Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாரதரே, அம்மை அப்பன் என்றால் என்ன? Capital receipts, Fiscal deficit என்றால் என்ன?

Subscribe to Oneindia Tamil

-ஏ.கே.கான்

2013-14ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாய், மத்திய அரசின் செலவுகள் (ஒரு ரூபாயில்) இதோ.

வரவுகள்:

கடன்கள் மற்றும் சுமைகள் மூலம்- 27 பைசா
நிறுவனங்கள் மீதான வரி வருவாய்- 21 பைசா
வருமான வரி- 12 பைசா
கலால் வரி- 10 பைசா
சுங்க வரி- 9 பைசா
சேவை வரி- 9 பைசா
வரியில்லா வருவாய்- 9 பைசா
கடன் அல்லாத மூலதன வருவாய்- 3 பைசா

செலவுகள்:

மத்திய திட்டச் செலவுகள்- 21 பைசா
கடனுக்கு வட்டி செலுத்த- 18 பைசா
வரி வருவாயில் மாநிலங்களுக்கு பங்கு தர- 17 பைசா
மானியங்கள் வழங்க- 12 பைசா
திட்டம் சாராத செலவுகள்- 11 பைசா
பாதுகாப்புத்துறைக்கு- 10 பைசா
மாநிலங்களின் திட்டங்களுக்கான உதவிக்கு- 7 பைசா
மாநிலங்களுக்கு திட்டம் சாராத உதவிகள் தர- 4 பைசா

2013-14ல் மத்திய அரசின் ஒட்டுமொத்த பட்ஜெட் கதை இது தான்:

Union Budget 2013: A Glance

வருவாய் வரவுகள் (Revenue receipts)- ரூ. 10,56,331 கோடி

எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்யாமல் திரட்டப்படும் நிதிக்கு வருவாய் வரவு என்று பெயர். வருமான வரி, நிறுவன வரி, பங்கு பரிவர்த்தனை வரிகள் உள்ளிட்ட வரி வருவாய் இதற்கு உதாரணமாகும்.

மூலதன வரவுகள் (Capital receipts)- ரூ. 6,08,967

சொத்துக்களை விற்பனை செய்வதால் திரட்டப்படும் நிதிக்கு மூலதன வரவு என்று பெயர். மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதால் கிடைக்கும் நிதியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

மொத்த வருவாய்- ரூ. 1,66,5297 கோடி

திட்டம் சாரா செலவுகள்- ரூ. 11,09,975 கோடி

திட்டச் செலவுகள்- ரூ. 5,55,322

மொத்த செலவுகள்- ரூ. 16,65,297 கோடி

வருவாய் பற்றாக்குறை (Revenue deficit)- ரூ. 3,79,838 கோடி

நிதி பற்றாக்குறை (Fiscal deficit)- ரூ. 5,42,499 கோடி

மொத்த பற்றாக்குறை (Primary deficit)- ரூ. 1,71,814 கோடி (இதைத் தான் பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளதாகக் கூறுகிறார்கள். இந்தப் பற்றாக்குறை வெறும் 'துண்டு' அல்ல, பெரிய 'ஜமுக்காளம்' என்றே சொல்லலாம்)

அப்படி இன்னும் இரண்டு economic jargon-களுக்கும் விவரத்தைப் பார்த்து விடுவோம்..

Revenue expenditure (வருவாய் செலவினம்) என்று ஒரு வார்த்தையை எக்கனாமிக் டைம்ஸை, இந்து பிஸினஸ் லைன் ஆகியவற்றில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கு அர்த்தம் இது தான்.

இந்த வகையான செலவினத்தால் மத்திய அரசால் சொத்து எதையும் வாங்க முடியாது. இதற்கு வருவாய் செலவினம் என்று பெயர். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், அரசால் வழங்கப்படும் மானியம், அரசு வாங்கிய கடனுக்காக செலுத்தப்படும் வட்டி போன்றவை தான் ரெவன்யூ எக்ஸ்பன்டிச்சர்.

இன்னொன்று Capital expenditure (மூலதன செலவு). ஒரு செலவினத்தை மேற்கொள்ளும்போது சொத்து உருவாக்கப்பட்டால் அதற்கு மூலதன செலவு என்று பெயர். மத்திய அரசுக்கு வட்டி அல்லது வருவாயை ஈட்டித் தரும் வகையில் மாநில அரசுகள், நிறுவனங்கள் போன்றவற்றிற்கு வழங்கும் கடன்களை இதற்கு உதாரணமாகச் சொல்லாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+