Fact check: டிரம்ப்பே அசந்து போனாரா? வெற்றி உரையின்போது “மோடி மோடி” என கோஷம் எழுந்ததா? உண்மை என்ன?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஃப்ளோரிடாவில் டிரம்ப் தனது வெற்றி உரையை நிகழ்த்தியபோது, "மோடி.. மோடி" என பலர் கோஷமிட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது உண்மையா என்பதைப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸ் தோல்வியை சந்தித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் 291 எலக்டோரல் வாக்குகளை பெற்று 2-வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

டிரம்ப் வெற்றி உரை: வெற்றியைத் தொடர்ந்து, ஃப்ளோரிடாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றினார் டொனால்ட் டிரம்ப். அப்போது பேசிய அவர், "இது அமெரிக்காவின் பொற்காலம். நாங்கள் மக்களை நிச்சயம் பெருமை கொள்ள வைப்போம். எங்களது பணி மற்றும் செயல்பாடு அப்படி இருக்கும். துணை அதிபராக தேர்வாகி உள்ள ஜேம்ஸ் டேவிட் வான்ஸுக்கு எனது வாழ்த்துகள். அவர் அந்த பொறுப்புக்கு சரியான தேர்வு. நாட்டின் முதல் குடிமகள் ஆகவுள்ள என் மனைவி மெலானியாவுக்கு வாழ்த்துகள்.
யாரும் செய்யாததை நாங்கள் செய்வோம். ஆட்சி பொறுப்பை ஏற்றதும் வரிகளை குறைப்போம். நம் எல்லைகளை வலுவாக்குவோம். ராணுவத்துக்கு பலம் சேர்ப்போம். நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமை மற்றும் சுதந்திரத்தை அளிப்போம். நாம் இணைந்து இந்த இலக்கை அடைவோம். நாட்டின் எதிர்காலத்தை வளமாக்குவோம். அதனை பாதுகாப்போம்." என ட்ரம்ப் தெரிவித்தார்.
பரவும் செய்தி: டொனால்ட் ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது ஆதரவாளர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர். இந்நிலையில், ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது, "மோடி.. மோடி" என மக்கள் ஆரவாரம் செய்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. "டிரம்ப் நாட்டில் மோடியின் ஆதிக்கம்" என கேப்ஷன் இட்டு ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ அதிகமானோரால் பகிரப்பட்டுள்ளது.
உண்மை என்ன?: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, தனது நண்பரும் அரசியல்வாதியும், வழக்கறிஞருமான ராபர்ட் கென்னடி ஜூனியரை குறிப்பிட்டுப் பேசினார். அப்போது அங்கிருந்த கூட்டம் 'பாபி' என்று கோஷமிடத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து டிரம்ப், "அவர் ஒரு சிறந்த மனிதர், உண்மையில் சில விஷயங்களைச் செய்ய விரும்புகிறார், நாங்கள் அவரைச் செய்ய அனுமதிப்போம்" என்று கூறினார்.
டொனால்ட் டிரம்ப் ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரை 'பாபி' என்று குறிப்பிட்டார். அங்கிருந்த கூட்டத்தினரும், "பாபி.. பாபி" என்றே கோஷமிட்டனர். "பாபி.. பாபி" என அங்கிருந்தவர்கள் கோஷமிட்ட வீடியோவை பார்த்த சிலர், "மோடி.. மோடி" என கோஷம் போட்டதாக புரிந்துகொண்டு, அந்த வீடியோவை பகிர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர்: ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், 'பாபி' என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் மருமகன் தான் இவர். அமெரிக்காவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலும் செனட்டருமான ராபர்ட் எஃப். கென்னடியின் மகன். அரசியல்வாதியும், வழக்கறிஞருமான ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர், ட்ரம்பை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஆற்றிய உரையின் போது 'மோடி.. மோடி' என கோஷங்கள் எழுப்பப்பட்டதாக ஒரு வீடியோவுடன் தகவல் பரவியது.
முடிவு
ட்ரம்பின் நண்பரான ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியரை குறிப்பிட்டு, கூட்டத்தினர்'பாபி.. பாபி' என்று கோஷமிட்டனர். 'மோடி மோடி' என கோஷமிடவில்லை.
ரேட்டிங்
-
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications