FACT CHECK - உதயநிதி தொகுதியில் இந்து கோயில்கள் மட்டும் இடிப்பா? இந்து முன்னணி புகார்! உண்மை என்ன?
விஜயகுமார் என்பவரது பெயரில் இடம்பெற்ற மனுவில் உள்ள எண்ணில் பேசியவர் இந்து முன்னணியை சேர்ந்தவர் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
சென்னை: உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கோயில்களை மட்டும் அரசு இடித்து வருவதாக இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் இது குறித்து உண்மை தன்மை என்னவென்று அலசுவோம்.
கடந்த 1973 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னை கொய்யாத்தோப்பில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சிதிலமடைந்து உள்ளதால் புதிய குடியிருப்பை கட்டித் தர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து அரசு புதிய குடியிருப்பை கட்டித் தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து வீடுகள் காலி செய்யப்பட்டு பழைய கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்து முன்னணி குற்றச்சாட்டு
இந்த நிலையில்தான் இந்து முன்னணியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் ட்விட்டரில் கோயில் இடிக்கப்படும் வீடியோக்கள் மற்றும் படங்களை வெளியிட்டு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள கோயிலை திமுக அரசு இடித்துவிட்டதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

தேவி கருமாரியம்மன் கோயில்
இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "சென்னை சேப்பாக்கம் தொகுதி கொய்யாத் தோப்பு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளாக வீற்றிருந்து அருள் பாலித்து வந்த தேவி கருமாரியம்மன் கோயில் இந்து விரோத திமுக அரசால் இன்று காலை 4.30 மணியளவில் போலிஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.

72 ஆண்டுகால கோயில்
குடிசையில் இருந்த கோயில் 30 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் எம்.எல்.ஏ வும் முன்னாள் கேரள கவர்னருமான ஜோதி வெங்கடாசலம் அவர்கள் உதவியால் 70களில் கோபுரத்துடன் கோயில் கட்டப்பட்டது. 72 ஆண்டு கால கோயில் இடிக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது." என்று பதிவிட்டு இருந்தார்.

திமுக மீது புகார்
மற்றொரு ட்வீட்டில் வீடியோவை வெளியிட்டு, "சேப்பாக்கம் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் தொடர்ந்து இந்து கோயில்களை இடித்து வரும் இந்து விரோத திமுக அரசு" என்று குறிப்பிட்டு உள்ளார் இந்து முன்னணி சென்னை நகர தலைவரும் மாநில செய்தித் தொடர்பாளருமான இளங்கோவன். இந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வந்தது.

போலி எண்
அவர் வெளியிட்டு இருக்கும் ட்விட்டரில் பதிவில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு வழங்கிய மனு என்று இணைத்து உள்ளார். விஜயகுமார் என்பவரது பெயரில் இடம்பெற்ற அந்த மனுவில் உள்ள எண்ணுக்கு யூடர்ன் உண்மை கண்டறியும் இணையதளம் தொடர்புகொண்டு பேசியபோது அந்த எண்ணில் பேசியவர் இந்து முன்னணியை சேர்ந்தவர் இல்லை என்பதும் அவர் இதுபோல் எந்த மனுவும் அளிக்கவில்லை என்பதும் உறுதியாகி உள்ளது.

உண்மை என்ன?
அதேபோல், அரசு அதிகாரிகளிடம் யூடர்ன் தளம் விசாரித்தபோது அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருந்த ராமர், பிள்ளையார், தேவி கருமாரி கோயில்கள் மட்டுமின்றி மாதா கோயிலும் இடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. இந்த கோயில்களை இடிப்பதற்கு நிர்வாகிகளிடம் முறையாக அரசு அறிவித்து இருக்கிறார்கள். எனவே கோயில்களை மட்டும் அரசு இடித்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை என யூடர்ன் உறுதி செய்து உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
சேப்பாக்கம் தொகுதியில் இந்து கோயில்களை மட்டும் அரசு இடித்து வருவதாக இந்து முன்னணி நிர்வாகி ட்விட்டரில் விமர்சனம்
முடிவு
முன் அறிவிப்பு வெளியிட்டு இந்து கோயில்கள் மட்டுமின்றி மாதா கோயிலையும் இடித்ததாக அதிகாரிகள் விளக்கம்
ரேட்டிங்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications