FACT CHECK: தமிழ்நாடு பட்ஜெட் காப்பி.. பாஜகவை சேர்ந்த அண்ணாமலை, வானதி சீனிவாசன் சொன்னது உண்மையா?
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்த கருத்துக்களின் உண்மைத் தன்மை குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விரிவான விளக்கத்தை வெளியிட்டு இருக்கிறது.
இதுகுறித்து அந்த குழு வெளியிட்டு இருக்கும் உண்மை கண்டறியும் பதிவில், "கைவினைஞர் மேம்பாட்டுத்திட்டமும், விஸ்வகர்மா திட்டமும் வெவ்வேறானவை:

வதந்தி: "மத்திய அரசின் விஸ்வகர்மா நலத்திட்டத்திற்கு தமிழக கைவினைஞர் மேம்பாட்டு திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு நிதி வழங்குவது மத்திய அரசு தான்" என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உண்மை என்ன?:
தமிழ்நாடு அரசின் 'கைவினைஞர் மேம்பாட்டுத் திட்டம்':
- 35 வயதிற்கு மேற்பட்ட கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பயிற்சி கொடுத்து, நவீன தரத்திற்கு உயர்த்துவதே இத்திட்டத்தின் சாராம்சம் ஆகும்.
- குடும்பத் தொழிலாக இருக்க வேண்டியதில்லை.
- 25 சதவீதம் மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
ஒன்றிய அரசின் 'விஸ்வகர்மா திட்டம்':
- 18 வயது நிரம்பியவர்கள் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய முடியும்.
- 18 வகைத் தொழில்களை, பாரம்பரிய குடும்பத் தொழிலாக செய்பவர்களுக்கு மட்டுமே பயிற்சியும், கடன் உதவியும் வழங்கப்படும்.
தகவல்களைத் திரித்து பரப்ப வேண்டாம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
மற்றொரு பதிவில், "கலைஞர் கனவு இல்லம் ஒட்டுமொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது!
வதந்தி: மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறு பெயர் கொடுத்து மாநில அரசு புதிய திட்டங்களாக அறிமுகம் செய்துள்ளது. வீடற்றோருக்கு வீடு வழங்கும் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தை 'கலைஞர் கனவு இல்லம்' எனும் திட்டமாக மாற்றியுள்ளது.
உண்மை என்ன?
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்:
- பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் என்பது ரூ.1.2 லட்சம் வழங்கும் திட்டமாகும். இதில் ரூ.72,000 ஒன்றிய அரசும், ரூ.48,000 தமிழ்நாடு அரசும் வழங்குகின்றன.
- ஒன்றிய அரசு வழங்கும் தொகை போதாது என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு, கான்கிரீட் கூரை அமைப்பதற்காக கூடுதலாக ரூ.1,20,000 வழங்குகிறது. ஆக, இத்திட்டத்தில் மொத்தம் ரூ.2,40,000 ஒரு பயனாளிக்கு வழங்கப்படுகிறது.
- மேற்கண்ட ரூ.2.4 லட்சத்தில் தமிழ்நாடு அரசு 70% தொகையை வழங்குகிறது. ஒன்றிய அரசு 30% மட்டுமே தருகின்றது.
கலைஞர் கனவு இல்லம்:
- இத்திட்டத்தின் முதல் கட்டமாக 1 லட்சம் வீடுகள் தலா ரூ.3.50 லட்சம் செலவில் இவ்வாண்டில் கட்டப்படும். தமிழ்நாடு அரசே ஒட்டுமொத்த நிதியையும் வழங்கும்.
- கிராமப் பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் இதுவாகும். 2030 ஆம் ஆண்டுக்குள் 'குடிசைகள் இல்லா தமிழ்நாடு' என்ற இலக்குடன் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட இருக்கின்றன.
- பயனாளிகளுக்கு வீடு கட்ட நிலம் இல்லாவிடில், நிலத்தையும் அரசே வழங்குகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
மற்றொரு பதிவில், "கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் முற்றிலும் மாநில நிதியால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது!
வதந்தி: மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறொரு பெயர் கொடுத்து மாநில அரசு புதிய திட்டங்களாக அறிமுகம் செய்யதுள்ளது. 'Smart Cities' திட்டத்தை நகர்ப்புற மேம்பாட்டு திட்டமாக அறிமுகம் செய்தனர்.
உண்மை என்ன?:
சீர்மிகு நகரங்கள்:
- இந்தியாவில் 100 நகரங்களை தேர்வு செய்து, தமிழ்நாட்டில் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளைச் சீர்மிகு நகரங்களாக (Smart City) மாற்றும் திட்டமிது.
- 2015 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இத்திட்டம் ஒன்றிய அரசும் மற்றும் மாநில அரசும் 50:50 பங்கீட்டின் அடிப்படையில் செயல்படுகிறது.
கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம்:
- தமிழ்நாட்டில் உள்ள நகர்புற உள்ளாட்சிகளிடையே உள்ள வளர்ச்சி இடைவெளியைக் குறைக்க, 121 நகராட்சி மற்றும் 528 நகர பேரூராட்சிகளிலும் இத்திட்டம் அமலிலுள்ளது.
- இந்த திட்டத்திற்கான முழு நிதியும் தமிழ்நாடு அரசே வழங்குகிறது.
ஒன்றிய அரசின் நலத்திட்டத்தை பெயர் மாற்றி மாநில அரசின் திட்டமாக அமலாக்கவில்லை. ஆகவே, தகவல்களைத் திரித்துப் பரப்ப வேண்டாம்." என்று குறிப்பிட்டு உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மத்திய அரசு 3 திட்டங்களின் பெயரை மாற்றி தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கிறார்கள் என பாஜக தலைவர்கள் விமர்சனம்.
முடிவு
3 திட்டங்களுமே வேறு வேறு என்று தமிழ்நாடு அரசு உண்மை கண்டறியும் குழு விரிவாக விளக்கி உள்ளது.
ரேட்டிங்
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications