Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமலா வாழ்வை பங்கு போட வந்த 2 எழுத்து நடிகை? கணவரை விட்டு தராமல் இழுத்து பிடித்த கதை.. சூப்பர் தம்பதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகார்ஜூனா நினைத்திருந்தால் பல பிரபல இயக்குநர்களின் படங்களில் மட்டுமே நடித்திருக்க முடியும்.. ஆனால், பல புதுமுக டைரக்டர்களை அறிமுகப்படுத்தினார்.. அவர்களில் பலர் இன்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக உள்ளனர் என்று பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

Aramnaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "சினிமா பின்னணியில் இருந்து வந்தவர் நாகார்ஜூனா.. தெலுங்கு உலகமே கொண்டாடுபவரும், அன்றைய காதல் மன்னனுமான நாகேஸ்வர ராவின் மகன்தான் நாகார்ஜுனா..

Amala two letter Actress 2

டைரக்டர் ராம்கோபால் வர்மா

டைரக்டர் ராம்கோபால் வர்மா சினிமா எடுக்கும் ஆசையில், ஒரு கதையை வைத்து கொண்டு, அன்னப்பூர்ணா ஸ்டுடியோ முழுக்க தினம் தினம் சுற்றி வந்துள்ளார்.. அப்போதுதான் நாகார்ஜூனா ராம்கோபால் வர்மாவை கவனித்து, தன்னுடைய உதவியாளரிடம் விசாரித்துள்ளார்..

பிறகுதான் ராம்கோபால் வர்மாவை வரவழைத்து அந்த கதையை கேட்டுள்ளார் நாகார்ஜூனா.. உடனே அந்த படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டுவிட்டார் நாகார்ஜூனா.. அந்தவகையில் ராம் கோபால் வர்மாவுக்கு முதல் வாய்ப்பு தந்தது நாகார்ஜுனாதான்.. அந்த படம் தான் 'சிவா' என்ற படம்.. தமிழில் உதயம் என்ற பெயரில் வெளியானது..

சிவா - உதயம் - திருப்புமுனை

நாகார்ஜூனாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது... ஆக்‌ஷன் சூப்பராக இருக்கும்.. அதிலும் ஒரு சீனில் சைக்கிள் செயினை உருவி தன்னுடைய கையில் வைத்திருப்பார் நாகார்ஜூனா.. இதுதான் அப்போது வால்போஸ்டரில் பலரையும் ஈர்த்தது..

டைரக்டர் மணிரத்னத்தின் 'கீதாஞ்சலி' படம் இளைஞர்களிடையே அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது.. பாடல்கள் செம ஹிட்டாயின.. ராம்கோபால் வர்மாவின் கேரியரும் உயர்ந்தது..

நாகார்ஜூனா நினைத்திருந்தால் பல பிரபல இயக்குநர்களின் படங்களில் மட்டுமே நடித்திருக்க முடியும்.. ஆனால், பல புதுமுக டைரக்டர்களை அறிமுகப்படுத்தினார்.. அவர்களில் பலர் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக உள்ளனர்.

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்தவர் ராமநாயுடு.. இவரது மகன்தான் நடிகர் வெங்கடேஷ்.. ராமநாயுடு மகள்தான் லட்சுமி.. இந்த லட்சுமியை நாகார்ஜூனா முதலில் திருமணம் செய்துகொண்டார்.. இவர்களுக்கு பிறந்தவர்தான் நாக சைதன்யா.

அமலா - நாகார்ஜுனா

ஆரம்பத்தில் அமலா மீதும், நாகார்ஜூனா மீதும் நிறைய கிசுகிசுக்கள் வலம்வந்தன.. ஆனால், இருவருமே உதயம் படத்தில் நடித்ததில் இருந்தே காதல் மலர்ந்தது..

இதற்கு பிறகுதான் தன்னுடைய முதல் மனைவி லட்சுமியை விவாகரத்து செய்த பிறகு, நடிகை அமலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகில் என்ற மகன் உள்ளார்.

இதற்கு பிறகு நாகார்ஜுனா, நடிகை தபு இருவருக்குள்ளும் நெருங்கிய உறவு இருப்பதாகவும், அமலாவை நாகார்ஜுனா பிரிந்துவிடுவார் என்றும் சலசலப்புகள் தெலுங்கு மீடியாவில் வலம் வந்தது.. நீண்ட காலமாகவே இப்படியொரு செய்தி பரவி கொண்டேயிருந்ததால், அமலாவே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

2 எழுத்து நடிகை

அமலா ஒரு பேட்டியில், "என் கணவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும். என் குடும்பத்தில் நடப்பது பிறருக்கு எப்படி தெரியும்? என் குடும்பம் ஒரு கோயில் போன்றது.. என் கணவர் எனக்கு கடவுள் போன்றவர்..

தபுவும் அவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே, தேவையில்லாமல் வதந்தி கிளப்பாதீங்க, இதை கேள்விப்பட்டால் தபு மிகவும் வேதனைப்படுவார்" என்று அமலா அறிவித்திருந்தார்..

இந்த அறிவிப்பானது, அப்போது மிகப்பெரிய அளவில் தெலுங்கு, தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.. அந்தஅளவுக்கு அமலா தன் கணவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார்.. அமலா வைத்த அந்த நம்பிக்கை என்றுமே பொய்க்கவில்லை.. இன்று வரை இருவரும் மிகவும் மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+