நிலவில் மோதிய சிறுகோள்.. சந்திரயான் வேற இருக்கே.. ரோவருக்கு ஆபத்து? தீயாக பரவும் வீடியோ.. உண்மை என்ன
டெல்லி: நிலவில் சந்திரயான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அங்கே சிறுகோள் மோதியதாக வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது.. அது குறித்துப் பார்க்கலாம்.
சந்திரயான் 3 ராக்கெட் கடந்த வாரம் தான் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், சீனா நாடுகளுக்குப் பிறகு நிலவில் தரையிறங்கிய நாடு என்ற சாதனையை இதன் மூலம் இந்தியா படைத்துள்ளது.

அதேபோல நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்தவொரு நாடும் தரையிறங்கியதே இல்லை என்ற நிலையில், அதையும் மாற்றி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் சாட்டிலைட் என்ற சாதனையைச் சந்திரயான் 3 படைத்துள்ளது.
சந்திரயான்: சந்திரயான் 3 சாட்டிலைட்டின் ரோவர் இப்போது நிலவில் தென் துருவத்தைச் சுற்றி வந்து ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது. மொத்தம் 15 நாட்களுக்கு அந்த ரோவர் நிலவின் தென் துருவத்தில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. இதற்கிடையே இணையத்தில் இப்போது திடீரென வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது. அதில் ஆஸ்டிராய்டு எனப்படும் சிறுகோள் ஒன்று சந்திரனில் மோதி வெடித்துச் சிதறுகிறது..
விண்வெளியில் பறந்து செல்லும் அந்த சந்திரயான் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் மோதி வெடித்துச் சிதறுகிறது. அது மோதியதால் சந்திரனில் மிகப் பெரிய வெடிப்பும் ஏற்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சந்திரனை ஒரு சிறுகோள் தாக்கியதாக இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இப்போது நிலவில் சந்திரயான் ரோவர் ஆய்வு செய்து வரும் நிலையில், எங்கு இதனால் சந்திரயான் 3 ரோவருக்கு ஆபத்து வருமோ என்றும் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
வீடியோ: இந்த வீடியோ டிரெண்டாகி வரும் நிலையில், இந்த வெடிப்பு சந்திரனில் எங்கே நடந்தது.. இதனால் சந்திரயான் 2 சாட்டிலைட்டிற்கு ஆபத்தா என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்த வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்துத் தேடும் போது, இது "The Deep Astronomy" என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலில் பகிரப்பட்டது தெரிய வருகிறது. சந்திரனைத் தாக்கும் சிறுகோள் சிஜிஐ என்றே அவர்கள் இதைப் பதிவிட்டுள்ளனர்.
அதாவது இந்த வீடியோவிலேயே அவர் CGI எனக் குறிப்பிட்டுள்ளார். CGI என்றால் computer-generated imagery ஆகும். அதேபோல யூடியூப் தளத்தில் நாம் தேடும் போதும் இந்த வீடியோவை Diego Sinclair என்பவர் தனது பக்கத்தில் கடந்த பிப். 25ஆம் தேதி பகிர்ந்துள்ளார். சிறுகோள் மட்டுமின்றி பல்வேறு பொருட்கள் நிலவில் மோதினால் எப்படி இருக்கும் என்பது கிராபிக்ஸ் மூலம் உருவாக்கிப் பகிர்ந்துள்ளார்.
உண்மை என்ன: அந்த வீடியோவிலேயே அவர் இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பதையும் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இணையத்தில் பரவும் இந்த வீடியோ போலி என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுபோல எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை என்பதால் சந்திரயான் 3க்கு இதனால் எந்தவொரு ஆபத்தும் இல்லை.
அதேநேரம் நிலவில் ஆக்சிஜன் இல்லாத நிலையில், எதாவது சிறுகோள் மோதினால் எப்படித் தீப்பிடிக்கும் என்று மற்றொரு கேள்வியும் வரலாம். சந்திரனில் சிறுகோள்கள் மோதும் போது அதில் இருந்து பிரைட்டான பிளாஷ் வரவே செய்யும். அது தீப்பிடிப்பதால் வருவதில்லை. மாறாக மோதிய வேகத்தில் உருகும் நிலவின் பாறையின் வெப்ப ஒளியால் தான் ஏற்படுகிறது.

Fact Check
வெளியான செய்தி
நிலவில் சிறுகோள் ஒன்று மோதியதால் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது
முடிவு
அது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட படமாகும்.
ரேட்டிங்
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications