Fact check: ஓடும் பேருந்துக்கு அடியில் படுத்து ஸ்டண்ட் செய்த இளைஞர்! ஆனால் எதுவுமே ஆகல.. அதெப்படி?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இளைஞர் ஒருவர் நடு ரோட்டில், ஓடும் பேருந்துக்கு அடியில் படுத்திருந்து பேருந்து சென்ற பின்னர் எழுந்து சாதாரணமாக வருவதை போன்ற வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக ஷேராகி வருகிறது. தெலுங்கானாவில் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் நிலையில், இந்த சம்பவத்தின் உண்மை தன்மை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் 500 கோடிக்கும் அதிகமானவர்கள் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். இன்டர்நெட் பயன்பாட்டில் இந்தியா உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 69.2 கோடி பேர் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள். ஆனால் எந்த அளவுக்கு இன்டர்நெட் பயன்பாடு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு போலி செய்திகளும் அதிகமாக பரப்பப்படுகின்றன.

Telangana Hyderabad

அந்த வரிசையில் சமீபத்தில் தெலுங்கானாவிலிருந்து ஒரு இன்ஸ்டாகிராம் ரீல் பயங்கரமாக ஷேராகியிருந்தது. அதாவது தெலுங்கானா போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான ஒரு பேருந்து சாலையில் வந்துக்கொண்டிருக்கிறது. இதனை பார்த்த இளைஞர் ஒருவர் தடுப்பு சுவர்களை கடந்து திடீரென ரோட்டிற்கு வருகிறார். பேருந்து நெருங்கும் போது அதன் முன்னே படுத்துவிடுகிறார். அடுத்த இரண்டு நொடிகளில் பேருந்து அவரை கடந்து சென்றுவிடுகிறது.

பின்னர் ஒன்றுமே நடக்காதது போல அந்த இளைஞர் மீண்டும் சாலையின் ஓரத்திற்கு வருகிறார். இந்த வீடியோ 'கிரியேட்டிவ்_ பெட்டர்_திங்கஸ்' எனும் இன்ஸ்டா ஐடியில் பதிவேற்றப்பட்டிருந்தது. வீடியோ அப்லோட் செய்யப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே இதை 20 ஆயிரம் பேர் ஷேர் செய்திருந்தனர். அதேபோல 1,400க்கும் அதிகமானோர் கமெண்ட் செய்திருந்தனர்.

வித்தியாசமான வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றும்போது லைக்குகள் அதிக அளவில் வரும். இப்படியாக இன்ஸ்டாகிராமில் ஃபேமஸ் ஆவதற்காக இளைஞர் இந்த ஸ்டண்ட்டை செய்திருக்கிறார் என்று பலரும் கூறினர். இன்ஸ்டாகிராம் லைக்குகளுக்காக இப்படியான ஆபத்தான சாகசங்களில் இளைஞர்கள் ஈடுபடுவதுண்டு. எனவே மேற்குறிப்பிட்ட வீடியோவின் கமெண்ட்டில் ஸ்டண்ட்டில் ஈடுபட்டிருந்த இளைஞரை பலரும் எச்சரித்திருந்தனர்.

ஆனால், இந்த வீடியோவின் கதையே வேறு. அதாவது இது போலியான வீடியோ என்று உண்மை சரிபார்க்கும் குழுவினர் கண்டறிந்துள்ளனர். இதனை இந்தியா டு டேவும் உறுதி செய்திருக்கிறது. வீடியோவை கொஞ்சம் கவனமாக பார்த்தால், வீடியோ VFX எடிட் செய்யப்பட்டது என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

வீடியோவில் வரும் பேருந்துக்கும், இதர வாகனங்களுக்கும் நிழல் இருக்கிறது. ஆனால், சாகசத்தில் ஈடுபடும் இளைஞருக்கு மட்டும் நிழல் இல்லை. மட்டுமல்லாது பேருந்தின் முன் பக்கத்தில் இளைஞர் படுக்கும்போது அவருடைய தலை, பேருந்தின் அடிப்பாகத்தில் டிரான்ஸ்பரன்ட்டாக தெரிகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இதனை உறுதி செய்ய வீடியோவை உருவாக்கிய பிஆர் ஏஜென்சியை இந்தியா டு டே தொடர்பு கொண்டிருக்கிறது. அவர்களும் இது VFX மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்றும், இளம் எடிட்டர்களுக்கு எளிய நுணுக்கங்களை கற்றுத்தரவே இந்த வீடியோ உருவாக்கப்பட்டது என்றும், இது உண்மை சம்பவமல்ல என்பதையும் கூறியுள்ளனர்.

அதேபோல தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (டிஜிஎஸ்ஆர்டிசி) நிர்வாக இயக்குநரும் இந்த வீடியோவை பகிர்ந்து இது உண்மையானது அல்ல என விளக்கமளித்துள்ளார். இதன் மூலம் மேற்குறிப்பிட்ட வீடியோ போலியானது என்பது நிரூபணமாகியுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

நடு ரோட்டில் பேருந்துக்கு அடியில் படுத்து இளைஞர் ஸ்டன்ட் செய்தார்.

முடிவு

இளைஞர் ஸ்டன்ட் செய்வதை போன்ற வீடியோ VFX-ஆல் எடிட் செய்யப்பட்டது

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+