Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சங்கி பிரின்ஸ்”க்கு வார்னிங்.. கோட்டை அமீர் விருது பெற்ற ஜுபைர் மருது சகோதரர்களை அவமதித்தாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோட்டை அமீர் விருது பெற்ற பத்திரிகையாளர் முஹம்மது ஜுபைர் மருது சகோதரர்களை இழிவுபடுத்தியதாக பாஜக நிர்வாகி பதிவிட்டு உள்ள கருத்தின் உண்மை தன்மையை அலசுவோம்.

இந்திய அளவில் பிரபல உண்மை கண்டறியும் பத்திரிகையாளராக இருப்பவர் முஹம்மது ஜுபைர். பிரபல உண்மை கண்டறியும் செய்தி இணையதளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனரான இவர் தொடர்ந்து பல்வேறு வதந்திகளை அம்பலப்படுத்தி உள்ளார். சிறுபான்மையினர், பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச் செயல்களை தெரியப்படுத்தி வருவதுடன், அவர்களுக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகள், வெறுப்பு பிரச்சாரங்களுக்கு எதிராக களமாடி வருகிறார். கொரோனா பெருந்தொற்று, சிஏஏ போராட்டக் களங்கள், ஒடிசா ரயில் விபத்து, தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் கொல்லப்படுவதாக பரவிய வதந்தி என பலவற்றை இவர் அம்பலப்படுத்தி வருகிறார்.

Fact check about the Kottai Ameer Award winning Muhammad Zubair defamed the Marudu brothers

இவருக்கு எதிராக பாஜகவினர் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருதை முதலமைச்சர் முக ஸ்டாலின் முஹம்மது ஜுபைருக்கு வழங்கினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்த யுகத்தின் மிகப்பெரிய வன்முறையாக பொய்ச்செய்திகள் உருவெடுத்துள்ளன. பாசிஸ்ட்டுகளின் அத்தகைய பொய்ச் செய்திகளுக்கு எதிராக ஒற்றை ஆளாக தன்னுடைய ஆல்ட் நியூஸ் தளத்தின் மூலம் பெரும்போரை நடத்தி உண்மையை உரக்கச் சொல்லி வருபவர் சகோதரர் ஜுபைர்.

கழக அரசு சார்பில் அவருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதை, நம் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்றைய குடியரசு தின நிகழ்ச்சியில் வழங்கினார்கள். இந்நிலையில், சகோதரர் சுபேர் இன்று நம்மை நேரில் சந்தித்த போது, அவருக்கு தந்தை பெரியாரின் சிலையை வழங்கி, அவர் பணிகள் சிறக்க வாழ்த்தினோம்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பாஜகவின் இளைஞரணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், இளைஞரணியின் சமூக ஊடக பொறுப்பாளராகவும் இருந்து வரும் பிரவீன் ராஜ் என்பவர் தன்னுடைய சங்கி பிரின்ஸ் என எக்ஸ் பக்கத்தில் ஜுபைர் மருது பாண்டியர்களை இழிவுபடுத்தியதாக ஒரு வீடியோவை பகிர்ந்து விமர்சித்து இருக்கிறார். அதில், "சுதந்திரத்திற்காக தூக்கு மேடை சென்ற "மருது சகோதரர்களை" இழிவுப்படுத்திய "பூங்கா கரடி" என்னும் முஹம்மது ஜுபயருக்கு விருது வழங்கிய ஸ்டாலின். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இவனை போல அயோக்கியனுக்கு நிச்சயம் விருது வழங்காது." என்று குறிப்பிட்டு இருந்தார். கடந்த அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்டவர்தான் இந்த சங்கி பிரின்ஸ்.

Fact check about the Kottai Ameer Award winning Muhammad Zubair defamed the Marudu brothers

அவரது இந்த கருத்தை தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்து இருக்கிறது. அதில், "1. 2023 ஆம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சிக்காக, கர்நாடக பா.ஜ.க. கட்சி, திப்பு சுல்தானுக்கு எதிராகப் போரிட்ட உரி கவுடா, நஞ்சே கவுடா ஆகியோர் குறித்த விளம்பரப்பலகை ஒன்றை வெளியிட்டது. அதில் மேற்கண்டோரின் படங்களுக்குப் பதிலாக நமது மருது சகோதரர்களின் படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

2. இந்த தவறை ஜூபைர், தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும், பா.ஜ.க கட்சியின் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள், தனது அலுவலகத்தில் மருது சகோதரர்களின் படங்களுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வணங்கும் படத்தையும் 21.03.2023 அன்று வெளியிட்டார். மருது சகோதரர்கள் குறித்து நன்கு அறிந்திருந்தும் அவர்களின் படங்களை அரசியலுக்காக பெயர் மாற்றிப் பயன்படுத்துவது ஏன் என்றும் ஜூபைர் கேட்டிருந்தார்.

3. இப்படியிருக்க, திரு.ஜூபைர், மருது சகோதரர்களை இழிவுபடுத்திவிட்டார் என்று வதந்தி பரப்புவது, திசைதிருப்பும் நோக்கம் கொண்ட செயலாகும். பொய்யான செய்திகளை பரப்புவது குற்ற செயலாகும்!" என்று குறிப்பிட்டு உள்ளது.

Fact Check

வெளியான செய்தி

சுதந்திரத்திற்காக தூக்கு மேடை சென்ற "மருது சகோதரர்களை" இழிவுப்படுத்திய "பூங்கா கரடி" என்னும் முஹம்மது ஜுபயருக்கு விருது வழங்கிய ஸ்டாலின்.

முடிவு

உரி கவுடா, நஞ்சே கவுடா என்று மருது சகோதரர் படங்களை பாஜக வெளியிட்டதையே ஜுபைர் அம்பலப்படுத்தினார்.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+