FACT CHECK: செல்போன் செயலிகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு திட்டமா? உண்மை என்ன?
ஆண்ட்ராய்டு போன்களில் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகளை நீக்கும் வசதி கொடுக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் செயல்படுத்தப்பட இருப்பதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லி: ஸ்மார்ட் போன்களில் புதிய பாதுகாப்பு சோதனையை இந்திய அரசு அறிமுகப்படுத்த இருப்பதாகவும் ஆண்ட்ராய்டு போன்களில் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகளை நீக்கும் வசதி கொடுக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் செயல்படுத்தப்பட இருப்பதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது தவறானது என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சி பெற்றுள்ளது. நாட்டில் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவர் கைகளிலும் செல்போன் தவழ்கிறது.
அதுவும் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்த பிறகு மக்களின் தகவல் பரிமாற்றங்கள் வளர்ச்சி அடைந்துவிட்டது. வெறும் பேசுவதற்கு மட்டும் பயன்பட்ட செல்போன் தற்போது பல சேவைகளையும் வழங்கி வருகிறது.

இன்ஸ்டால் செய்யும் செயலிகளை
இதனால், மக்களின் தனிப்பட்ட தரவுகளும் ஆபத்துக்குள்ளாகியிருக்கின்றன. இதனால், மத்திய அரசும் செல்போன் உற்பத்தி நிறுவனங்களுடன் இது தொடர்பாக பேசி பல்வேறு கட்டுப்பாடுகளும் விதித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரபல சர்வதேச ஊடகமான ராய்ட்டர்சில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. அதில், ஸ்மார்ட் போன்களில் புதிய பாதுகாப்பு சோதனையை இந்தியா அரசு அறிமுகப்படுத்த இருப்பதாகவும் ஆண்ட்ராய்டு போன்களில் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யும் செயலிகளையும் நீக்கும் வசதி கொடுக்க வேண்டும்.

மத்திய அரசு புதிய விதிகளை
மென்பொருள் அப்டேடின் போது கட்டாய ஆய்வு போன்ற புதிய பாதுகாப்பு விதிகளை கொண்டு வர இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. தற்போது சந்தையில் முன்னணி வகிக்கும் ஜியோமி, சம்சங், அப்பிள் போன்ற போன்களில் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகள் உள்ளது. இதை வாடிக்கையாளர்கள் விரும்பினால் கூட அன் இன்ஸ்டால் செய்ய முடியாது. எனவே தகவல் கசிவு போன்றவற்றில் இருந்து பயனர்களை பாதுகாக்க மத்திய அரசு புதிய விதிகளை வகுத்துள்ளது என்று அந்த ராய்டர்ஸ் செய்தியில் வெளியாகி இருந்தது.

பிஐபி விளக்கம்
இந்த நிலையில், இந்த தகவலில் உண்மையில்லை தவறானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான தகவல்களை சுட்டிக்கட்டி மக்களுக்கு உண்மையான தகவல்களை உறுதி செய்யும் மத்திய அரசின் பிஐபி (PIB) தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. இது தொடர்பாக பிஐபி ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது
ஸ்மார்ட் போன்களுக்கான புதிய பாதுகாப்பு கெடுபிடிகளை இந்தியா பரிசோதித்து வருகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலில் உண்மையில்லை. இது தவறானது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கூறியதுபடி, மொபைல் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தொடர்பாக நடைபெற்று வரும் ஆலோசனை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மத்திய அரசு புதிய பாதுகாப்பு விதிகளை வகுத்து வருகிறது. அதில், ஸ்மார்ட் போன்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகளுக்கு சில கட்டுப்பாடுகளை கொண்டு வர மத்திய அரசு திட்டம்.
முடிவு
இதில் உண்மையில்லை. மொபைல் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தொடர்பாக நடைபெற்று வரும் ஆலோசனை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
ரேட்டிங்
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications