துபாயில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்நிகழ்வில் ஈடிஏ அஸ்கான், ஜீனத், அல் நபூதா உள்ளிட்ட பல்வேறு நிறுவன ஊழியர்கள், துபாய் தமிழ்ச் சங்கம், வேலி ஆஃப் லவ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தொண்டர்கள் பங்கேற்றனர்.
ஜீனத் நிறுவனத்தில் இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளர் சுலைமான் தங்களது நிறுன ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றது குறித்து தனது மகிழ்வினை வெளியிட்டார். இந்நிகழ்ச்சிக்கு துபாய் நகராட்சி சிறப்பான ஒத்துழைப்பினை நல்கியதாகக் குறிப்பிட்டார்.
துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் ஜெகந்நாதன் மற்றும் நிர்வாகிகள் கீதா கிருஷ்ணன், சுந்தர், பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்களுடன் பங்கேற்றார். அவர் துபாய் நகராட்சி இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளை அடிக்கடி நடத்த வேண்டும் என்றார்.
இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களும் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.













Click it and Unblock the Notifications