ராமாயணத்தில் வரும் ஜடாயு பறவைகள்.. அயோத்தி வந்ததா? அதிசயத்தை பாருங்களேன் என பரவும் வீடியோ உண்மையா?
சென்னை: அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு ராமாயணத்தில் வரும் ஜடாயு பறவைகள் குவிந்ததாக வரும் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து அலசுவோம்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் திறப்பு விழா வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் ராமாயணத்தில் வரும் ஜடாயு என்ற பறவைகள் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்திக்கு வருவதாக குறிப்பிட்டு அந்த வீடியோ பகிர்ந்து வருகிறார்கள். மலை இடுக்கில் மிகப்பெரிய இறக்கைகளுடன் ராட்சத தோற்றத்தில் 7 முதல் 8 பறவைகள் நிற்பதைபோல் அந்த காட்சி உள்ளது.

இந்த தகவல் உண்மைதானா என்று ஆய்வுக்கு உட்படுத்தினோம். பறவைகள் இவ்வாறு அமர்ந்து இருப்பது அயோத்தியின் எந்த பகுதி என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்படவில்லை. இதுபோன்ற மலைப் பகுதி அயோத்தியில் இருப்பதாக தெரியவில்லை. வீடியோவை ஸ்க்ரீன்ஷாட் செய்து ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தினோம். அதில் இந்த வீடியோ கடந்த 2021 ஆம் ஆண்டே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதை காண முடிந்தது. இந்தோனேசியா நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ இது என்று குறிப்பிட்டு பலர் பகிர்ந்து இருக்கிறார்கள்.
ஆனால், உண்மையாக இது எங்கு எடுக்கப்பட்ட வீடியோ என்பதை உறுதிபடுத்த முடியவில்லை. 2021 ஆம் ஆண்டே வெளியான வீடியோ இது என்பதால் ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக அயோத்திக்கு இது வருகை தந்ததாக கூறப்படுவது தவறாக தகவல். அடுத்து இது ராமாயண காலத்தில் வாழ்ந்து அழிந்ததாக சொல்லப்படும் ஜடாயு பறவையா என்ற தேடியபோதுதான் தெரிந்தது இவை இமயமலை தங்கக் கழுகுகள் என்று. இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள இமய மலைத் தொடர்களில் இவை வாழ்ந்து வருகின்றன. எனவே இவை ராமாயண காலத்தில் வாழ்ந்து அழிந்ததாக சொல்லப்படும் ஜடாயு பறவை இல்லை.

இந்த பறவைகள் 2021 ஆம் ஆண்டு அயோத்தி வந்ததாக எந்த தரவுகளும் இல்லை. பெரும்பாலும் இந்த பறவை இனம் இமயமலைப் பகுதியை விட்டு வெளியில் செல்வதில்லை என்றே தகவல்கள் கிடைக்கின்றன. எனவே பழைய வீடியோவை பகிர்ந்து ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்வுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பி இருப்பது உறுதியாகிறது.

Fact Check
வெளியான செய்தி
ராமர் கோயில் திறப்பு விழாவை காண ராமாயணத்தில் வரும் ஜடாயு பறவைகள் அயோத்தி வந்ததாக வீடியோ
முடிவு
2021 முதல் பகிரப்படும் பழைய பழைய வீடியோ. அவை ஜடாயு பறவைகள் அல்ல. இமயமலை தங்க கழுகுகள்.
ரேட்டிங்
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications