தவெக அரசு நிறைவேற்றிய தனியார் கல்லூரி மசோதா.. விஜய் சத்தமே இல்லாமல் சம்பவம்.. நெட்டிசன் கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் கல்லூரி மசோதா ஒன்று நேற்று முன்தினம் தவெக அரசு நிறைவேற்றியது. இந்த மசோதா மூலம் பல புகழ் பெற்ற கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறும் என கூறப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பலரும் பாதிக்கப்படுவார்கள் என கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முன்னதாக இதே மசோதாவை திமுக ஆட்சியில் கொண்டுவர முயற்சி செய்த போது கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த மசோதா தற்போது நிறைவேறி உள்ள நிலையில், இனி என்ன மாற்றம் தமிழக உயர் கல்வியில் நடக்க போகிறது என்பதை Nordnomad என்ற பெயரில் இயங்கும் எக்ஸ் தள பிரபலம் விளக்கி உள்ளார். அவரது பதிவினை அப்படியே பார்ப்போம்.

"நேற்று முன்தினம் வந்த தனியார் கல்லூரி மசோதாவுக்கு பல்வேறு ஆட்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உண்மையிலே இது சிறப்பான திட்டம். திமுக அரசு இருந்த போதும் 2025 அக்டோபர் மாதம் இதே போல ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவர முயற்சித்தார்கள். அது ஏற்கனவே செயலில் இருந்த அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் கூட தங்களை பல்கலைக்கழகங்களாக மாற்றி கொள்ளலாம் என்றும் நகர்ப்புற இடங்களில் 25 ஏக்கரும், நகராட்சி பகுதிகளில் 35 ஏக்கரும், கிராமப்புற பகுதிகளில் 50 ஏக்கரும் இருந்து 50 கோடி பணமும் இருந்தால் பல்கலைக்கழகங்களாக மாற்றி கொள்ளலாம் என்று சொல்லி இருந்தார்கள். உடனே எல்லாரும் குதித்து எழுந்து அரசு உதவிபெறும் கல்லூரிகளை எப்படி மாற்றலாம் என்று எதிர்ப்பு வரவே அதை மறுபரிசீலனை செய்வோம் என்று நிறுத்தி விட்டார்கள்.

A netizen s opinion on the potential impact of the private college bill passed by the TVK government

இப்போது வந்த தவெக அரசு அதை மாநகராட்சியில் 12 ஏக்கர்கள், நகராட்சி பகுதிகளில் 18 ஏக்கர், கிராமப்புறங்களில் 25 ஏக்கர் எனவும் மாற்றி இருக்கிறார்கள்.டிரஸ்ட்ல இருக்க வேண்டிய பணமாக 25 ஏக்கர் என்று குறைத்து இருக்காங்க. யுஜிசி விதிப்படி பார்த்தால் மாநகராட்சியில் 5 ஏக்கர்,நகராட்சியில் 7 ஏக்கர், கிராமப்புறங்களில் 10 ஏக்கர் போதும். corpus fund 25 கோடி போதும்.

தனியார் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் ஆவது நல்லது தான். காலம் பூரா உள்கட்டமைப்பு, ஆட்கள் இருந்தும் சம்பளம் போட கூட முடியாமல் தவிக்கும் சென்னை பல்கலைக்கழகம் கீழ் இயங்க சொல்கிறார்களா? இல்லை 4 வருஷத்துக்கு ஒரு முறை சிலபஸ் மாற்றினால் போதும் என்று இன்றும் 10 வருஷம் முன்னாடி வந்த விஷயத்தையே இன்று வரை சேர்க்காமல் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் கீழ் இருக்க சொல்றாங்களா? சென்னை பல்கலைக்கழகம் தற்போது அதன் corpus பணத்தை வைத்து தான் சம்பளம் போடுது. நிலைமை இப்படி இருக்க, வாயுள்ள பிள்ளை பிழைக்கும் போல தனியார் கல்லூரிகள் வளர அவர்கள் தங்கள் potential வெளிக்காட்ட இந்த முடிவு நன்மையே பயக்கும். இன்றைக்கு VIT அண்ணா பல்கலைக்கழகத்தை விட சிறப்பான பல்கலைக்கழகம். அதே போல நிறைய கல்லூரிகள் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆனால் இது போன்ற சிறப்பான கல்வியை கொடுக்க இயலும்.

இல்லை ஏழைகளுக்கு இது எட்டாக்கனி ஆகும் என்றும், வறுமை ஏற்படும் என்றும், கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு பேசுவதை விட்டுவிட்டு ஆழ்ந்து யோசித்தால் நல்லது. எல்லா பல்கலைக்கழகங்களும் சிறப்பாக இயங்குமா என்றால் யார் சிறப்பான கல்வி தருகிறார்களோ அவர்கள் பிழைப்பார்கள், மீதி ஆட்கள் எல்லாம் காலப்போக்கில் காணாமல் போயி விடுவார்கள். இன்றைக்கு PRIST பல்கலைக்கழகம் ஆனதை போல. அவ்வளவு தான்.

A netizen s opinion on the potential impact of the private college bill passed by the TVK government

இதுக்கு நடுவுல SSN பொறியியல் கல்லூரி தனியார் பல்கலைக்கழகம் ஆகிவிட்டது தெரியுமா என்று, அவங்களும் எவ்வளவு நாள் தான் சிலபஸ் அப்டேட் பண்ணுங்க, administrative எல்லாம் சீக்கிரம் முடிவு எடுங்கள் என்று 15 வருஷமாக அண்ணா பல்கலைக்கழகத்தை கெஞ்சிட்டு இருந்தார்கள். ஒரு கட்டத்தில் SNU கீழே செல்வது நலம் என்று முடிவு எடுத்துவிட்டார்கள். இதுல தவறு ஒன்றும் இல்லை.

தவெக அரசை கடிக்க எனக்கு ஆயிரம் விஷயம் இருந்தாலும் இந்த ஒரு விஷயம் சிறப்பான முடிவு தான். திமுக செய்ய நினைத்த விஷயத்தை பெரிய எதிர்ப்பே இல்லாமல் செய்து முடித்து இருக்கார் விஜய். நிர்வாக ரீதியாக அடுத்து வரும் அரசுகளுக்கு ஒரு பெரிய தடையை நீக்கி சரி செய்துள்ளார்" இவ்வாறு நெட்டிசன் தனது பதிவில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+