மும்பையில் நெரிசல் மிகுந்த பகுதியில் திடீரென தரையிறங்கி பீதியை கிளப்பிய விமானப் படை ஹெலிகப்டர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்- 17 ஹெலிகாப்டர் மும்பையில் உள்ள நெரிசல் மிகுந்த பந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தரை இறங்கிய ஹெலிகாப்டரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
விமானப் படையின் இந்த ஹெலிகாப்டர் வழக்கம் போல இன்றும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இதில் 4 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிற்பகல் 2.20 மணியளவில் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதில் ஹெலிகாப்டருக்கோ, அதில் பயணம் செய்தவர்களுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு தொழில்நுட்பக் குழுவினர் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications