வண்ண ஒளியில் மிளிரும் அயோத்தி ராமர் கோயில்! ஹர்பஜன் சிங் ஷேர் செய்த தவறான வீடியோ! உண்மை இதுதான்
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடர்பான பல தவறான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்பியுமான ஹர்பஜன்சிங் பகிர்ந்துள்ள வீடியோ விவாதங்களை கிளப்பியுள்ளது.
ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் இன்று குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இன்று பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமர் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மார்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ம் தேதி பல்வேறு மாநிலங்கள் பொது விடுமுறையை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், ராமர் கோயில் தொடர்பாக சில தவறான வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக அயோத்தி ராமர் கோயில் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்பியுமான ஹர்பஜன்சிங் பகிர்ந்துள்ள வீடியோ விவாதங்களை கிளப்பியுள்ளது.
இது குறித்து தமல் ஷாஹா எனும் பத்திரிகையாளர் விளக்கமளித்துள்ளார். அதாவது, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆண்டு துர்கா பூஜை விழாவின் போது ராமர் கோயில் போன்று மாதிரி உருவாக்கப்பட்டிருந்தது. இது உண்மையான ராமர் கோயில் அல்ல என்று கூறியுள்ளார். இவரது கூற்றை உறுதி செய்யும் விதமாக இந்துஸ்தான் டைம்ஸ் இணைய இதழில் கடந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

Fact Check
வெளியான செய்தி
ஹர்பஜன் சிங் பகிர்ந்திருந்த வீடியோ 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொல்கத்தாவில் துர்கா பூஜைக்காக வடிவமைக்கப்பட்டிருந்த ராமர் கோயிலின் மாதிரி வடிவம்.
முடிவு
ஹர்பஜன் சிங் பகிர்ந்திருந்த வீடியோ 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொல்கத்தாவில் துர்கா பூஜைக்காக வடிவமைக்கப்பட்டிருந்த ராமர் கோயிலின் மாதிரி வடிவம்.
ரேட்டிங்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications