20 நாட்களில் தமிழ் கற்ற ரஜினி... 'நண்பேன்டா' ராஜ் பகதூர்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பர் ராஜ் பகதூருடனான சந்திப்பின் தொடர்ச்சி...
மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட்டில் படித்தபோது ரஜினி நடித்த ஒரு நாடகத்தைப் பார்க்க வந்திருந்தார் இயக்குனர் கே.பாலசந்தர். ரஜினியோடு பலர் நடித்திருந்தாலும் ரஜினி அவரை ஈர்த்திருக்கிறார். அவரைக் கூப்பிட்டு, நீ தமிழ் கத்துக்கோ என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார் பாலசந்தர். இதை ரஜினி என்னிடம் வந்து கூறியபோது, முதல்ல தமிழ் கத்துக்க. பாலசந்தர் உனக்கு வாய்ப்பு தருவார் என்று நினைக்கிறேன் என்றேன்.

ரஜினிக்கு யார் தமிழ் சொல்லித் தந்தது?
பாலசந்தர் தமிழ் கற்கச் சொல்லிவிட்டுப் போனதால் நானே ரஜினிக்கு தமிழ் சொல்லித் தர ஆரம்பித்தேன். அப்போது ரஜினிக்கு மிகக் கொஞ்சமே தமிழ் தெரியும். நான் பெங்களூரில் செட்டில் ஆன தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் நானே ரஜினிக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன்.

'என்னடா தமிழ் பேசுறே'..
அப்போது, டேய் இனிமே நீயும் நானும் தமிழ்ல தான் பேசுரோம் என்றார் ரஜினி. இதையடுத்து இருவரும் கன்னடத்தை விட்டுவிட்டு தமிழில் பேச ஆரம்பித்தோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அடுத்த 15, 20 நாட்களில் மிகச் சரளமாக தமிழ் பேச ஆரம்பித்துவிட்டார் ரஜினி. எனக்கு ஆச்சரியமாக இருந்தது ரஜினியின் வேகம். அவருக்கு எதிலுமே வேகம் தானே. அதே ரஜினி இப்போது என்னிடம், 'என்னடா தமிழ் பேசுறே'.. என்று திட்டுறான்.

பாலசந்தரை அசத்திய ரஜினி:
தமிழை மிகச் சரளமாக பேச ஆரம்பித்தவுடன் மீண்டும் மெட்ராஸ் போன ரஜினி நேராக பாலசந்தரைப் போய்ப் பார்த்து தமிழில் மடமடவென பேச அவர் அசந்து போயிருக்கிறார். இதையடுத்து அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிக்கு வாய்ப்பு தந்தார்.

வில்லன் ரோல் கேட்ட ரஜினி:
இதையடுத்து உனக்கு ஹீரோ ரோல் வேணுமா, வில்லனா நடிக்கிறியா என்று பாலசந்தர் கேட்க, நான் வில்லன் ரோல் செய்றேனே் என்று தனது வில்லத்தனத்தைக் காட்டினார் ரஜினி. இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்த படங்களில் வில்லன் ரோல் தந்தார் பாலசந்தர்.
வித்தியாசமான வில்லனாக, யதார்த்தமான ஹீரோவாக தமிழக மக்களின் மனதைக் கவர்ந்தார் ரஜினி.

ரஜினி இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் ஆவார் என நீங்கள் நினைத்ததுண்டா?
சத்தியமாக இல்லை. அவருக்குள் நல்ல நடிகன் இருக்கிறான். அவர் நிச்சயம் நடிகராவார் என்று நினைத்தேனே தவிர, இவ்வளவு பெரிய ஸ்டார் ஆவார் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை.
(ரஜினி கண்கலங்க வைத்த நிமிடங்கள்.... தொடரும்)
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications