Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Fact check: அல்லா அல்லா..! மாரியம்மன் கோவிலில் இஸ்லாமிய பாடல்! வீடியோவால் வந்த சிக்கல்.. உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை என்ற இஸ்லாமிய பாடல் ஒளிபரப்பப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உண்மையிலேயே கோயிலில் இஸ்லாமிய பாடல் ஒலிபரப்பப்பட்டதா? வீடியோவின் உண்மைத் தன்மை என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்

திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் மலைக்கோட்டை அருகே கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி பெருந்திருவிழா 10 நாட்களுக்கு மேலாக மிக பிரம்மாண்டமாக நடைபெறும்.

Fact Check tamilnadu Government temple

மதுரை சித்திரை திருவிழாவைப் போல திண்டுக்கல்லுக்கு கோட்டை மாரியம்மன் கோவில் என்றால் மிகவும் பிரசித்தம். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள்.

குறிப்பாக வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் ஏராளமான மக்கள் கோட்டை மாரியம்மன் பொது மக்கள அம்மனை வழிபாடு செய்வது வழக்கம். இது மட்டுமல்லாமல் ஆடி மாதத்தின் அனைத்து நாட்களிலும் கோட்டை மாரியம்மன் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

கோவிலின் அருகே திருமண மண்டபமும் இருக்கும் நிலையில் அங்கு அடிக்கடி திருமணங்கள் நடைபெறும். அது மட்டுமல்லாமல் அரசு நிகழ்ச்சிகள், பாட்டு கச்சேரிகள், நாடகங்கள், அரங்கேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பின்னணியில் 'அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை' என்ற இஸ்லாமிய பாடல் ஒலிக்கிறது. இப்போது அந்த வீடியோவை," திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அல்லா அல்லா பாடல்.. இந்து சமய அறநிலையத்துறை அல்லா அல்லா". என அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் மாரியம்மன் கோவிலில் இஸ்லாமிய பாடலை ஒளிபரப்பிய அதிகாரி சமூக வலைதளங்களில் இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

Fact Check tamilnadu Government temple

இந்த நிலையில் அதன் உண்மைத் தன்மை குறித்து உண்மை சரிபார்க்க விசாரித்த போது அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாடல் ஒலிபரப்பட்டது உண்மைதான். ஆனால், கோவிலில் இல்லை என தெரிய வந்துள்ளது. அந்த வீடியோ கடந்த ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டுள்ளது. கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் கலையரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த கலையரங்கத்தில் தமிழ்நாடு மேடை மெல்லிசைக் கலைஞர்கள் சங்கம் சார்பாக, மறைந்த இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கச்சேரி ஒன்று நடைபெற்றது.

திண்டுக்கல்லில் புகழ்பெற்ற அங்கிங்கு இசைக் குழு நடத்திய அந்த நிகழ்ச்சியில், இந்து, இஸ்லாமிய கிறிஸ்தவ பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அந்த பாடல்களை பாடிய போது இஸ்லாமிய பாடல் ஒலிக்கும் போது மட்டும் வீடியோ எடுத்து இந்து கோயிலில் இஸ்லாமிய பாடல் என பரப்பப்பட்டு வருகிறது. இந்த தகவலை கோயில் நிர்வாகமும் இசை குழுவினரும் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்து கோயிலில் இஸ்லாமிய பாடல் ஒளிபரப்பப்பட்டதாக வரும் தகவல் தவறானதாகும்.

Fact Check

வெளியான செய்தி

”திண்டுக்கல் மாரியம்மன் கோவிலில்.. இஸ்லாமிய மதப் பாடல் ஒலிபரப்பப்பட்டது.. அல்லா அல்லா ...அறநிலையத்துறை அல்லா அல்லா ..” என்ற தலைப்பில் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிற்து

முடிவு

பாடல் ஒலிபரப்பட்டது உண்மைதான். ஆனால், கோவிலில் இல்லை. கோவில் வளாகத்தில் கடந்த ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, மும்மத பாடல்கள் பாடப்பட்டன. இஸ்லாமிய பாடல் ஒலிக்கும் போது மட்டும் வீடியோ எட

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+