Fact check: 2025-ல் வங்காளதேசத்தை விட இந்தியா ஏழை நாடாகும்..ஐஎம்எப் கூறியதாக பரவும் தகவல் உண்மையா?
டெல்லி: சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார கண்ணோட்டத்தின் அறிக்கையின் படி, 2025 ஆம் ஆண்டில் இந்தியா வங்காளாதேசத்தை விட ஏழ்மை நாடாக மாறும். இந்தியாவின் எதிர்காலத்தை மோடி ஆபத்தில் தள்ளியிருக்கிறார் என்று ஐ.எம்.எப் கூறியதாக தகவல் பரவியது. இந்த நிலையில் மத்திய அரசின் பிஐபி இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் உலகாளவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரதன்மையை ஊக்குவிக்கும் பணியை செய்கிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடுகள் மீள்வதற்கான கடன் உதவி அளிப்பது போன்ற நடவடிக்கைகளில் சர்வதேச நாணய நிதியம் செய்து வருகிறது.

இந்தியா ஏழ்மை நாடாக மாறுமா?
இது தவிர ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்த அளவில் இருக்கும் என்பதையும் கணக்கிட்டு ஐ.எம்.எப் பட்டியல் வெளியிடுவதுண்டு. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதில், 2025 ஆம் ஆண்டு இந்தியா, வங்காளதேசத்தை விட ஏழ்மை நாடு ஆகும் என்றும் இனி இந்தியா வளரும் நாடு கிடையாது என ஐ.எம்.எப் கூறியதாக செய்தி வெளியாகியிருந்தது.

மோடி ஆபத்தில் தள்ளியிருக்கிறார்..
இது தொடர்பான வெளியான செய்தியில், சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார கண்ணோட்டத்தின் அறிக்கையின் படி, 2025 ஆம் ஆண்டில் இந்தியா வங்காளாதேசத்தை விட ஏழ்மை நாடாக மாறும். இதுவரை இப்படி ஒன்று நடந்தது இல்லை. இந்தியாவின் எதிர்காலத்தை மோடி ஆபத்தில் தள்ளியிருக்கிறார். இந்தியா இப்போது வளரும் நாடு இல்லை என்ற செய்திகள் அடங்கிய ஒரு படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவியது.

பிஐபி விளக்கம்
ஐ.எம்.எப் பெயரில் வெளியான இந்த தகவல் மக்களை குழப்பும் வகையில் இருந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசின் பிஐபி (PIB) விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக பிஐபி ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், " உலக பொருளாதார கண்ணோட்டம் என்ற பெயரில் சர்வதேச நாணய நிதியம் இதுபோன்ற எந்த தகவலையும் கூறவில்லை. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.3 சதவிகிதமாக 2023-ல் இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்துள்ளது.

முற்றிலும் தவறான தகவல்
இதன்படி ஐ.எம்.எப் பெயரில் சமூக வலைத்தளங்களில் பரவிய அந்த செய்தி முற்றிலும் தவறான தகவல் ஆகும். 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா 15 சதவிகித பங்களிப்புடன் பிரகாசமான இடத்தில் இருப்பதாகவும் பிஐபி விளக்கம் அளித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
2025 ஆம் ஆண்டு வங்காளதேசத்தை விட இந்தியா ஏழ்மை நாடாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்ததாக செய்தி பரவியது.
முடிவு
சர்வதேச நாணய நிதியம் அதுபோன்ற எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. எனவே இது முற்றிலும் தவறான தகவல் ஆகும்.
ரேட்டிங்
-
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு












Click it and Unblock the Notifications