது.
ரசிகர்கள் கோபம்
இந்த வசனம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதும், திரிஷா ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "காமெடி என்ற பெயரில் யாரையும் இப்படி தரக்குறைவாக பேசக் கூடாது. அது கூட ஒரு நடிகையின் பெயரை வைத்து பேசுவது சரியல்ல" என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த தமிழ் டப்பிங் வசனத்தை யார் எழுதினார்கள்? ஏன் இப்படிப் பட்ட வரிகள் சேர்க்கப்பட்டன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இதற்கு முன்பு சில தமிழ் படங்களில் கூட நயன்தாரா இல்லனா திரிஷா.. திரிஷா இல்லனா 4ஷா என்றெல்லாம் வசனங்கள் வந்திருக்கிறது அப்போது அது பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் இப்போது தெலுங்கு படத்தில் தமிழ் டப்பிங் தான் அதிகமாக பேசப்படுகிறது.
சர்ச்சைகள் நடுவே மீண்டும் ஒரு விவகாரம்
சமீப காலமாகவே திரிஷாவை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அரசியல் பிரமுகர் நயினார் நாகேந்திரன் பேச்சு குறித்து அவர் மறைமுகமாக கண்டனம் தெரிவித்தது, அதன் பிறகு பார்த்திபன் உடன் ஏற்பட்ட விவாதம் என இது இன்னும் அடங்காத நிலையில், தற்போது இந்த டப்பிங் வசனமும் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ரசிகர்கள் கோரிக்கை
இந்த விவகாரம் குறித்து திரிஷா நேரடியாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு சாதாரண டப்பிங் வசனம் என்ற அளவை தாண்டி, தற்போது இது ஒரு பெரிய விவாதமாக மாறியுள்ளது.
சினிமாவில் காமெடி, கலாய்ப்பு எல்லாம் இருந்தாலும், ஒருவரின் பெயரை இழுத்து பேசுவது எவ்வளவு சரி என்ற கேள்வியை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது. இந்நிலையில், திரிஷா இந்த விவகாரத்திற்கு பதில் அளிப்பாரா? அல்லது இதையும் அமைதியாக கடந்து செல்வாரா? என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
"Veetla Rashmika maathiri oru pondaatiya vechukitu indha Trisha Krisha laam thevaiya"
— Trollywood 𝕏 (@TrollywoodX) March 17, 2026
Nice dubbing😂
pic.twitter.com/QvWFr4Ymt3












Click it and Unblock the Notifications