சனி கிரகத்திலிருந்து பூமியை பார்த்தால்!
-ஏ.கே.கான்
சனி கிரகத்தையும் அதன் வளையங்களையும் இந்த கிரகத்தின் 60 நிலாக்களையும் ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாஸாவின் காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம். 1997ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி டைடன் ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது இந்த விண்கலம்.
(கிரிஸ்டியன் ஹியூஜென்ஸ் தான் 1655ம் ஆண்டில் சனி கிரகத்தை சுற்றி வளையம் இருப்பதைக் கண்டுபிடித்தவர். டொமினிகோ காசினி தான் இது ஒரு வளையம் அல்ல, ஏராளமான வளையங்கள் என்பதை கண்டுபிடித்தவர்)

16 வருட பயணம்:
சுமார் 16 வருட பயணத்துக்குப் பின், 1,195,772,020 கிலோமீ்ட்டர் தூரத்தைக் கடந்து, 2004ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி இது சனி கிரகத்தை நெருங்கியது காசினி. வழியில் 1998ம் ஆண்டிலும் 1999ம் ஆண்டிலும் வீனஸ் கிரகத்தையும், 1998ம் ஆண்டு நமது நிலவையும், 1999ம் ஆண்டு பூமியையும், 2000ம் ஆண்டு ஜூபிடர் கிரகத்தையும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டுச் சென்றது இந்த விண்கலம்.

உந்து சக்தி:
பூமியையும், வீனஸ், ஜூபிடர் கிரகங்களையும் இந்த விண்கலம் சுற்றியபோது இந்த கோள்களின் தள்ளு சக்தியை தனக்கான உந்து சக்தியாக மாற்றிக் கொண்டு பெரும் தூரங்களை கடந்தது காசினி விண்கலம்.

சுமார் 30 ஆண்டுகள்:
சனி கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 29.46 ஆண்டுகள் ஆகும். (பூமி 365 நாட்களில் சுற்றி வந்துவிடுகிறது)
இதுவரை சனி கிரகத்தை 60 நிலவுகள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது (இது நமது சூரிய குடும்பத்தில் உள்ள நிலவுகளில் 40% ஆகும்). ஆனால், மேலும் பல நிலாக்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வளையங்கள்.. வளையங்கள்.. வளையங்கள்:
சனி கிரகத்தின் வளையங்கள் தோலின்ஸ், சிலிக்கேட்டுகள் உள்ளிட்ட ரசாயணங்களாலும், மிக நுண்ணிய தூசியாலும், பெரிய பாறைகளாலும், பனிக்கட்டிகளாலும் உருவானவை. இந்த வளையங்களுக்குள்ளும் பல நிலாக்கள் உள்ளன. இந்த வளையங்களின் அகலம் 30 கி.மீ முதல் 3 லட்சம் கி.மீ. வரை வேறுபடுகிறது. சில வளையங்கள் சனி கிரகத்தை எதிர் திசையில் கூட சுற்றிக் கொண்டுள்ளன.

டைட்டனில் தரையிறங்கி...
இந்த கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட காசினி-ஹியூஜென்ஸ் விண்கலத்தில் இருந்து ஹியூஜென்ஸ் துணைக்கலம் பிரிந்து 2004ம் ஆண்டில் சனி கிரகத்தின் முக்கிய நிலாவான டைட்டனில் நுழைந்து, தரையிறங்கி படங்களை எடுத்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

மிக மிகச் சிறிய பூமி, அதைவிட சிறிய நிலா:
கடந்த வாரம் சனி கிரகத்தின் எதிர் திசையை அடைந்துவிட்டது காசினி விண்கலம். அங்கிருந்து சனி கிரகத்தையும் பூமியையும் ஒரு சேர படம் பிடித்து ஆரம்பித்துள்ளது. சனி கிரகத்தில் இருந்து பார்த்தால் பூமி ஒரு மிகச் சிறிய புள்ளியாகத் தெரிகிறது. அதிலும் நமது நிலா மிக மிகச் சிறிய ஒரு புள்ளியாகக் காட்சி அளிக்கிறது.

எளிய காரியம் அல்ல:
சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகமான பூமியை மிகத் தொலைவில் இருந்து படம் பிடிப்பது எளிய காரியம் அல்ல. பூமியை நோக்கி காசினியின் தொலைநோக்கிகள் திருப்பப்பட்டால் சூரிய வெளிச்சம் காரணமாக பூமியின் உருவம் மங்கிவிடும். படம் பிடிக்கவே முடியாத அளவுக்கு மங்கிவிடும்.

சனி கிரகத்தின் நிழலில்:
ஆனால், கடந்த 19ம் தேதி காசினி விண்கலம் சனி கிரகத்தின் பின் பக்கத்தை அடைந்தபோது, அந்த கிரகம் சூரிய கதிர்களை மறைத்து, காசினி விண்கலத்துக்கு ஒரு நிழல் போல் அமைந்துவிட, உடனடியாக பூமியை நோக்கி தனது தொலைநோக்கிகளைத் திருப்பி மடமடவென படங்கள் பிடிக்க ஆரம்பித்தது காசினி.
சூரியனின் ஒளியால் மிளிரும் பூமியையும் அதன் துணை கிரகமான நிலாவையும் காசினி படம் பிடித்து அனுப்ப மகிழ்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கின்றனர் நாஸா விஞ்ஞானிகள்.

ரொம்ப சின்ன ஆளுங்க...
இந்த மாபெரும் அண்ட சராசரத்தில் நமது பூமி எவ்வளவு சிரியது.. நாம் எவ்வளவு சிரியவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியிருக்கிறது காசினி விண்கலம்.
இந்த 5 சென்ட் நிலம் என்னுடையது... இந்த பில்டிங் என்னோடது.. என்று யாராவது இனிமேல் ரொம்ப திமிரோடு கூறினால் அவர்களுக்கு காசினி எடுத்து அனுப்பிய பூமியின் இந்தப் படங்களைக் காட்டுங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications