Fact Check: இந்திரா காந்தி காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவி வரும் போலி செய்தி! உண்மை என்ன?
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி விழுந்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து பார்க்கலாம்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலில் முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி விழுந்ததாக குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. உண்மையில், கருணாநிதி இந்திரா காந்தி காலில் விழுந்தாரா? இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது? என்பது குறித்துப் பார்க்கலாம்.

பரவி வரும் வீடியோ: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின், பரப்புரை செய்த போது, கூவத்தூரில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி சசிகலாவால் அறிவிக்கப்பட்ட போது, அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படத்தை காண்பித்தார்.
மேலும், இதுபோன்ற புகைப்படத்தை எடப்பாடி பழனிசாமி காட்டினால் நான் அரசியலில் இருந்தே விலகத் தயார் என்று சவால் விடுத்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் காலில் விழுவது போன்ற காட்சிகளை அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்திரா காந்தி காலில் கருணாநிதி விழுந்தாரா?: அப்படியான ஒரு வீடியோவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இந்திரா காந்தி காலில் விழுவதாக ஒரு காட்சியும் பரப்பப்பட்டு வருகிறது. ஒரு வீடியோவில் பேசும் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன், தனது செல்போனில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காலில் விழுந்து கருணாநிதி வணங்குகிறார் என்று ஒரு வீடியோவை காட்டிப் பேசியுள்ளார்.

கோவை சத்யன் அதில், கருணாநிதி இந்திரா காந்திக்கு மாலை அணிவித்து, அவரது காலில் விழுந்ததாக சொல்கிறார். ஆனால், இதுகுறித்து ஆய்வு செய்ததில், அந்த வீடியோவில் இருப்பது இந்திரா காந்தி அல்ல. திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான சி.என். அண்ணாதுரையின் மனைவி ராணி அம்மையார் எனத் தெரியவருகிறது.
உண்மை என்ன?: கருணாநிதி காலில் விழுவது போன்ற அந்த வீடியோ DMK4TN என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், சென்னை அண்ணா அறிவாலயத்தின் திறப்பு விழாவில், பேரறிஞர் அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையாரின் காலில் விழுந்து தலைவர் கலைஞர் ஆசி பெற்றார். அந்த வீடியோவை திரித்து மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் காலில் விழுந்ததாக புரளி கிளப்பும் அதிமுக பொய்யர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில், திமுக தலைவர் கருணாநிதியால் சென்னை தேனாம்பேட்டையில், திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. அப்போது, திமுக தலைவர் கருணாநிதி அண்ணாவின் மனைவி ராணி அம்மையார் காலில் விழுந்து ஆசி பெற்றபோது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயம் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, அதாவது, 1984ம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி இந்திரா காந்தி மறைந்தார். அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவில் ராணி அம்மையார் கருணாநிதியுடன் பங்கேற்ற புகைப்படங்களும் உள்ளன. ராணி அம்மையார் காலில் கருணாநிதி ஆசி பெறும் காட்சியை குறிப்பிட்டுத் தான் இந்திரா காந்தி காலில் கருணாநிதி விழுவதாக அதிமுக நிர்வாகி பேசியதும், அந்த வீடியோ சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருவதும் தெரியவந்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலில் விழுந்ததாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
முடிவு
அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டபோது முன்னாள் முதல்வர் அண்ணாவின் மனைவி ராணி அம்மையார் காலில் கருணாநிதி விழுந்த வீடியோ காட்சி, இந்திரா காந்தி காலில் விழுந்ததாக திரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது.
ரேட்டிங்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications