சங்கீதா பற்றி கேள்வி கேட்ட பிரபலம்.. தனியாக கூப்பிட்டு மிரட்டிய விஜய்? தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஓபன்
சென்னை: விஜய் - சங்கீதா விவாகரத்து (Vijay Sangeetha Divorce) விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அளித்த பேட்டி தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. சங்கீதா தாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் மனுவில் உள்ள குற்றச்சாட்டுகள், கடந்த கால கிசுகிசுக்கள் மற்றும் இந்த பேட்டி - இவை அனைத்தும் இணைந்து கோலிவுட்டில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

27 ஆண்டுகள் கழித்து விவாகரத்து மனு
1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட விஜய் - சங்கீதா தம்பதியினர் தற்போது பிரிவை நோக்கி சென்றுள்ளனர். செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும் மனுவில், 2021 ஏப்ரல் மாதத்தில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரியவந்தது.
அது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறிய செயல். உண்மை தெரிந்த பிறகும் அந்த உறவு தொடர்ந்தது என்று சங்கீதா குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. நீதிமன்றம் விஜய் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், குறிப்பிட்ட தேதியில் ஆஜராக வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே எழுந்த சந்தேகங்கள்
கடைசியாக மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டில் விஜய்யுடன் சங்கீதா பொதுவெளியில் தோன்றினார். அதன் பிறகு விஜய்யின் எந்தப் பட விழாவிலும், அரசியல் கட்சி தொடக்க நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்காதது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியது.
விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்ளாதது இந்த விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்தது.
பாலாஜி பிரபு விளக்கம்
தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பாலாஜி பிரபு கூறியதாவது: விஜய் சினிமாவில் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில், அவர் சங்கீதாவை காதலித்து திருமணம் செய்யப் போகிறார் என்ற செய்தி பத்திரிகைகளில் வெளியாகத் தொடங்கியது. இதையடுத்து திருமண அறிவிப்பை வெளியிடுவதற்காக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பத்திரிகையாளர்களை வீட்டுக்கு அழைத்தார்.
அப்போது சங்கீதா என்ற பெண் லண்டனை சேர்ந்தவர் அவரை நாங்கள் தான் விஜய்க்கு பார்த்து பேசி முடித்திருக்கிறோம் இது பெற்றோர்கள் பார்த்த முடிக்கும் திருமணம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பத்திரிகையாளர், "விஜய்யே வந்துவிட்டார்... இப்போது உண்மை தெரிந்துவிடும்" என்று கூறியதால் எஸ்.ஏ.சி கடும் கோபமடைந்தார். பின்னர் அந்த பத்திரிகையாளரை தனியாக அழைத்துச் சென்ற விஜய் விரலை நீட்டி "ஜாக்கிரதை" என்று மிரட்டியதாக பாலாஜி பிரபு தெரிவித்தார்.
இந்த தகவல்கள் தற்போது மீண்டும் வைரலாகி, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. விஜய் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். இது அவரது கடைசி படம் என்றும், அதன்பிறகு முழுமையாக அரசியலில் கவனம் செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து அவர் அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த விவாகரத்து சர்ச்சை அவரது இமேஜ் மீது தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications