India
 • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யாவில் வெடித்தது அமெரிக்காவின் ''கிலோ பவருக்கு'' போட்டியான அணு உலை?!

Google Oneindia Tamil News
  ரஷ்யாவில் வெடித்தது அமெரிக்காவின் போட்டியான அணு உலை?!

  (வெடித்தது ரஷ்ய ஏவுகணை தான், ஏன் அணுக்கதிர் வீச்சு பரவியது..?- மூடி மறைக்கப்படும் எதிர்கால ஆயுதங்கள்!- தொடர்ச்சி)

  -ஏ.கே. கான்

  கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாஸாவும் தேசிய அணு சக்தி பாதுகாப்புத்துறையும் இணைந்து ஆரம்பித்த திட்டம் தான் கிலோ பவர்.

  விண்வெளியில் நெடுந்தூரம் பயனிக்க உதவும் வகையில் அணு சக்தியைக் கொண்டு இயங்கும் விண்கலங்களை வடிவமைப்பதே இந்தத் திட்டம். அணுச் சிதைவு மூலம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை இயங்கக் கூடிய ராக்கெட் பூஸ்டர்களை அமெரிக்கா உருவாக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த வகையான ராக்கெட்களின் சோதனையையும் அமெரிக்கா செய்து முடித்துவிட்டதோடு அடுத்த கட்டமாக அவற்றை பயன்படுத்தும் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டது.

  Russia’s Deadly Nuclear Explosion was not missile accident, it was counter- Kilo Power research going wrong!

  விண்வெளி பயணத்துக்கு மட்டுமின்றி இந்த கலங்களை வைத்தே எதிர்காலத்தில் நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் மனிதன் தங்குவதற்குத் தேவையான மின்சாரத்தையும் தயாரிக்கும் ஆராய்ச்சிகளும் நாஸாவில் தொடங்கியுள்ளன.

  10 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் மிகச் சிறிய 4 கிலோபவர் யூனிட்களை வைத்து 10 முதல் 15 ஆண்டுகளுக்குத் தேவையான மின்சாரத்தை நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் தயாரித்துவிட முடியும் என்பது தான் இதன் சிறப்பு. இத்தனைக்கும் இதில் பயன்படுத்தப்படவுள்ள யுரேனியம் -235 தனிமத்தின் அளவு ஒரு சோப்பு டப்பா சைஸ் தான். ஒரு யூனிட்டின் மொத்த எடையே 134 கிலோ தான்.

  Russia’s Deadly Nuclear Explosion was not missile accident, it was counter- Kilo Power research going wrong!

  இந்த வகை யான அணு மின் சக்தி யூனிட்களை முதலிலேயே செவ்வாய் கிரகத்தில் நிர்மாணித்து மின்சாரம் தயாரிக்க ஆரம்பித்து, ஆக்ஸிஜன், தண்ணீர் உள்ளிட்ட உயிர் வாழத் தேவையான அடிப்படை விஷயங்களை அங்கேயே தயாரித்து, மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழலுடன் கூடிய ஆய்வகத்தை உருவாக்கிவிட்டு பின்னர் மனிதனை அங்கே அனுப்புவது தான் நாஸாவின் லேட்டஸ்ட் திட்டமாகும்.

  40 கிலோவாட் கொண்ட யுரேனியம் ரியாக்டரைக் கொண்டு 6 பேரை நிலவிலோ, செவ்வாய் கிரகத்திலோ வாழ வைத்துவிட முடியும் என்கிறது நாஸா.

  செவ்வாய் கிரகம் போன்ற மிக ஆபத்தான சுற்றுச்சூழலில் இந்த அணு சக்தி யூனிட்களை இயக்குவது பெரும் சவாலான விஷயமாகும். சூரிய குடும்பத்தில் உள்ள எந்தக் கோள்களிலும் இல்லாத அளவுக்கு இங்கே அடிக்கடி கிளம்பும் மாபெரும் தூசிப் புயல்கள் மாதக்கணக்கில் மொத்த கிரகத்தையும் மறைப்பதுண்டு. ஆனால், இதையெல்லாம் கணக்கில் வைத்து மிகப் பாதுகாப்பான அணு மின் யூனிட்களை உருவாக்கி வருவதாக நாஸா கூறுகிறது.

  Russia’s Deadly Nuclear Explosion was not missile accident, it was counter- Kilo Power research going wrong!

  2022ம் ஆண்டுக்குள் இந்த மின் யூனிட்கள் நிறுவுவதற்குத் தயாராகிவிடும் என்று நாஸா கருதுவதாக ஸ்பேஸ்.காம் தெரிவிக்கிறது.

