தொப்பி, ஸ்வட்டருடன் லேசா லேசா படத்தில் ரசிகர்களை ஈர்த்த நடிகர் ஸ்ரீனிவாசன்.. மறக்க முடியாத லெஜண்ட்
சென்னை: மூத்த மலையாள நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 69.. பிரபல நடிகரின் இந்த இழப்பானது, மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மலையாள திரையுலகின் மனதை கொள்ளை கொண்ட நடிகர், திரைக்கதை ஆசிரியர், டைரக்டர் என பல முகங்கள் கொண்டவர் ஸ்ரீனிவாசன்.

சாதனை படைத்த ஸ்ரீனிவாசன்
காமெடி என்றாலே இவரது முகம் நினைவுக்கு வரும் அளவுக்கு, சாதாரண மனிதனின் வாழ்க்கையை எளிய நடிப்பில் வெளிப்படுத்தியவர். மோகன்லால், மம்முட்டி போன்ற சூப்பர்ஸ்டார்களுடன் இணைந்து நடித்தாலும், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் ஸ்ரீனிவாசன்..
நடிப்பை தாண்டி, திரைக்கதை, டைரக்ஷன் துறைகளிலும் அவர் காட்டிய திறமை மலையாள சினிமாவின் முக்கியமான அத்தியாயமாகும். 'தலையணை மந்திரம்', 'சந்தேசம்', 'மிதுனம்' போன்ற படங்கள் இன்று வரை ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம் பெற்றுள்ளன.
'வடக்குநோக்கியந்திரம்' படத்திற்கு கேரள அரசின் சிறந்த பட விருதும், 'சிந்தாவிஷ்டயாய ஷியாமலா' படத்திற்கு தேசிய விருதுடன் மாநில அரசின் விருதும் கிடைத்தது அவரது படைப்புத் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும்.
உடல்நலக்குறைவு
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்ரீனிவாசனுக்கு உடல்நல ரீதியாக கடினமான காலமாக அமைந்தது என்று சொல்லலாம்.. 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டார்..
ஒருமுறை கொச்சி எடப்பள்ளியில் உள்ள ஸ்டூடியோவில் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார். உடனடியாக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு 'டிரிபிள் வெஸல் டிசீஸ்' இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பைபாஸ் ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கேரள பிரபலங்கள்
2 மகன்களின் தந்தையான ஸ்ரீனிவாசனின் மூத்த மகன் வினித் ஸ்ரீனிவாசன், நடிகர், பாடகர், இயக்குநர் என மலையாள திரையுலகில் தனி முத்திரை பதித்துள்ளார்.
வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ஹ்ரிதயம் படத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ், கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தனர்.. இளைஞர்களின் கல்லூரி காதலையும், அதற்கு பிந்தைய வாழ்க்கையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்றாலும், ஓடிடியில் வெளியான பிறகே கூடுதல் வரவேற்பை பெற்றது நினைவிருக்கலாம்.
இளைய மகன் தியான் ஸ்ரீனிவாசன் மலையாள படங்களில் பிரபலமான நடிகராக உள்ளார்.. மேலும் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனராகவும் உள்ளார்..
குடும்பமும் ரசிகர்களும் பிரார்த்தனையுடன் காத்திருக்கும் நிலையில், மலையாள சினிமாவின் இந்த மனிதநேயக் கலைஞரின் மரணம், கேரள ரசிகர்களின் மனதை உலுக்கி போட்டுள்ளது.. ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும், ரசிகர்களும் தங்களது உருக்கமான அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.
லேசா லேசா
தமிழிலும் 'லேசா லேசா', 'புள்ளக்குட்டிக்காரன்' போன்ற படங்களில் நடித்துப் பாராட்டைப் பெற்றார் ஸ்ரீநிவாசன்.. அதிலும் லேசா லேசா' படத்தில் ஸ்ரீநிவாசன் நடித்திருந்தது தமிழ ரசிகர்களிடம் நல்ல கவனம் பெற்ற ஒன்றாகும்.
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான இந்த படம், காதலும் உணர்வுகளும் நிறைந்த ஒரு மென்மையான கதையுடன் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் ஸ்ரீநிவாசன், கதையின் ஓட்டத்தை மெதுவாக நகர்த்தும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.
அவர் நடித்த கேரக்டர் பெரிய ஹீரோயிசம் கொண்டதாக இல்லாவிட்டாலும், மனிதநேயமும் அனுபவமும் நிறைந்த ஒரு குணச்சித்திரமாக அமைந்திருந்தது..
மலையாள வாடை வசன உச்சரிப்பு
இயல்பான நடிப்பு, முகபாவனை, வசன உச்சரிப்பு ஆகியவற்றின் மூலம் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார் ஸ்ரீநிவாசன்.. இத்தனைக்கும் ஸ்ரீநிவாசன் நடித்த காட்சி எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் கதைக்கு ஒரு நம்பகத்தன்மையை சேர்த்தது.
குறிப்பாக, ஹீரோ ஷ்யாமின் மனநிலையை புரிந்து கொண்டு அறிவுரையளிக்கும் வகையிலான அவரது நடிப்பு, படம் முடிந்த பிறகும் நினைவில் நிற்கும் வகையில் இருந்தது. இந்த படம் மூலம், மொழி எல்லைகளை தாண்டி, தமிழ் சினிமாவிலும் ஸ்ரீநிவாசன் ஒரு திறமையான கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக ஏற்றுக் கொள்ளப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.
நடிகர் ரஜினி இரங்கல்
நடிகர் ஶ்ரீனிவாசனின் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் ஆடியோவில், "என் நல்ல நண்பன் ஶ்ரீனிவாசன் மரணச் செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் திரைப்படக் கல்லூரியில் என் வகுப்புத் தோழர். ஒரு சிறந்த இயக்குநர், நடிகர் மட்டுமல்ல... மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications