ராமர் கோயில் போகும் வழியில் சாமியார் விபத்தில் மரணமா? பதற வைக்கும் படங்கள்.. உண்மை என்ன?
சென்னை: அயோத்தியில் நாளை திறப்பு விழா காண இருக்கும் ராமர் கோயில் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்த பிரபல சாமியார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என புகைப்படங்களுடன் தகவல் பரவி வருகிறது. இதன் உண்மை தன்மை பற்றி அலசுவோம்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கியது. இதன் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் நாளை 'பிரான் பிரதிஷ்டா' எனப்படும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள 6,000 க்கும் அதிகமானோருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய மாநில அமைச்சர்கள், பல மாநில முதலமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார்கள். திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஏராளமானோர் அயோத்திக்கு படையெடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒரு செய்தி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அதாவது அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க சென்ற சாமியார் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறி அதை பகிர்ந்து வருகின்றனர். அந்த படத்தில் காவி உடை அணிந்திருக்கும் சாமியார் விபத்தில் நசுங்கிய காரியில் இரத்தம் சிதறி உயிரிழந்து இருப்பது தெரிகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், வாட்ஸ் அப் என பல்வேறு தளங்களில் இந்த தகவல் காட்டுத்தீ போன்று பகிரப்பட்டு வருகிறது.
இந்த படங்களுடன், “வாழ்க்கையில் ஆட்டமும், அகங்காரமும், ஆணவமும், வெறுப்பும் இவ்வளவுதான். பெங்களூரில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களை இந்த இந்தியாவை விட்டு மட்டுமல்ல, நானும், என் BJP அரசும் இந்த உலகத்தை விட்டே அனுப்பிவிடுவோம் என்று மேடையில் சவால் விட்ட சாமியார் & அரசியல்வாதி.. ராமர் கோவிலுக்கு போகும் வழியிலே விபத்தில் இறந்து விட்டார்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதன் உண்மை தன்மை பற்றி ஆராய கூகுள் ரிவர்ஸ் இமேஜ் வசதி மூலம் தேடி பார்த்தோம். அப்போது இந்த விபத்து தொடர்பான மேலும் சில புகைப்படங்களும் இருந்தன. விபத்து எப்போது நடந்தது என்ற விபரங்களை தேடியபோது 2020 ஆம் ஆண்டே இந்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டது தெரியவந்தது. இதன் மூலம் இந்த சாமியார் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் வழியில் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகிறது.

Fact Check
வெளியான செய்தி
ராமர் கோயில் சென்று கொண்டு இருந்த பிரபல சாமியார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
முடிவு
சாமியார் விபத்தில் சிக்கிய புகைப்படங்கள் 2020 ஆம் ஆண்டிலேயே இணையத்தில் பகிரப்பட்டு உள்ளன.
ரேட்டிங்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications