என்னது.. விஜய் டிவி ராமர் தமிழ் மாநில காங்கிரஸில் இருக்காரா? டிரெண்டாகும் புகைப்படம் - FACT CHECK
சென்னை: விஜய் டிவியில் பிரபல நகைச்சுவை கலைஞராக இருக்கும் ராமர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று இருப்பதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் பிரபல நகைச்சுவை கலைஞராக இருந்து வருபவர் ராமர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி, அது இது எது, கேபிஒய் சாம்பியன்ஸ், ராமர் வீடு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலம் அடைத்தார். குறிப்பாக பெண் வேடத்தில் இவர் நடித்திருக்கும் நிகழ்ச்சிகள் அசத்தல் ரகம்.

அது இது எது நிகழ்ச்சியில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் குடும்ப பிரச்சனைகள் குறித்து பேசும் பிரபல நடிகையின் வேடத்தில் ராமர், சொல்வதெல்லாம் பொய் என்ற பெயரில் அரங்கேற்றிய நகைச்சுவை, இன்று வரை மக்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறது. அதேபோல் பிரபல சினிமா பாடல்களை நகைச்சுவை தொனியில் பேசி மீண்டும் அதை டிரெண்ட் செய்துவிடுவது ராமரின் வழக்கம்.
அப்படி மக்களால் மறந்துபோன பாடல்களை மீண்டும் தனது நகைச்சுவையால் நினைவூட்டி இருப்பார் ராமர். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமானதன் மூலம் சினிமாக்களில் நடிக்கவும் ராமருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். ஆனால், தொலைக்காட்சியில் கிடைத்த அளவுக்கு சினிமாவில் இவர் அதிக பிரபலம் ஆகவில்லை.
எனவே தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ராமர் நகைச்சுவை கலைஞர் மட்டுமில்லை. அரசு அதிகாரி என்ற தகவல் கடந்த ஆண்டு வெளியாகி பலரை வியப்படைய வைத்தது. கடந்த ஆண்டு மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு வெங்கடேசன், விஜய் டிவி ராமருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.
அதில், "கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்தேன்" என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்து பலரும் வியப்படைந்தனர்.
இந்த நிலையில், ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் டிவி ராமர் அமர்ந்திருப்பதைபோல் உள்ளது அந்த புகைப்படம்.

பலரும் இதனை உண்மை என்று நம்பி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். சிலர் ஒருவர் அரசு அதிகாரி கட்சி சார்பில் எப்படி விவாதத்தில் கலந்துகொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பி உல்ளனர். இதன், உண்மைத்தன்மையை அறிய பெரிதாக நாம் நேரம் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. பகிரப்படும் அந்த புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தாலே உண்மை தெரிந்துவிடும்.
ஆம், ராமர் முகம் இருக்கும் இடத்தில் தொலைக்காட்சியின் லோகோவின் ஒரு முனையை ராமரின் தலைமுடி மறைத்திருக்கும். அதை வைத்தே புரிந்துகொள்ள முடியும், வேறொருவரின் முகத்தின் மேல் ராமரின் முகத்தை வைத்து உள்ளார்கள் என்று. அந்த பதிவுக்கு கீழேயே த.மா.க சார்பில் விவாதத்தில் உண்மையாக கலந்துகொண்டவரின் படத்தை நெட்டிசன்கள் கருத்திட்டு உள்ளனர்.

Fact Check
வெளியான செய்தி
விஜய் டிவி புகழ் ராமர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றதுபோல் பகிரப்படும் புகைப்படம்.
முடிவு
ராமர் தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் இல்லை. அவரது முகத்தை வைத்து போட்டோஷாப் செய்துள்ளனர்.
ரேட்டிங்
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications