ஆ.ராசா பேச்சு.. "***கிட்டு இருங்க".. லட்சுமி ராமகிருஷ்ணன் "இப்படி" பேசுனாங்களா? வெட்டி ஒட்டிய சூர்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: லட்சுமி ராமகிருஷ்ணன் கோபமாக திட்டி பேசியதாக வீடியோ ஒன்றை பாஜகவை சேர்ந்த ஓபிசி பிரிவு தலைவர் திருச்சி சூர்யா பகிர்ந்து உள்ளார். அவர் பகிர்ந்த இந்த வீடியோ பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

திமுக எம்பி ஆ. ராசாவின் பேச்சு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. ஜாதி வேற்றுமை, ஜாதி மோதல், சூத்திரர்கள் கூறி மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக அவர் பேசியது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

அதே சமயம் பாஜகவினர் இந்த பேச்சை கடுமையாக எதிர்த்து உள்ளனர். பாஜக சார்பாக ஆ. ராசா பேச்சுக்கு எதிராக கடுமையான போராட்டங்களும் செய்தன. ஆனால் ஆ ராசாவின் பேச்சுக்கு எதிராக பாஜகவினர் யாரும் வழக்கு தொடுக்கவில்லை.

ஆ. ராசாவை கடுமையாக விமர்சனம் செய்து, அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்ட சில பாஜகவினர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

ஆ. ராசா தனது பேச்சில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்.. இந்துவாக இருக்கும் வரை நாம் பஞ்சமன்.

 இந்து என்றால் என்ன?

இந்து என்றால் என்ன?

இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்கள்.. இந்துவாக இருக்கும் வரை நாம் விபச்சாரியின் மகன். இந்த அவலத்தை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ஆ. ராசா காட்டமாக பேசி இருந்தார். இதற்கு அதன்பின்னர் விளக்கம் அளித்த ஆ. ராசா.. சனாதானம் இல்லை, அரசியலமைப்பு சட்டம்தான் இருக்கிறது என்று பாஜகவினர் கூறுகிறார்கள். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பதவி ஏற்ற ஆளுநர் பிறகு எப்படி சனாதானம் பற்றி பேச முடியும். சனாதானத்தின் முதல் வரியிலேயே, வேதத்தின் அடிப்படையில் வந்த புத்தகம் இது. இது ஆரிய மத புத்தகம் என்கிறது. ஆனால் நாங்கள் திராவிடர்கள். நாங்கள் திராவிட மாடல். இது ஆரிய மதத்தால் கொண்டு வரப்பட்ட மதம். அவர்களுக்குத்தான் அந்த சனாதானம் தர்மம் என்று சொல்கிறார்கள். எங்களுக்கும், அதற்கும் என்ன சம்பந்தம், என்று ஆ. ராசா கேள்வி எழுப்பி உள்ளார்.

 சூர்யா

சூர்யா

இந்த நிலையில்தான் ஆ. ராசாவை லட்சுமி ராமகிருஷ்ணன் கோபமாக திட்டி பேசியதாக வீடியோ ஒன்றை பாஜகவை சேர்ந்த ஓபிசி பிரிவு தலைவர் திருச்சி சூர்யா பகிர்ந்து உள்ளார். அவர் பகிர்ந்து இந்த வீடியோ பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. அதில்.. நாங்கள் அனைத்திற்கும் அறிவுரை சொல்ல முடியாது. நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். ***** கிட்டு இருக்கணும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையை தாக்க கூடாது.

 நம்பிக்கை

நம்பிக்கை

எப்படி நாங்கள் சும்மா இருப்போம். மக்கள் முழித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். நீங்கள் மதக்கலவரத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பின் காலரை தூக்கிக்கொண்டு வீடியோ போடுங்கள்., என்று லட்சுமி ராமகிருஷ்ணன் சொன்னதாக வீடியோ வெளியிட்டுள்ளார். சரியான நேரத்தில் லட்சுமி இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளதாக ஆ. ராசாவை டேக் செய்து சூர்யா விமர்சனம் செய்துள்ளார்.

 என்ன வீடியோ

என்ன வீடியோ

ஆனால் இது வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஆகும். லட்சுமி ராமகிருஷ்ணன் ஆ. ராசா பற்றி இதில் எதுவுமே பேசவில்லை. அதோடு இது இரண்டு வருட பழைய வீடியோ ஆகும். கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் சார்பாக முருகர் வழிபாடு பற்றி வெளியிட்ட வீடியோவை இவர் விமர்சனம் செய்து பேசி இருந்தார். அந்த பழைய ராமகிருஷ்ணன் வீடியோவை தற்போது புதிய வீடியோ போல பாஜக சூர்யா பகிர்ந்து உள்ளார். இது பழைய வீடியோ என்று நெட்டிசன்கள் பலர் சூர்யாவிற்கு பதில் சொல்லியும் அவர் இந்த வீடியோவை டெலிட் செய்யவில்லை.

Fact Check

வெளியான செய்தி

திமுக எம்பி ஆ. ராசாவை லட்சுமி ராமகிருஷ்ணன் கோபமாக திட்டி பேசியதாக வீடியோ ஒன்றை பாஜகவை சேர்ந்த ஓபிசி பிரிவு தலைவர் திருச்சி சூர்யா பகிர்ந்து உள்ளார்.

முடிவு

ஆனால் இது வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஆகும். லட்சுமி ராமகிருஷ்ணன் ஆ. ராசா பற்றி இதில் எதுவுமே பேசவில்லை

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+