Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact Check: பாஜகவை புகழ்ந்து காங்கிரஸை தாக்கி பேசினாரா ராகுல் காந்தி? பரவி வரும் வீடியோ! உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பாஜகவை புகழ்ந்து பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் உண்மைத்தன்மை பற்றி பார்ப்போம்.

லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, தீவிரமாக தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

Did Rahul gandhi praises BJP for uniting india what is the truth

சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு: இந்த தேர்தலில் சமூக வலைதள பிரச்சாரங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும், தங்கள் வாக்குறுதிகளை சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்துகின்றன. எதிர்க்கட்சியை விமர்சித்தும் சமூக வலைதளத்தில் கருத்துகளை வெளியிடுகின்றன. சமூக ஊடகங்களை குறி வைத்து போலி செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உரைகள் இடம்பெறும் வீடியோக்கள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராகுல் காந்தியின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, பாஜக ஆதரவாளர்களால் அந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

ராகுல் காந்தி வீடியோ: அந்த வீடியோவில், “ஒருபுறம், பாஜக அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறது. மறுபுறம், காங்கிரஸ் கட்சி ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்தையும், ஒரு சாதியில் இருந்து மற்றொரு ஜாதியையும் பிளவு படுத்துகிறது” என்று ராகுல் காந்தி பேசுவது போல் இடம்பெற்றுள்ளது.

மதம் மற்றும் சாதியின் பெயரால் காங்கிரஸ் கட்சி மக்களை பிளவுபடுத்துகிறது என ராகுல் காந்தியே ஒப்புக்கொள்வதைபோல உள்ள அந்த வீடியோவை பகிர்ந்து, இது காங்கிரஸ் கட்சியின் யதார்த்தம் என்றும் ராகுல் காந்தி தனது சொந்த கட்சியை அம்பலப்படுத்தியுள்ளார் என்றும் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

உண்மை என்ன?: ஆனால், ராகுல் காந்தி பேசும் அந்த குறிப்பிட்ட வீடியோவின் அசல் வீடியோ கடந்த மார்ச் 2ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில் நடைபெற்ற பாரத ஒற்றுமை நியாய யாத்திரையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசிய காட்சி தான் அது.

ராகுல் பேசியது என்ன?: அந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசுகையில், “நம் நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே சண்டை நடக்கிறது. வெறுப்புக்கும் அன்புக்கும் இடையே நடக்கும் சண்டை. அகிம்சைக்கும் வன்முறைக்கும் இடையே நடக்கும் போராட்டம்.

ஒருபுறம் பாஜகவினர் மக்களை பிளவுபடுத்துகிறார்கள். ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதம், ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதியைப் பிரிப்பது, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்தைப் பிரிப்பது என பிரிவினையை விதைக்கிறார்கள். மறுபுறம், காங்கிரஸ் கட்சி அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது” எனப் பேசியுள்ளார்.

ராகுல் காந்தி, பாஜகவை விமர்சித்துப் பேசிய வீடியோவை, பாஜகவை புகழ்வது போலவும், தமது காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பது போலவும் போலியாக எடிட் செய்து, தேர்தல் ஆதாயங்களுக்காக சிலர் பரப்பி வருவது தெளிவாகியுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பாஜக நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது என பாராட்டி பேசுவது போல வீடியோ ஒன்று பரவி வருகிறது.

முடிவு

ராகுல் காந்தி, பாஜகவை விமர்சித்தும், காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது என்றும் பேசியது தவறாகத் திரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+