FACT CHECK - சீனாவில் போலி முட்டை கோஸ்.. இதை சாப்பிட்டால் அவ்வளவுதான்! பரவும் வீடியோ உண்மையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்களில் பிளாஸ்டிக் செயற்கை முட்டை கோஸ் என்று கூறி வீடியோ ஒன்று வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்த உண்மை தன்மை என்ன என்று பார்ப்போம்.

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ ஒன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் முட்டை கோஸ் தயாரிக்கப்படுவதாக பகிரப்பட்டு வரும் அந்த வீடியோவுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கும் நபர், "இதோ கிளம்பிட்டாங்க.. நம்மை சாகடிப்பதற்கு. ஏற்கனவே எல்லோரும் ஆயுள் குறைவாக சுத்திக்கொண்டு இருக்கிறோம். இதோ பாருங்கள்.. இந்த தண்ணீரில் ஒரு கெமிக்கல் ஊற்றுகிறார்கள். வெள்ளை, மஞ்சள், பச்சை என்று.. ஊற்றியவுடன் லேசாக பிளாஸ்டிக்போல் மாறிவிட்டது.

Fact check about video claiming that Chinese made plastic artificial Cabbages

இதற்கு பெயர் முட்டை கோசாம். இந்த முட்டை கோஸ் சந்தைக்கு வந்துவிட்டதா இல்லை இனிதான் வரப்போகிறதா? ஒன்றும் புரியவில்லை நமக்கு. இதையெல்லாம் வாங்கி சாப்பிட்டால் நமக்கு என்ன ஆகும்? சும்மாவே 60 வயதுதான் வாழ்கிறோம். அதுவுமே நிச்சயம் இல்லை 35 வயது 40 வயதிலேயே போய்விடுகிறோம். இனிமேல் வரக்கூடிய தலைமுறையை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறோம். அவர் நிலைமை எல்லாம் என்ன ஆகிறது. இதை சாப்பிட்டு இனி குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?

இதில் எல்லோருக்கும் கேன்சர் வேறு வருகிறது. இதையெல்லாம் சாப்பிட்டால் ஏன் வராது? இதெல்லாம் சந்தைக்கு வந்திருக்கும்போல. பார்க்கவே பயமாக இருக்கிறது. வெட்டிக்காட்டுகிறார் பாருங்கள். அப்படியே உண்மை போலவே உள்ளது." என்று தெரிவித்து உள்ளார். இந்த வீடியோ பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ், எக்ஸ் என பல்வேறு சமூக வலைதளங்களில் அதி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பலரும் பகிர்ந்து இனி முட்டை கோஸ் வாங்கக் கூடாது என்றெல்லாம் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதன் உண்மை தன்மையை ஆராயும் முயற்சியில் ஈடுபட்டோம். அப்போது இதேபோல் பல வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தன. அதில் கடந்த 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் பேசும் நபர், “உலகில் எந்த பொருளாக இருந்தாலும் சீனாவை சேர்ந்தவர்களுக்கு மூக்கில் வியர்த்துவிடும். உடனடியாக போலியாக உருவாக்கிவிடுவார்கள். தற்போது தங்கள் நரித்தந்திரத்தை பயன்படுத்தி உணவுகளிலும் போலியை தயாரிக்கிறார்கள். முட்டைகோஸ் செடியில் வளர்ந்து நாம் வாங்குகிறோம் என்று நினைத்தால் அதையும் போலியாக தயாரிக்கிறார்கள்.” என்று தெரிவித்து உள்ளார்.

இவற்றை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் தேடலில் ஆராய்ந்தபோது 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானை சேர்ந்த யூடியூப் சேனல் இதை பதிவிட்டு உள்ளது. அது குறித்த கூடுதல் தகவல்களை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரிந்தது. அதாவது நமதூரில் பழக்கடைகள், குளிர்பானக் கடைகளில் பிளாஸ்டிக் ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை பழங்கள் காட்சிக்காக தொங்கவிடப்பட்டு இருக்கும். அதேபோன்று ஜப்பானின் கிஃபு மாகாணத்தில் முட்டைகோஸ் பொம்மையை தயாரிக்கும் வீடியோவை பதிவிட்டு உள்ளார்கள்.

மெழுகு, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை கொண்டு இது தயாரிக்கப்படுகிறது. இதேபோன்று பல காய்கறிகள், பழங்களின் மாதிரிகளும் விளம்பரத்துக்காக தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் சாப்பிடுவதற்காக சீனாவை சேர்ந்தவர்கள் போலியாக முட்டை கோஸ் தயாரிக்கிறார்கள் என்று பகிரப்படும் வீடியோ தெரிவிக்கப்படும் கருத்துக்கள் வதந்தி என்பது உறுதியாகிறது.

Fact Check

வெளியான செய்தி

சீனாவிஸ் பிளாஸ்டிக் செயற்கை முட்டை கோஸ் தயாரித்து விற்பனை செய்கிறார்கள் என்று பகிரப்படும் வீடியோ.

முடிவு

ஜப்பான் கடைகளில் விளம்பரத்துக்காக வைக்கப்படும் பொம்மை தயாரிப்பு வீடியோ திரித்து வதந்தி

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+