பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்குடன் நடிகை தமன்னா திருமணம்? பரவும் தகவல்! உண்மையா?
சென்னை: தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை தமன்னா. லஸ்ட் ஸ்டோரிஸ் 2 மூலம் தற்போது ‛டாக் ஆப் தி டவுன்' ஆக மாறியுள்ள நடிகை தமன்னா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக்கை திருமணம் செய்து கொண்டதாக போட்டோவுடன் தகவல் பரவி வரும் நிலையில் இருவருக்கும் இடையேயான தொடர்பின் உண்மை என்ன? பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடா உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருபவர் தமன்னா. இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தான் சமீபத்தில் நடிகை தமன்னா நடிப்பில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 எனும் ஆந்தாலஜி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

விஜய் வர்மாவுடன், நடிகை தமன்னா மிகவும் நெருக்கமாக சேர்ந்து இருக்கும் காட்சி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது என்றே சொல்லலாம். இதன்மூலம் ‛டாக் ஆப்தி டவுன்' எனும் வகையில் வலைதளங்களில் தமன்னா டிரெண்ட்டானார். மேலும் விஜய் வர்மாவுடன், நடிகை தமன்னா கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.
இதற்கிடையே தான் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படம் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கும் நிலையில் ரஜினியுடன் தமன்னா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானதில் 'காவாலா' என்ற டைட்டிலில் உருவான பாடலில் தமன்னா கிளாமர் தோற்றத்தில் குத்தாட்டம் போட்டுள்ளார்.
இதுவும் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. இதற்கிடையே தான் நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்கை திருமணம் செய்து கொண்டுள்ளதாக இணையதளங்களில் போட்டோக்கள் பரவி வருகின்றன. பெரும்பாலான நடிகைகள் மிகவும் பிரபலமானவர்களை கரம்பிடித்து வரும் நிலையில் நடிகை தமன்னாவும், அப்துல் ரசாக்கை திருமணம் செய்துள்ளதாக இணையதளங்களில் வேகமாக தகவல்கள் பரவி வருகிறது.
மேலும் தமன்னா இந்தியாவை சேர்ந்தவர் என்ற நிலையில் அப்துல் ரசாக் பாகிஸ்தானை சேர்ந்தவர். இதனால் இது அதிக கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் தான் தமன்னா-அப்துல் ரசாக் திருமணம் உண்மையா? பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

அதாவது கடந்த 2017 ல் துபாயில் தமன்னா மற்றும் அப்துல் ரசாக் ஆகியோர் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றனர். இந்த வேளையில் இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டனர். அப்போதே இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவின. குறிப்பாக கடந்த 2020ல் இந்த தகவல் மின்னல் வேகத்தில் பரவியது. அதன்பிறகு இந்த செய்தி முடங்கிய நிலையில் தற்போது அதுதொடர்பான போட்டோக்கள் மீண்டும் இணையதளங்களில் பரவி வதந்தியை கிளப்பி உள்ளன.
லஸ்ட் ஸ்டோரீஸ் 2 எனும் ஆந்தாலஜி மற்றும் நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் தமன்னா தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் அவரது திருமணம் குறித்த செய்திகள் வேகமாக பரவுகிறது. முன்னதாக நடிகை தமன்னாவிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது சிரித்த படியே நடிகை தமன்னா கூறியதாவது:
அப்துல் ரசாக்கிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது. 2 குழந்தைகளுக்கு தந்தையாக அவர் உள்ளார். இதனால் அப்துல் ரசாக்குடன் திருமணம் என்ற கேள்வி எழ வேண்டாம்'' என தெரிவித்து இருந்தார். இருப்பினும் கூட தற்போது தமன்னா, அப்துல் ரசாக்கை திருமணம் செய்துள்ளதாக இணையதளங்களில் போலி செய்திகள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
நடிகை தமன்னா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக்கை திருமணம் செய்துள்ளார்.
முடிவு
2017 ல் துபாயில் நகைக்கடை திறப்பு விழாவில் தமன்னா, அப்துல் ரசாக் சேர்ந்து இருக்கும் போட்டோவை டிரெண்டாகி இருவரும் திருமணம் செய்து கொண்டதாக போலி செய்தி பரவுகிறது.
ரேட்டிங்
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications