பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு.. மத்திய அரசின் புதிய திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி.. அதாவது என்ன தான் ஏட்டில் படித்தாலும், அந்த கல்வி நிஜவாழ்க்கையில் செயல்முறையாக பின்பற்ற தெரியாதவர்களுக்கு எந்த பலனும் இருப்பது இல்லை. இன்னும் தெளிவாக சொல்வது என்றால், டிரைவர் வேலைக்கு சேர விரும்புவோர் லைசென்ஸ் எடுத்துவிடலாம்.. ஆனால் வாகனத்தை ஓட்டத்தெரிந்தால் தான் வேலை கிடைக்கும்.

அதேபோல் என்ஜினியர் என்று படித்துவிடலாம், ஆனால் என்ஜினியர் என்பதற்கான திறமை இருந்தால் தான் வேலை கிடைக்கும். அதுதான் எதார்த்தம். எனவே தான் பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

Direct employment for students completing school education New Central Government scheme

என்னதான் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்தாலும், நிலையான வேலைவாய்ப்பு இன்னும் பல துறைகளில் இருக்கிறது. கணிணி சார்ந்த டெவலப்பர் துறை தொடங்கி எலக்ட்ரீசியன், பிளம்பர், பிட்டர், மெக்கானிக், சமையலர், நிதி நிபுணர் என பல துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் வேலை செய்யத்தான் சரியான திறமைசாலிகள் கிடைப்பது இல்லை.

அண்மையில் நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 80 சதவீதம் உயர்கல்வி மாணவர்களுக்கு போதிய செய்முறை அனுபவம் மற்றும் தொழில் துறை சார்ந்த பயிற்சி இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இதுபற்றி விரிவாக ஆய்வு செய்து வந்த மத்திய அரசு, பள்ளிப் பருவத்திலேயே தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழியை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க ட்டமிட்டுள்ளது. அதற்காக பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய தொழிலாளர் அமைச்சகமும், கல்வி அமைச்சகமும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மத்திய அரசின் இந்த புதிய திட்டத்தின் கீழ், மாணவர்களின் டிஜிட்டல் கல்வி அடையாள எண்ணான 'அபார்' கணக்கு, தொழிலாளர்களுக்கான 'இ-சிராம்' மற்றும் தேசிய வேலைவாய்ப்பு சேவைகள் (என்.சி.எஸ்.) ஆகிய தரவுத்தளங்களுடன் நேரடியாக இணைக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் மாணவர்களின் கல்வித் தகுதி மற்றும் திறமைகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் உடனுக்குடன் பரிந்துரைக்கப்பட இருக்கிறது.

பொதுவாகப் பள்ளிகளில் வழங்கப்படும் ஆலோசனைகள் உயர்கல்வி குறித்து மட்டுமே கவனம் செலுத்துவதாக இருக்கும். இனிமேல் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு தொழில் திறன் மேம்பாடு மற்றும் நேரடி வேலைவாய்ப்பு குறித்த சிறப்பு ஆலோசனைகளும் வழங்கப்பட இருக்கிறது. மேலும், 8-ம் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சிகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. படிக்கும் போதே தொழிற்கல்வி திறமைகளை மேம்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+