Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனஅழுத்தம்.. ஜெயிலில் தூக்கம் வராமல் கழுத்தில் குத்திய இம்ரான் கான்! பரவும் வீடியோ.. உண்மையா?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அவர் தூக்கமின்றி மனஅழுத்தத்தில் கழுத்தில் குத்தும் வீடியோ ஒன்று வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இது இம்ரான் கான் கட்சியினரை வருத்தமடைய செய்துள்ள நிலையில் அந்த வீடியோவின் உண்மை நிலை பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் இம்ரான் கான் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் கூட்டணி ஆட்சியை அமைத்து பாகிஸ்தான் பிரதமரானார்.

Fact Check: A video of former Pakistan PM Imran Khan looking visibly distressed in jail, Is it true?

அதன்பிறகு சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தன. புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய 2 நாட்கள் இருந்த நிலையில் முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் கடந்த 5ம் தேதி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பிரதமராக இருந்தபோது தனக்கு பரிசாக வந்த வாட்ச், பேனா உள்பட பல்வேறு பரிசு பொருட்களை கருவூலத்தில் ஒப்படைக்காமல் கருவூலத்தில் ஒப்படைக்காமல் ஊழல் செய்த வழக்கில் இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Fact Check: A video of former Pakistan PM Imran Khan looking visibly distressed in jail, Is it true?

இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இம்ரான் கான் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறார். கண்களை மூடியபடியே இருக்கிறார். மேலும் திடீரென்று தனது கழுத்து பகுதியில் கைகவிரல்களால் குத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ பரப்புவோர் இம்ரான் கான் மனஉளைச்சலில் உள்ளார். இதனால் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பதை தான் நீங்கள் பார்க்கிறீர்கள். இந்த வீடியோ அவரது 3வது நாள் சிறை வாசத்தின்போது எடுக்கப்பட்டது. அவர் நிச்சயம் மாபியா கும்பலை எதிர்ப்பார் என ஆதரவாக கமெண்ட் செய்து பரப்பி வருகின்றனர். அதேவேளையில் இம்ரான் கானுக்கு எதிரானவர்கள் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கானுக்கு எப்படி மினரல் வாட்டர் கிடைத்தது? அவர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறாரா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனால் இந்த வீடியோ என்பது விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான் அந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்த பல செய்தி நிறுவனங்கள் ஆய்வு செய்தன. அப்போது தான் அந்த வீடியோ சிறையில் எடுக்கப்பட்டது இல்லை என்பது தெரியவந்தது. மேலும் இம்ரான் கானின் பழைய வீடியோவை எடிட் செய்து அதனை சிறையில் இருப்பது போல் சிலர் பரப்பி வரும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இந்த வீடியோ என்பது கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இம்ரான் கான் பேசியது வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோவில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து எடிட் செய்தவர்கள் இம்ரான் கான் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது போலவும், அவர் தூக்கமின்றி மனஅழுத்தத்தில் தவிப்பது போலவும் செய்திகளை பரப்பி வருவது கண்டறியப்பட்டது.

Fact Check

வெளியான செய்தி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் மனஅழுத்தத்துடன் தூக்கமின்றி தவித்து வருகிறார்.

முடிவு

இந்த வீடியோ என்பது சிறையில் எடுக்கப்பட்டது அல்ல. ஆகஸ்ட் 1ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இம்ரான் கான் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+