Fact Check: சானியா மிர்சா - முகமது ஷமி இருவரும் டேட்டிங் செய்கிறார்களா? தீயாக பரவி வரும் AI போட்டோ!
சென்னை: முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதாகவும், கடற்கரைகளில் நெருக்கமாக இருப்பதாகவும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இவை உண்மையா?
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாகத் திகழ்ந்து பல போட்டிகளில் வென்று சாதித்தவர் சானியா மிர்சா. இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கட்ந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இசான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், சோயிப் மாலிக், சனா ஜாவேத் உடனான தனது இரண்டாவது திருமணத்தை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

பின்னர், சானியா மிர்ஸா ஏற்கனவே சோயப் மாலிக்கிடம் இருந்து விவாகரத்து பெற்றதை அவரது தந்தை இம்ரான் தெரிவித்தார். இதேபோல இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது மனைவி ஹசின் ஜஹானைப் பிரிந்து வாழ்கிறார்.
இந்தச் சூழலில் தான், சானியா மிர்சா - முகமது ஷமி ஆகிய இருவரும் ஒன்றாக இருப்பது போல புகைப்படங்கள் அண்மைக் காலங்களில் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. சானியா மிர்சாவும், முகமது ஷமியும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக 2024 ஜூன் மாதம் தகவல்கள் பரவின. ஆனால், சானியா மிர்சாவின் தந்தை அந்த தகவலை மறுத்துவிட்டார். சானியா மிர்சா முகமது ஷமியை சந்தித்தது கூட இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சானியா மிர்சா, முகமது ஷமி இருவரும் துபாயில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இருவரும் கிறிஸ்துமஸ் உடை அணிந்து நெருக்கமாக நின்றுகொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.
மேலும், முகமது ஷமியும், சானியா மிர்ஸாவும், கடற்கரையில் மிக நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும் சில நாட்களாக வேகமாகப் பரவி வருகின்றன. இருவரும் டேட்டிங் செய்வதாகவும், திருமணம் செய்து விட்டதாகவும் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்சா மற்றும் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மிகவும் பிரபலமான நபர்கள் என்பதால், அவர்கள் பற்றிய தேடலும் அதிகரித்துள்ளது. இதனால், ஏராளமானோர் இந்தப் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், முகமது ஷமி, சானியா மிர்சா இருவரின் சமூக ஊடக கணக்குகளிலும் இப்படியான எந்தப் புகைப்படங்களும் இல்லை.
உண்மை என்ன?
முகமது ஷமியும், சானியா மிர்சாவும் கிறிஸ்துமஸ் கொண்டாடியதாக வெளியான புகைப்படங்களும், கடற்கரையில் நெருக்கமாக இருப்பதாக வெளியான புகைப்படங்களும் போலியானவை, ஏஐ -யால் உருவாக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளன.

Fact Check
வெளியான செய்தி
முகமது ஷமியும், சானியா மிர்சாவும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
முடிவு
முகமது ஷமியும் சானியா மிர்சாவும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டது, போலியானது.
ரேட்டிங்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications