இந்தி பேசினால் பலாத்காரம் செய்ய மாட்டார்கள்.. ஆஹா! அப்படியா சொன்னார் ஆலிஷா அப்துல்லா? உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தி தெரிந்தால் இரவில் யாராவது பாலியல் தொல்லை கொடுத்தால் கூட கெட்ட வார்த்தை பேசி தப்பிக்கலாம் என பாஜக நிர்வாகியும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீராங்கனையுமான ஆலிஷா அப்துல்லா தெரிவித்திருந்த நிலையில் தான் அப்படி சொல்லவே இல்லை என மறுத்துள்ளார். உண்மை என்ன என்பதை பார்ப்போம்.

இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும் பிற மாநிலங்களில் உள்ள இந்த கல்வி நிறுவனங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்தது.

அத்துடன் ஐநா சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை ஆக்க வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் அண்மையில் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு தன் 11 ஆவது அறிக்கையை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.

அறிக்கை

அறிக்கை

அந்த அறிக்கையில் எல்லா மாநிலங்களிலும் ஆங்கிலத்தை விட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இது மெதுவாக இந்தியை திணிக்கும் முயற்சி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது போல் மத்திய அரசு இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வு வினாத்தாள் தயாரிக்கப்படுவதற்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

பாஜகவின் ஒரே நாடு

பாஜகவின் ஒரே நாடு

அது போல் பாஜகவின் ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் போன்ற திட்டங்களை மத்திய அரசு புகுத்த நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த நிலையில்தான் இந்தி கற்பது எதற்காக என்பது குறித்து பாஜக பெண் நிர்வாகி புதியதொரு விளக்கத்தை அளித்துள்ளார்.

பாஜக நிர்வாகி ஆலிஷா

பாஜக நிர்வாகி ஆலிஷா

இதுகுறித்து பாஜக நிர்வாகி ஆலிஷா அப்துல்லா கூறுகையில், தெலுங்கானா மாநிலமான ஹைதராபாத் அல்லது டெல்லியில் உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் செல்லும் போது 4 இளைஞர்கள் வந்து தொல்லை செய்தால் உங்களுக்கு இந்தி தெரிந்தால் உடனே கெட்ட வார்த்தைகளை பேசி தப்பிவிடலாம் என தெரிவித்திருந்தார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி


இவரது இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா இந்தியில் பேசிதானே தனக்கு நடந்த அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒரு கட்டத்தில் தன்னை விட்டுவிடுமாறும் கேட்டிருப்பார். அது போல் ஆசிபா எனும் சிறுமி மிக கொடூரமான முறையில் சில மனித மிருகங்களால் வேட்டையாடப்பட்டதே அப்போது அந்த குழந்தையும் இந்தியில்தானே அலறியிருக்கும் என்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டன.

ஆலிஷா அப்துல்லா மறுப்பு

ஆலிஷா அப்துல்லா மறுப்பு

இந்த நிலையில் இது போன்றதொரு தகவலை தான் கூறவில்லை என ஆலிஷா அப்துல்லா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மக்களுக்கு பொய்யான தகவல்களையும் தவறான மொழிப்பெயர்ப்புகளையும் திமுகவுக்கு சொந்தமான முன்னணி மீடியா வெளியிட்டுள்ளதை நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது.

சூழல்

சூழல்

எந்த சூழ்நிலையாக இருந்தாலும் மொழி என்பது நம்பிக்கையை தரும் என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். ஆனால் நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. வேண்டுமென்றே என் மீது அவதூறு பரப்ப இப்படி செய்துள்ளார்கள். என்னை மட்டம் தட்ட திமுக எத்தனை முயற்சி செய்தாலும் எனக்கு கவலையில்லை. இதெல்லாம் என்னை மேலும் மேலும் வலுப்படுத்தும். பெண்களை குறி வைக்கும் நீங்கள் எல்லாம் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் என ஆலிஷா தெரிவித்துள்ளார்.

வீடியோ ஆதாரங்கள்

வீடியோ ஆதாரங்கள்

ஆனால் வீடியோ ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது ஆலிஷா, இந்தி தெரிந்தால் பாலியல் பலாத்காரம் செய்பவர்களிடம் இருந்து இந்தியில் கெட்ட வார்த்தை பேசி தப்பிக்கலாம் என்றுதான் கூறியிருந்தார். இது போல் அவள் கிளிட்ஸ் எனும் யூடியூப் சேனலுக்கு தமிழில் அவர் பேட்டி அளித்திருந்தார். எனவே தற்போது அவர் ட்விட்டரில் கொடுக்கும் விளக்கம்தான் பொய்யானது என்பது உண்மையை கண்டறியும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Fact Check

வெளியான செய்தி

இந்தி மொழி தெரிந்தால் எந்த சூழலிலும் நாம் தப்பிக் கொள்ளலாம் என்றுதான் நான் கூறியிருந்தேன் என பாஜக நிர்வாகி ஆலிஷா அப்துல்லா தெரிவித்திருந்தார்.

முடிவு

இந்தி தெரிந்தால் டெல்லியில் பலாத்காரம் செய்ய வந்தாலும் கெட்ட வார்த்தையில் பேசி தப்பிவிடலாம் என ஆலிஷா அப்துல்லா பேசியது வீடியோ ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+