Fact Check: ஸ்டாலினுக்காக நீண்ட நேரம் சாலையிலேயே காத்திருந்த திருமா? தீயாக பரவும் வீடியோ! உண்மை என்ன
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்காக விசிக தலைவர் திருமாவளவன் சாலையில் நீண்ட நேரம் காத்திருந்ததாகச் சொல்லி இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் நெட்டிசன்கள் சிலர் திருமாவளவன் இந்த நிலைமையை என்ற ரேஞ்சில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இது உண்மை தானா.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் இணையதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. சில நேரம் பொய்யான மற்றும் உண்மைக்கு மாறான தகவல்கள் பரவி வருகிறது.

திருமாவளவன்: அப்படித்தான் இப்போது விசிக தலைவர் திருமாவளவன் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது. சத்யமே ஜெயம், போலிடிக்கல் நியூஸ் உள்ளிட்ட ட்விட்டர் பக்கங்கள் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளன. அதில் திருமாவளவன் சாலையோரம் தனது செல்போனை பார்த்தபடி சில நொடிகள் நிற்கிறார். பிறகு அங்கே கான்வாய் வாகனங்கள் வரும் நிலையில், அதிலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்து இறங்குகிறார். அவரை திருமாவளவன் வரவேற்கச் செல்வது போல அந்த வீடியோ முடிகிறது.
பின்னணியில் பழைய சினிமா பாடல் ஒன்றும் கேட்கிறது. அந்த வீடியோவில், "முழு சந்திரமுகியாகிவிட்ட திருமாவளவனைப் பாருங்கள்... எதிரிக்குக் கூட வரக்கூடாது இந்த நிலைமை!! திமுக வட்டச் செயலாளர் போல் நடுரோட்டில் நின்று முதல்வருக்கு முறைவாசல் செய்யும் விசிக கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்" என்றும் பதிவிடப்பட்டு இருந்தது.
இணையத்தில் பரவும் வீடியோ: இந்த வீடியோவை இப்போது இணையத்தில் பலரும் பரப்பி வருகிறார்கள். இது உண்மைதானா.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து நாம் தேடுகையில், இந்த முழு வீடியோவை நாம் திருமாவளவனின் பேஸ்புக் பக்கத்திலேயே பார்க்க முடிகிறது. அது பேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது.
கடந்த டிச. 12ம் தேதி வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நடந்த நிலையில், அப்போது தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட பல்வேறு வீடியோக்களையும் திருமாவளவன் பேஸ்புக் பக்கத்தில் பார்க்க முடிகிறது. அதில் முதல் வீடியோவில் தி.க தலைவர் கி.வீரமணியை சந்தித்து திருமாவளவன் உரையாடுகிறார். அதைத் தொடர்ந்து விழா நடந்த இடத்திற்குச் செல்லும் திருமாவளவனுக்கு அமைச்சர் எ.வ.வேலு பொன்னாடை அணிவித்து வரவேற்கிறார்.
உண்மை என்ன: அதன் பின்னரே இந்த சம்பவம் வருகிறது. அதில் திருமாவளவன் மட்டுமின்றி கி.வீரமணி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அங்கு நிற்பதைப் பார்க்க முடிகிறது. அதில் திருமாவளவன் சில நொடிகள் மட்டுமே காத்திருந்த நிலையில், அதற்குள் கான்வாய் வருகிறது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வருகிறார்கள்.. அங்கு ஸ்டாலின் மற்றும் பினராயி விஜயனை திருமாவளவன் வரவேற்கிறார். இந்த குறிப்பிட்ட பகுதியை மட்டுமே இணையத்தில் பரப்புகிறார்கள்.
ஆனால், அதன் பின்னரும் கூட பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது. அப்போது பெரியார் சிலைக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தும் போது, பின்னால் நின்றிருந்த திருமாவளவனை முதல்வர் ஸ்டாலின் தான் அழைத்து மலர்த் தூவுங்கள் என்று சொல்கிறார். போட்டோ எடுக்கும் போதும் கூட பின்னல் இருந்த திருமாவளவன் கையைப் பிடித்து முதல்வர் ஸ்டாலின் தான் அருகே அழைத்து இருப்பார். அவை அனைத்தும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.
பின்னணி: இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, நெட்டிசன்கள் சிலர் குறிப்பிடுவது போல ஸ்டாலினை வரவேற்க திருமாவளவன் மக்களோடு மக்களாக நீண்ட நேரம் காத்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. வைக்கம் நூற்றாண்டு நிகழ்ச்சிக்கு முன்னதாக வந்துவிட்ட திருமாவளவன், இரு மாநில முதல்வர்கள் வர வேண்டும் என்பதற்காக அங்கு சில நொடிகள் மட்டுமே காத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

Fact Check
வெளியான செய்தி
முதல்வர் ஸ்டாலினை வரவேற்க மக்களோடு மக்களாக விசிக தலைவர் திருமாவளவன் நீண்ட நேரம் சாலையில் காத்திருந்ததாக வீடியோ ஒன்று பரவுகிறது.
முடிவு
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நாம் செக் செய்த போது. திருமாவளவன் நீண்ட நேரம் ஸ்டாலினுக்காக காத்திருக்கவில்லை என்பது தெரிகிறது. இரு மாநில முதல்வர்கள் வர சில நொடிகள் மட்டுமே காத்திருப்பத
ரேட்டிங்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications