FACT CHECK - ராசி, நட்சத்திரம் மூலம் இயற்கை மழை? சாதித்தாரா கரூர் விவசாயி - பரவும் வீடியோ உண்மையா?
சென்னை: விவசாயி ஒருவர் ராசி, நட்சத்திரம் மூலமாக இயற்கையான மழையை வர வைத்ததாக வீடியோ ஒன்று யூடியூப் சேனல்களில் வெளியாகி இருக்கும் நிலையில் அதன் உண்மைத் தன்மை குறித்து பார்ப்போம்.
கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப் தளங்களில் வீடியோ ஒன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் விவசாயி ஒருவர் இயற்கையான மழையை ராசி, நட்சத்திரம் மூலமாக வரவழைத்தார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பிரபல யூடியூப் சேனல் ஒன்று வெளியிட்ட இந்த வீடியோவை அதிகளவில் மக்கள் பார்த்தும் பகிர்ந்து வருகிறார்கள். செயற்கை மழையை வரவழைப்பதையே பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து மேக தூவல் மூலம் பல கோடி செலவு செய்து சில நாடுகள் செயல்படுத்தி வருகின்றன.

அப்படி இருக்க எப்படி ராசி, நட்சத்திரம் மூலமாக இயற்கை மழையை வரவழைக்க முடியும் என்ற கேள்வி சாமானிய மக்கள் முதல் விஞ்ஞானிகள் வரை எழுந்திருக்கும். அதற்கும் அந்த வீடியோவில் வேற லெவலில் விளக்கம் ஒன்றை கொடுத்து இருந்தார்கள். கரூரை சேர்ந்த செல்லமுத்து என்ற விவசாயிதான் இந்த சாதனையை நிகழ்த்தியவராம். 12 ராசிகளின் 27 நட்சத்திரங்களின் மூலமாக இவர் இயற்கை மழையை பொழிய வைத்ததாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயி செல்லமுத்து தன் வீட்டருகே உள்ள வேலமர கிளைகளில் பிளாஸ்டிக் குழாய்களை அமைத்து, மேற்கு பகுதியில் சென்சார் வைத்து இருக்கிறார்.

பிளாஸ்டிக் குழாய்களை தண்ணீர் தொட்டியோடு இணைந்து இருக்கும் நிலையில், மரக் கிளைகளில் இருந்து சென்சார் மூலமாக தானாகவே மழை போன்று கீழே உள்ள தொட்டியில் தண்ணீர் ஊற்றுகிறது. என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதெப்படி சாத்தியம்? இதில் ராசி, நட்சத்திரத்துக்கு உள்ள தொடர்பு என்ன என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமின்றி மரங்களில் வைக்கப்பட்டு உள்ள குழாயில் இருந்து தண்ணீர் ஊற்றினால் அது மழையாகிவிடுமா என்ற மிகச் சாதாரண கேள்விக்கு கூட அந்த வீடியோவில் பதிவில் இல்லை. சரி, இந்த வீடியோவின் உண்மைத் தன்மை என்ன என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது வேறொரு யூடியூப் சேனலில் இந்த வீடியோ முதலில் பதிவிடப்பட்டு உள்ளது. அதில், பேட்டியளித்த விவசாயி, "இயற்கை விவசாயம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மரத்தடியில் நின்றால் மழை பொழிவதை போன்று செயற்கையாக செய்து இருக்கிறோம். இதை காண மாணவர்கள், விவசாயிகள், வெளி மாநிலத்தவர்களும் வருகிறார்கள். இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயிற்சிகளை அளித்து வருகிறோம்.
செயற்கை மழை பொழிவதைபோன்று நாம் செய்து இருப்பதால் பல ஆர்வமுடன் இதை பார்க்க வருகிறார்கள்." என்றார். இதை செய்த நபரே பல முறை செயற்கை மழை என்று கூறுகிறார். இது சில கருவிகள் மூலமாக மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. இதற்கும் ராசி, நட்சத்திரத்துக்கும் எந்த லாஜிக்கான தொடர்பும் இல்லை. யூடியூப் சேனலில் பின்னணி குரலில் பேசும் நபர் தனது சொந்த கருத்தையே சொல்லி இருக்கிறார். அந்த நபரும் ராசி, நட்சத்திரம் மூலமாக இதை செய்தோம் என்று சொல்லவில்லை.

Fact Check
வெளியான செய்தி
ராசி, நட்சத்திரம் மூலமாக விவசாயி இயற்கை மழையை வர வைத்ததாக யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ
முடிவு
விவசாயியே மற்றொரு பேட்டியில் செயற்கை மழை என்கிறார். ராசி, நட்சத்திரத்துக்கும் இதற்கும் தொடபே இல்லை.
ரேட்டிங்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications