85 பைக்குகள் வாங்க ரூ.74.8 கோடி செலவு ஆனதா? உண்மை என்ன? தமிழக அரசு கொடுத்த விளக்கம்
சென்னை: தமிழக காவல்துறைக்கு 40 BAJAJ Pulsar இருசக்கர வாகனங்கள் 45 TVS Jupiter இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 85 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. இந்த 85 அதி நவீன இருசக்கர வாகனங்கள் ரூ.74.8 கோடி செலவில் வாங்கியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்ளில் பரப்பப்படுகிறது. இந்த தகவல் உண்மையா? என்பது குறித்து தமிழக அரசு விளக்க அளித்துள்ளது.
தமிழகத்தில் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் அரசு செயல்படுத்தி வருகிறது.

85 இருசக்கர வாகனங்கள்: அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை பெருநகர கவல்துறை பயன்பாட்டிற்காக 85 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 85 இருசக்கர வாகனங்களை காவல்துறைக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
தமிழக அரசு விளக்கம்: 40 BAJAJ Pulsar இருசக்கர வாகனங்கள் 45 TVS Jupiter இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 85 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், 85 பைக்குகளின் விலை ரூ.74.8 கோடி என சமூக வலைத்தலங்களில் செய்திகள் பரவின. ஆனால், இந்த தகவலில் உண்மை இல்லை என்றும் முற்றிலும் பொய்யானது என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பேக்ட் செக் குழு கூறியிருப்பதாவது:-
உண்மை என்ன?: சென்னை காவல்துறைக்கு ரூ.74.8 கோடி செலவில் 85 அதி நவீன இருசக்கர வாகனங்கள் வாங்கியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்ளில் பரப்படுகிறது. "ரூ.74.8 கோடி அல்ல. ரூ.74.08 லட்சம்"
வதந்தி: 24.07.2024 அண்டு சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 40 பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனங்கள் ரூ.39,38,500 செலவிலும் 45 ஜூபிடர் இருசக்கர வாகனங்கள் ரூ.34,69,500 செலவிலும் என 85 இருசக்கர வாகனங்களும் ரூ.74.08 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்பட்டு முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டது.

Fact Check
வெளியான செய்தி
'சென்னை காவல்துறைக்கு ரூ.74.8 கோடி செலவில் 85 அதிநவீன இருசக்கர வாகனங்கள்' வாங்கியதாக செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
முடிவு
ரூ.74.8 கோடி அல்ல. ரூ.74.08 லட்சம். 40 BAJAJ Pulsar இருசக்கர வாகனங்கள் ரூ.39,38,500 செலவிலும், 45 TVS Jupiter இருசக்கர வாகனங்கள் ரூ.34,69,500 செலவிலும், என மொத்தம் 85 இருசக்கர வாகனங்கள் ரூ.74.08 லட்சம
ரேட்டிங்
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications