இனி ஷரியத் சட்டம்.. முன்னர் தாலிபான்கள் பெண்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதித்தார்கள்? முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் இனி ஜனநாயக ஆட்சி முறைக்கு பதிலாக ஷரியத் சட்ட ரீதியிலான ஆட்சி முறை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுக்க பல நாடுகளில் ஷரியத் சட்ட ரீதியிலான ஆட்சி முறை அமலில் உள்ளது. எகிப்து, இந்தோனேசியா, ஈரான், மலேசியா, மாலத்தீவு, மொரிஷியஸ், நைஜிரியா, பாகிஸ்தான், ஈராக், கத்தார், சவுதி, சூடான், ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் என்று பல நாடுகளில் இந்த சட்டம் அமலில் உள்ளது. ஆனால் ஒவ்வொரு நாடுகளில் இதில் மக்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், தண்டனைகள் ஆட்சியாளர்களை பொறுத்து மாறுபடும்.

Comprehensive Story: What does Sharia mean for women in Afghanistan under the Taliban?

ஷரியத் சட்டங்களை புரிந்து கொள்ளும் விதத்திலும், அதை செயல்படுத்தும் விதத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். 2001க்கு முன் 6 வருடங்கள் ஷரியத் சட்ட முறைப்படி தாலிபான்கள் கடுமையான ஆட்சியை ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டது. ஷரியத் சட்டங்களை பின்பற்றும் மற்ற இஸ்லாமிய நாடுகள் போல இல்லாமல் மிக மிக தீவிரமான விதிகளை தாலிபான்கள் அங்கு விதித்தது.

தற்போதும் ஷரியத் சட்டம் மீண்டும் அமலுக்கு வருவதாக தாலிபான்கள் கூறியுள்ளது. இந்த சட்டப்படி கடந்த 1996 -2001 ஆட்சியில் தாலிபான்கள் பெண்களுக்கு எந்த மாதிரியான கட்டுப்பாடுகளை விதித்தது என்று பார்க்கலாம்.

பெண்கள் மார்க்கெட் போன்ற பகுதிகளுக்கு செல்லலாமா?

ஆம் ஷரியத் சட்டப்படி பெண்கள் வெளியே மார்க்கெட் பிற பகுதிகளுக்கு செல்ல முடியும். ஆனால் இதற்கு முன் இருந்த தாலிபான் ஆட்சியில் பெண்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் கூடவே குடும்பத்து ஆண் துணை இருக்க வேண்டும்.

பெண்கள் தங்கள் நண்பர்களோடு வெளியே செல்லமுடியமா?

ஆப்கானில் கடந்த ஆட்சியின் போது பெண்கள் வெளியே தங்கள் நண்பர்களோடு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.

பெண்களுக்கு ஆண் நண்பர்கள் இருக்க முடியுமா?

12 வயதுக்கும் மேற்பட்ட வேற்று ஆண்களோடு பெண்கள் பேச அனுமதி இல்லை

பெண்களுக்கு கல்வி கிடைக்குமா?

பெண்களுக்கு ஷரியத் கல்வி அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஆப்கானில் தாலிபான்களுக்கு கீழ் ஆண்கள் படிக்கும் கல்வி மையங்கள், பாட சாலைகளில் அவர்கள் படிக்க முடியாது.

பெண்கள் மேக் அப் செய்து தங்களை அலங்காரம் செய்து கொள்ள முடியுமா?

கடந்த தாலிபான் ஆட்சியில் பெண்கள் மேக் அப் செய்து கொள்ள தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில் தடை இருந்தது. நெய்ல் பாலிஷ் செய்ய கூட அனுமதி கிடையாது.

பெண்கள் பாடல் மற்றும் நடனம் ஆட அனுமதி உண்டா?

இல்லை, இசை என்பது ஷரியத் சட்டப்படி தவறானது. இதற்கு முன் கடந்த தாலிபான் ஆட்சியில் இதுபோன்ற பாடல் பாடியவர்கள், நடனம் ஆடியவர்கள் மீது தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுத்துள்ளனர்.

பெண்கள் அலுவலகங்களில் வேலை பார்க்கலாமா?

கடந்த தாலிபான் ஆட்சியில் பெண்கள் வேலை பார்க்க அனுமதி இல்லை என்றாலும் இந்த முறை பெண்களை வேலைக்கு அனுப்புவோம் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளது. ஆனால் இப்போது வரை வந்துள்ள தகவலின்படி வங்கிகள், மருத்துவமனைகளில் வேலை பார்க்கும் பெண்கள் தாலிபான்கள் மூலம் பந்தோபஸ்து கொடுக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர். பெண்கள் தனியாக செல்ல கூடாது என்பதால் இப்படி செய்தனர். அதோடு இந்த பெண்களின் ஆண் உறவினர்களும் இதே இடத்தில் பணிக்கு சேரும் வசதியை ஏற்படுத்தி தர தொடங்கி உள்ளனர்.

புர்கா அணிவது கட்டாயமா?

ஆம், ஷரியத் சட்டப்படி அழகை காட்டுவது குற்றம். இதனால் 8 வயதுக்கு மேல் உள்ள எல்லோரும் அங்கு புர்கா அணிய வேண்டும் என்று தாலிபான் கூறியுள்ளது. அதோடு வெளி ஆண்களோடு பேசும்போது உடன் வீட்டு ஆண்கள் இருக்க வேண்டும்.

பெண்கள் எப்படி பேச வேண்டும்?

பெண்கள் தங்கள் குடும்ப ஆண்களோடு இருக்கும் போது சத்தமாக பேச கூடாது. வீட்டில் பேசும்போது பக்கத்து வீட்டிற்கு கேட்கும்படி பேச கூடாது என்று தாலிபான் கூறியுள்ளது.

பெண்கள் ஹீல்ஸ்அணியலாமா ?

பெண்கள் ஹீல்ஸ் அணிய கூடாது. அதோடு நடக்கும் போது மற்ற ஆண்களுக்கு கேட்காமல் நடக்க வேண்டும்.

பெண்கள் பால்கனியில் அமர்ந்து வேடிக்கை பார்க்கலாமா?

கடந்த தாலிபான் ஆட்சியில் பெண்கள் பால்கனிக்கு வருவது தடை செய்யப்பட்டு இருந்தது.

பெண்கள் மாடலிங் செய்யலாமா?

பெண்களை புகைப்படம் எடுத்து விளம்பரங்களில் பயன்படுத்துவது, செய்திகளில் பெண்கள் புகைப்படங்களை பயன்படுத்துவது, புத்தகங்களில் பெண்கள் புகைப்படங்களை பயன்படுத்துவது தவறு.

தாலிபான்கள் தெரிவிக்கும் ஷரியத் சட்டங்களை மீறும் பெண்கள் எப்படி தண்டிக்கப்படுவார்கள்?

கடந்த ஆட்சியில் இவர்கள் மிக மோசமான முறையில் தண்டிக்கப்பட்டனர். பொது இடங்களில் சாட்டையடி தொடங்கி கல்லால் அடிப்பது வரை பல கொடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு இந்த சட்டம் வந்துள்ளது. ஆனால் ஷரியத் மீண்டும் இதே கடுமையுடன் கடைபிடிக்கப்படுமா அல்லது சில தளர்வுகள் இருக்குமா என்பது தாலிபான்கள் அதிகாரப்பூர்வ ஆட்சியை தொடங்கிய பின்பே தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+