  இப்போது மீண்டும் ரஷ்யாவின் ஏற்பட்ட அணுக் கதிர்வீச்சுக்கு வருவோம்.

  அணு சக்தியைக் கொண்டு இயங்கும் ஏவுகணைக்கான ஆராய்ச்சியின்போது ஏவுகணை வெடித்ததில் அதில் ஏற்றப்பட்டிருந்த அணுக் கதிர்வீச்சு கொண்ட எரிபொருள் வானில் பரவியதால் தான் கதிர்வீச்சு பரவியதாக ரஷ்யா கூறி வருகிறது. ஆனால், இதை அமெரிக்கா முழுமையாக நம்பவில்லை.

  அணு சக்தி எரிபொருள் கொண்ட ஏவுகணை தயாரிப்பு ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் பல நாடுகளிலும் நடந்து வந்தாலும், வட ரஷ்யாவின் அர்கான்ஜெல்ஸ்க் பகுதியில் வெடித்தது கிலோபவருக்குப் போட்டியாக அந்த நாடு உருவாக்கி வரும் ஒரு யூனிட் வெடித்தது தான் என்கிறார்கள் அமெரிக்க உளவுப் பிரிவினரான சிஐஏ.

  காலாவதியான ஒரு பழைய அணு சக்தி யூனிட்டை வடிவம் மாற்றி கிலோபவர் மாதிரி கைக்கு அடக்கமான ஒரு யூனிட்டை உருவாக்க நடந்து வரும் ரஷ்ய ஆராய்ச்சியின்போது நடந்த தோல்வி தான் இந்த விபத்து என்கிறது சிஐஏ.

  செவரோட்வின்ஸ்க் அருகே உள்ள கடற்படைத் தளத்தில் தான் ரஷ்யாவின் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் ரஷ்ய அணு ஆராய்ச்சி நிறுவனமான ரோஸடோமின் ஒரு முக்கிய கேந்திரமும் இந்தத் தளத்தில் உள்ளது.

  சோவியத் யூனியன் உடைந்த 1990களில் இருந்தே விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்ய கடற்படையின் பங்கு பல மடங்கு அதிகரித்து வருவதையும் சிஐஏ சுட்டிக் காட்டியுள்ளது.

  இந்த கிலோபவருக்குப் போட்டியான விண்வெளி அணு சக்தி யூனிட்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியை மற்ற நாடுகளின் கண்ணில் இருந்து மறைக்கவே, அணு சக்தியை எரிபொருளாகக் கொண்ட ஏவுகணைகளை உருவாக்க ஆரம்பித்துள்ளதாகவும், அதற்கான ஆராய்ச்சிகள் நடப்பதாகவும் ரஷ்யா தானாகவே முன் வந்து ஒரு கட்டுக் கதையை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டதாக சிஐஏ கருதுகிறது.

  இந் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு ட்வீட் முக்கியத்துவம் பெருகிறது. ரஷ்யாவின் விபத்து நடந்து பல நாட்கள் வரை அமைதி காத்த ட்ரம்ப், கடந்த 13ம் தேதி வெளியிட்ட ட்வீட்டில்,

  ''ரஷ்யாவில் ஒரு ஏவுகணை சோதனை தோல்வியடைந்துவிட்டதாக தெரிய வருகிறது. இதே மாதிரியான ஏவுகணை, அவர்களை விட மேம்பட்ட தொழில்நுட்பம் எங்களிடமும் உள்ளது. ரஷ்யாவின் ''ஸ்கைபால்'' ஏவுகணை வெடிப்பும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகளும் நெடுந் தூரத்துக்கு சுற்றச்சூழலை மாசுபடுத்தியுள்ளது. கவலையாக உள்ளது!'' என்று கூறப்பட்டிருந்தது.

  இங்கே ட்ரம்ப் குறிப்பிட்டதது ஏவுகணையை அல்ல, கிலோபவருக்கு போட்டியாக ரஷ்யா உருவாக்கிவரும் அணு சக்தியை. ஆனால், ரஷ்யா சொல்லும் அதே பொய்யை வைத்தே, எங்களுக்கும் நீங்கள் சொல்வது பொய் என்று தெரியும்.. ஆனா நாங்க நம்பிட்டோம் என்று ரஷ்யாவின் தோல்வியை கிண்டலடித்து ஓட்டும் வகையிலான ட்வீட் இது என்கிறார்கள் சர்வதேச விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள்.

  பாம்பின் கால் பாம்பறியும்!

  English summary
  The exlposion near Severodvinsk looks like it was caused by an experiment for Russia’s space program. Since the 1960s radioisotopic power systems have been used in outer space. They are small and need just a few people to operate them. The accident could have involved a small fission reactor using uranium-235 similar to NASA’s Kilopower project for interplanetary missions.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X