Fact Check:கீழே இருக்கும் பணத்தை முண்டியடித்து சேகரிக்கும் குழந்தைகள்! வீசியடித்தது ராணி எலிசபெத்தா?
லண்டன்: ராணி எலிசபெத் இறந்தவுடன் அவர் குறித்து ஏராளமான தகவல்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
மகாராணியாக 70 ஆண்டுகள் பதவி வகித்தவர் இரண்டாம் எலிசபெத். ராணிக்கு பிடித்த விஷயம், பிடித்த இடம், பிடித்த உணவு, முக்கிய பொழுதுபோக்கு, அவரது பழக்க வழக்கம் என பல விஷயங்களை தெரிந்துக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் எலிசபெத் ராணி குறித்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ராணி போன்று உடையணிந்திருக்கும் பெண் ஒருவர் காசுகளை தூக்கிவீசுகிறார், அதை ஏழை குழந்தைகள் கீழே ஓடி சென்று எடுக்க போட்டி போடுகிறார்கள்.

வீடியோ
இந்த வீடியோ பார்ப்பதற்கு மனம் வருந்த செய்கிறது. ஏழைகளை இப்படியா நடத்துவது, கைகளில் காசுகளை கொடுத்தால் ஆகாதா? ஏழைகள் என்ன தீண்டாத் தகாதவர்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டன. நெட்டிசன் ஒருவர் ஒரு படி மேலே போய் கோழிகளுக்கு தீவனம் தூவுவது போல் ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு உணவை வீசுகிறார், இவரா ராணி எலிசபெத்? இப்படி ஒரு ராணிக்கு "Rest in Peace" என சொல்கிறீர்களா என கேள்வி எழுப்பியிருந்தார்.

எளிமை
ராணி எலிசபெத் மிகவும் எளிமையானவர், அவர் மக்களால் போற்றப்படுபவர். தனக்கான உரிமைகள் நிறைய இருந்த போதிலும் அவர் எதையும் மீறாதவர். எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாதவர். அப்படிப்பட்டவர் இது போன்று குழந்தைகளை நடத்தியிருப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

உண்மைத்தன்மை
இதையடுத்து இந்த வீடியோவின் உண்மைதன்மை குறித்து ஆராய்ந்த போதுதான், அந்த வீடியோவில் வருவது ராணி எலிசபெத் அல்ல. இந்த வீடியோ ஒரு அமெரிக்க காலனியில் எடுக்கப்பட்டது. அதாவது 1899 ஆம் ஆண்டு முதல் 1900ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. பகோடா எனும் பெண்களுக்கு முன்பு அன்னமீஸ் குழந்தைகள் பணத்தை எடுக்கிறார்கள் என்ற தலைப்பில் இந்த படம் கடந்த 1901 ஆம் ஆண்டு வெளியானது. அதாவது ராணி எலிசபெத் பிறப்பதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ இது.

எலிசபெத் இல்லை
அந்த வீடியோவில் இருந்த பெண் பார்ப்பதற்கு எலிசபெத் ராணி போல் உள்ளார். இந்த வீடியோவை எடுத்தவர் கேப்ரியல் வேரி என்பவரால் 1899 ஆம் ஆண்டு முதல் 1900 ஆம் ஆண்டு பிரெஞ்ச் காலனி வியத்னாமில் எடுக்கப்பட்டது. ஆனால் எலிசபெத் ராணி 1926 ஆம் ஆண்டுதான் பிறந்தார்.

Fact Check
வெளியான செய்தி
ஆப்பிரிக்க பிரிட்டிஷ் காலனியில் ராணி எலிசபெத், குழந்தைகளுக்கு பணத்தை வீசி அடித்து அவர்கள் முண்டியடித்து அதை எடுக்கும் காட்சி.
முடிவு
இந்த வீடியோ பிரென்ச் திரைப்பட தயாரிப்பாளர் கேப்ரியல் வேரியால் 1899- 1900 ஆம் ஆண்டு வியத்னாமில் எடுக்கப்பட்டது. ஆனால் ராணி எலிசபெத் 1926இல்தான் பிறந்தார்.
ரேட்டிங்
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications