தானாக உடைந்த பஸ் கண்ணாடி-பயணிகள் காயம்

கடந்த 21ம் தேதி கோயம்புத்தூரில் இருந்து பழனி நோக்கி, தநா 38, 1788 என்ற பதிவு எண்ணை கொண்ட தமிழக அரசு பேருந்து போய் கொண்டிருந்தது.
அந்தப் பேருந்து பொள்ளாச்சிக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன்பக்க கண்ணாடி திடீரென சுக்கு நூறாக நொறுங்கி சிதறியது. இதில் பஸ்சில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பலருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திடீரென்று இந்த கண்ணாடி உடைந்ததற்கு அதன் தரம் தான் காரணம் என கூறப்படுகிறது. ரோட்டில் பஸ் சென்ற அதிர்வை கூட தாக்குபிடிக்க முடியாமல் அந்த கண்ணாடி உடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இத்தனைக்கும் இந்த வண்டியின் வெளிப்புற தோற்றம் சமீபத்தில் வாங்கப்பட்டது என்பதை தெரிவிக்கிறது.
தரமான கண்ணாடி என்றால் தானாக உடையாது. இனி மேலாவது போக்குவரத்து நிர்வாகம் இதை சரி செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications