Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact Check: உதயநிதி ஸ்டாலின் - அண்ணாமலை ரகசிய சந்திப்பு என பரவும் போலி தகவல்

Subscribe to Oneindia Tamil

கோவை: அண்ணாமலைக்கு எதிராக 'டம்மி' வேட்பாளரை நிறுத்த உதயநிதி ஸ்டாலினுடன் டீலிங் நடந்ததாக கூறி, அண்ணாமலை உடன் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை சிலர் பரப்பி வருகின்றனர். ஆனால், அந்த புகைப்படம் கடந்த 2022ல் உதயநிதி, அண்ணாமலை ஆகியோர் யதேச்சையாக ஒரு நிகழ்வில் சந்தித்துக் கொண்டபோது எடுத்த படம்.

லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுகவில் ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.

Did Annamalai met udhayanidhi stalin regarding lok sabha election

அண்ணாமலைக்கு எதிராக டம்மி வேட்பாளர்?: இந்நிலையில், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு எதிராக திமுக டம்மியான வேட்பாளரை களமிறக்கி உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. அண்ணாமலையுடன் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ரகசிய சந்திப்பு நடத்தியதாக சமூக வலைதளங்களில் சிலர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

பாஜக தலைவர் அண்ணாமலையை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளதாகவும், அண்ணாமலையுடன் 'டீல்' போட்டு, திமுக சார்பில் வெற்றி வாய்ப்பில்லாத வேட்பாளரை திமுக களமிறக்கி உள்ளதாகவும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர், அண்ணாமலை மற்றும் பாஜகவினருடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் இந்த புகைப்படம் தற்போது பரவி வருகிறது.

Did Annamalai met udhayanidhi stalin regarding lok sabha election

உண்மை என்ன?: ஆனால், பரப்பப்படும் இந்த புகைப்படம், கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷின் தாயார் புஷ்பா கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி காலமானார். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும்அஞ்சலி செலுத்தினார். அப்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது இருவரும் சந்தித்துக் கொண்டதால் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர், அப்போது, கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் உடல் நலன் குறித்து அண்ணாமலை கேட்டறிந்தார்.

Did Annamalai met udhayanidhi stalin regarding lok sabha election

2022ல் எடுக்கப்பட்ட புகைப்படம்: 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஐசரி கணேஷ் இல்லத்தில் அவரது தாயாருக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது யதேச்சையாக நடந்த இந்த உதயநிதி - அண்ணாமலை சந்திப்பு குறித்து நமது ஒன் இந்தியா தமிழ் தளத்திலும் அப்போது செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தைத் தான் தற்போது, லோக்சபா தேர்தல் நேரத்தில் பரப்பி, அண்ணாமலையும் உதயநிதி ஸ்டாலினும் சந்தித்துக் கொண்டதாகவும், அண்ணாமலைக்கு சாதகமாக டம்மி வேட்பாளரை திமுக களமிறக்கி உள்ளதாகவும் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

Fact Check

வெளியான செய்தி

அண்ணாமலையும் உதயநிதி ஸ்டாலினும் ரகசியமாக சந்தித்து தேர்தல் தொடர்பாக பேசியதாக புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.

முடிவு

கடந்த 2022ல் ஐசரி கணேஷ் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்த அண்ணாமலையும், உதயநிதியும் சென்றபோது யதேச்சையாக நடந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+